For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல இப்படி நீர்க்கோர்த்தா என்ன பண்ணணும்? என்ன சாப்பிட்டா உடனே கரையும்?

நாங்கள் இங்கு சில விஷயங்களைப் பரிந்துரை செய்துள்ளோம். அதை முறைப்படி செய்தால் உடலில் தேவையில்லாத அழுக்குகள் நீங்கி, நீர்க்கோர்த்தல், வீக்கம் போன்ற பிசை்னைகள் குறையும்.

|

நீர்க்கோர்த்தல் என்பது நம்முடைய உடலுக்குத் தேவையான சில அடிப்படைச் சத்துக்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுகின்ற போது, உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்களால், உடலில் நீர்க்கோர்த்தல் உண்டாகிறது. அதனால் கை, கால், பாதங்கள் முகம் மிக அதிகமாக வீங்கிப் போய்விடுகிறது.

home remedies for get rid of water retention

அப்படி வீக்கம் உண்டாவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு தான் என்ன என்று இங்கே தெரிந்து கொள்வோம். இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நீர்க்கோர்வை வயதான பின் தான் வரும் என்பதெல்லாம் கிடையாது. எந்த வயதிலுமு் வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து பற்றாக்குறை

ஊட்டச்சத்து பற்றாக்குறை

வைட்டமின், மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பற்றாக் குறையினால், நீர்க்கோர்வை உண்டாகிறது. இந்த நீர்க்கோர்வை மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்காக என்னென்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

புரதச்சத்து

புரதச்சத்து

உங்களுடைய உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். புரதம் நிறைந் உணவுகள் உங்களுடைய உடலை புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும். அதோடு மட்டுமல்ல, உடலில் உள்ள தேவையற்ற நீரை உறிஞ்சுகின்ற தன்மை புரத உணவுகளில் அதிகம் உண்டு.

மக்னீசியம்

மக்னீசியம்

நம்முடைய உடலுக்குத் தேவையான மிக முக்கிய மினரல்களுள் ஒன்று தான் மக்னீசியம். மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் நீர்க்கோவை பிரச்னை சரியாகிவிடும். குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இருக்கும் வலி, உடல் வீக்கம் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும். வழக்கமாக மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இந்த பிரச்னைகளைத் தீர்க்கும். டார்க் சாக்லேட், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றில் இந்த மக்னீசியச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

பொட்டாசியம்

பொட்டாசியம்

அதிக அளவில் வாழைப்பழங்களைச் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் மிக அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. இது உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத நீர்ச்சத்துக்களைக் குறைக்கும் ஆற்றல் வாழைப் பழத்துக்கு உண்டு. பொட்டாசியம் உடலில் உள்ள தேவையற்ற நீரை இரண்டு விதங்களில் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அந்த இரண்டு முறைகள் என்ன தெரியுமா? ஒன்று நமக்கு உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளக்கூடிய சோடியத்தின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது. மற்றொன்று, அதிகப்படியான சிறுநீரை சரியான இடைவெளியில் வெளியேற்றிக் கொண்டே இருக்கும். வாழைப்பழம் மட்டுமல்லாது, அவகேடோ மற்றும் தக்காளியையும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சோடியம்

சோடியம்

உடலுக்கு உள்ளேயும் வெளிப்புறத்தில் உள்ள சருமச் செல்களிலும் உள்ள நீரின் அளவினை சரியான அளவில் முறைப்படுத்துகிறது. ஆனால் சோடியம் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அது உடலில் உப்பின் அளவினை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தான் உடலில் நீர்க்கோர்வை உடலில் ஏற்படும். அதனால் உடலில் நீர்க்கோர்வை உண்டாகாமல் இருக்க வேண்டுமென்றால், உணவில்சுாடியத்தின் அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்

தண்ணீர்

உங்களுடைய உடலில் நீர்க்கோர்வை உண்டாவதற்கு உடலுக்குத் தேவையான நீரின் அளவும் மிக முக்கியம். தினமும் நம்முடைய உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவு குறைந்தாலும் கூட இந்த பிரச்சினைகள் உண்டாகும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். உடலில் நீர்க்கோர்வை உண்டாகிற பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health tips
English summary

Know what are the ways to get rid of water retention

here we suggest some important point about Know what are the ways to get rid of water retention.
Story first published: Friday, September 14, 2018, 17:11 [IST]
Desktop Bottom Promotion