For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு அடிக்கடி கண் சிவந்து போகிறதா?... காரணமென்ன?... எப்படி சரிசெய்யலாம்?

காலையில் தூங்கி விழிக்கும்போது சில நேரம் கண்கள் சிவப்பாக காட்சியளிக்கும். கண்களில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் அல்லது எரிச்சல் இதற்கான காரணமாக இருக்கலாம்.

|

காலையில் தூங்கி விழிக்கும்போது சில நேரம் கண்கள் சிவப்பாக காட்சியளிக்கும். கண்களில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் அல்லது எரிச்சல் இதற்கான காரணமாக இருக்கலாம்.

health

வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கூட கண்கள் சிவந்து காணப்படலாம். இப்படி கண்கள் சிவந்து போவதற்கான காரணம் மற்றும் இதற்கான இயற்கை தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்கள் சிவந்து போக என்ன காரணம்?

கண்கள் சிவந்து போக என்ன காரணம்?

கண்கள் சிவக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கண்களின் மேற்பரப்பில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் ஒரு பொதுவான முக்கிய காரணியாகும். இந்த வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றுள் சில ,

சூரிய ஒளியின் தாக்கம்

வறண்ட காற்று

தூசு

ஒவ்வாமை

பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகள்

இருமல்

காய்ச்சல் அல்லது சளி

தொடர்ச்சியான இருமல் அல்லது கண் அழுத்தம் சப்கஞ்சன்க்டிவல் ஹேமாரேஜ் என்ற நிலையை உண்டாக்குகிறது. இதனால் கண்களில் சிவப்பு நிற திட்டுகள் தோன்றுகிறது. பொதுவாக இந்த நிலைமை சீராக பத்து நாட்கள் ஆகும். கண் வலி, கண்களில் நீர் வெளியேற்றம், பார்வையில் மாறுபாடு போன்ற கூடுதல் அறிகுறிகள் , கண்களின் மற்ற பாகங்களில் ஏற்படும் தொற்று போன்றவை சிவந்த கண்களால் ஏற்படும் விளைவுகளாகும்.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

வீக்கமான கண் இமை ( கண் இமை அழற்சி )

சவ்வுகளின் வீக்கம் உள்ள கண்களின் மேற்பரப்பு (கான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண்)

கார்னியல் அல்சர் எனப்படும் கண்களை மூடிய புண்கள்.

உவேடிஸ் எனப்படும் சார்நயம் வீக்கம்

கண்கள் சிவக்க வேறு சில காரணங்களும் உண்டு, அவை,

கண்களில் ஏற்பட்ட காயம்

அதிர்ச்சி

அதிர்ச்சி

கண்களில் அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக ஏற்படும் கிளௌகோமா என்னும் கண் அழுத்த நோய்

விழி வெண்படலத்தில் லென்ஸ் பயன்பாடு காரணமாக ஏற்படும் கீறல்.

இரத்தப்போக்கு பிரச்சினைகள்

எந்த நோயாக இருந்தாலும் அதற்கான தீர்வுகள் மிகவும் முக்கியம். அதுவும் விரைவாக மற்றும் இயற்கையாக இருக்கும் தீர்வுகளை முயற்சிப்பது நல்லது. ஆகவே இந்த சிவந்த கண்களுக்கான சில இயற்கை தீர்வுகள் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதனை முயற்சித்து இந்த பாதிப்பில் இருந்து வெளிவரலாம்.

சரியாக்குவது எப்படி ?

குளிர் ஒத்தடம் :

குளிர் ஒத்தடம் :

தேவையான பொருட்கள் :

ஒரு ஐஸ் பேக்

செய்முறை

பாதிக்கப்பட்ட கண்ணில் இந்த ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்.

ஒரு நிமிடம் இந்த ஐஸ் பேக் கண்ணில் இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடவும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை இதனை தொடர்ந்து செய்து வரவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படி செய்வதால் விரைவில் கண் சிவப்பு காணமல் போகும்.

ஐஸ் பேக் ஏன் ?

கண்களின் வீக்கம் மற்றும் அழற்சியைப் போக்க இந்த குளிர் ஒத்தடம் சிறந்த சிகிச்சையாகும். பாதிக்கப்பட்ட கண்களின் இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்துவதில் அவை உதவுகின்றன, அவை சிவந்த நிலையை குறைக்க உதவுகின்றன

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெள்ளரிக்காய்

செய்முறை:

பிரிட்ஜில் வைக்கப்பட்ட வெள்ளரிக்காயை எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.

ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துண்டு வெள்ளரிக்காயை வைக்கவும்.

அரை மணி நேரம் அப்படியே விடவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் ஏன் ?

சிவந்த கண்களைப் போக்க வெள்ளரிக்காய் ஒரு சிறந்த தீர்வாகும். வெள்ளரிகாயில் குளிர்ச்சியான மற்றும் மிருதுவான தன்மை உள்ளதால், இரத்த நாளங்கள் சுருங்கி, இந்த நிலைக்கான சிறந்த தீர்வைத் தர உதவுகிறது.

பன்னீர்

பன்னீர்

தேவையான பொருட்கள்:

பன்னீர் தேவைகேற்ப

காட்டன் பஞ்சு சிறிதளவு

செய்முறை:

பஞ்சை பன்னீரில் நனைக்கவும்.

நனைத்த பஞ்சை கண்களின் மேல் பகுதியில் வைக்கவும்.

15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

தினமும் இரண்டு முறை இதனை செய்யலாம்.

பன்னீர் ஏன்

பன்னீரில் உள்ள மிருதுவான தன்மை மற்றும் நெகிழ்வு தன்மை, கண்களில் நல்ல தீர்வைப் பெற உதவுகிறது. பன்னீரின் அழற்சி எதிர்ப்பு தன்மை, வீக்கத்தை குறைத்து, எரிச்சலைப் போக்குகிறது.

டீ பேக்

டீ பேக்

தேவையான பொருட்கள்:

ஏற்கனவே பயன்படுத்திய 2 டீ பேக்

செய்முறை :

2 டீ பேக் எடுத்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து அவற்றை பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுக்கவும்.

பிறகு அதனை உங்கள் கண்கள் மேல் வைக்கவும்.

15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு முறை இதனை செய்யவும்.

ஏன் டீ பேக் பயன்படுத்த வேண்டும் ?

கண்களின் சிவப்பு நிறத்தை போக்கி இதமான உணர்வைத் தர உதவுவது டீயில் உள்ள டானின். டானின் அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.

தேன் மற்றும் பால் :

தேன் மற்றும் பால் :

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் பால்

பஞ்சு

செய்முறை:

ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை ஒன்றாகக் கலக்கவும்.

பஞ்சை இந்த கலவையில் நனைத்து கண்களில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து கண்களை நீரால் கழுவவும்.

தினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம்.

ஏன் பால் மற்றும் தேன் பயன்படுத்த வேண்டும்?

பால் மற்றும் தேன் ஆகிய இரண்டிற்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் இதமான தன்மை உள்ளது. இதனால் இந்த எரிச்சல் விரவயாக குறைகிறது.

செவ்வந்தி பூ டீ :

செவ்வந்தி பூ டீ :

தேவையான பொருட்கள் :

ஒரு ஸ்பூன் செவ்வந்தி பூ டீ தூள்

1 கப் வெந்நீர்

பஞ்சு

செய்முறை:

ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் டீ தூளை சேர்க்கவும்.

5 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டவும்.

டீ சூடு ஓரளவு குறைந்தவுடன் பிரிட்ஜில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் இந்த தேநீர் பிரிட்ஜில் இருக்கட்டும்.

ஒரு மணி நேரம் கழித்து, அந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து கண்களைக் கழுவவும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம்.

செவ்வந்தி பூ டீ ஏன் பயன்படுத்த வேண்டும்?

சிவந்த கண்களின் சிகிச்சைக்கு செவ்வந்தி பூ டீ மிகச் சிறந்த நன்மைகளைச் செய்கிறது. இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, கண்களில் உள்ள வீக்கத்தைக் குறைத்து அழற்சியைப் போக்குகிறது.

கற்றாழை :

கற்றாழை :

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல்

தண்ணீர்

பஞ்சு

செய்முறை:

கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தண்ணீர் விட்டு ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

ஒரு மணி நேரம் இந்த கலவையை பிரிட்ஜில் வைக்கவும்.

பிறகு அந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும்.

அரை மணி நேரம் அப்படி விடவும்.

பிறகு நீரால் கண்களைக் கழுவவும்.

தினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம்.

ஏன் கற்றாழை பயன்படுத்த வேண்டும்?

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மை உள்ளது. இது கண்களை இதமாக்கி எரிச்சலைப் போக்குகிறது.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

தேவையான பொருட்கள்:

2 துளிகள் 100% ஆர்கானிக் விளக்கெண்ணெய்

செய்முறை:

இரண்டு கண்களிலும் ஒவ்வொரு சொட்டு விளக்கெண்ணெய்யை விடவும்.

கண்களை சில நொடிகள் சிமிட்டிக் கொண்டே இருக்கவும்.

தினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம். இதனால் கண்களின் சிவப்பு நிறம் விரைந்து குணமடையும்.

விளக்கெண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்?

விளக்கெண்ணெய் ரிசினோலிக் அமிலம் கொண்டது. இந்த மைலம் வலுவான அழற்சி எதிர்ப்பி ஆகும். இது கண்களை ஈரப்பதத்துடன் வைக்க உதவுவதுடன், அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்

1 கப் தண்ணீர்

பஞ்சு

செய்முறை:

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

இந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களில் மேல் பகுதியில் வைக்கவும்.

அரை மணி நேரம் அப்படியே விடவும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

சிவந்த கண்களின் சிகிச்சைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது. இதில் அசிடிக் அமிலம் உள்ளது. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை, இயற்கையாகவே கண்களில் உள்ள சிவந்த நிறத்தைக் குறைக்கிறது, மற்றும் மேலும் கண்கள் எரிச்சல் அடைவதைத் தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேவையான பொருட்கள்:

2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.

கண்களின் உட்பகுதி ஓரத்தில் ஒரு துளி தேங்காய் எண்ணெய்யை விடவும்.

கண்களை சிமிட்டினால் அதிகம் உள்ள எண்ணெய் வெளியில் கசிந்து விடும்.

சில வாரங்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த முறையை பின்பற்றவும்.

தேங்காய் எண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்?

தேங்காய் எண்ணெய் என்பது நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களால் ஆனது, இது மிகவும் ஈரப்பதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைக் கொண்டது. கண்களை ஈரப்பதத்துடன் வைத்து வீக்கத்தைக் குறைக்கிறது.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் க்ரீன் டீ

1 கப் வெந்நீர்

பஞ்சு

செய்முறை:

ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும்.

நன்றாகக் கலந்து வடிகட்டி கொள்ளவும்.

இந்த டீ சற்று குளிர்ந்தவுடன், இதனை பிரிட்ஜில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் இந்த டீயை பிரிட்ஜில் வைக்கவும்.

பஞ்சை இந்த கலவையில் நனைத்து கண்களில் வைக்கவும்.

அரை மணி நேரம் அப்படியே விடவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்யவும்.

க்ரீன் டீ ஏன் பயன்படுத்த வேண்டும்?

க்ரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் வலிமையான அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை கொண்டுள்ளது. இதனால் எரிச்சல் மறைந்து சிவப்பு மாறுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

தேவையான பொருட்கள்

2-3 துளிகள் எலுமிச்சை சாறு

சுத்தமான நீர்

கண் கப்

கண் கப்பில் மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து , தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு 20-30 நொடிகள் கண்களைக் கழுவவும்.

தினமும் ஒரு முறை இதனைச் செய்யலாம்.

எலுமிச்சை ஏன் பயன்படுத்த வேண்டும்?

எலுமிச்சை சாறில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிகளைப் போக்கும் தன்மை உள்ளது. ஆகவே இவை கண்களுக்கு அற்புதத்தை செய்கிறது. சிவந்த கண்களில் உண்டான அழற்சியைப் போக்க எலுமிச்சை உதவுகிறது. மேலும் தோற்று ஏற்படாமல் காக்க உதவுகிறது.

டீ ட்ரீ எண்ணெய்

டீ ட்ரீ எண்ணெய்

தேவையான பொருட்கள்

டீ ட்ரீ எண்ணெய்

செய்முறை

டீ ட்ரீ எண்ணெய் 2 துளிகள்

4 கப் வெந்நீர்

ஒரு பெரிய கிண்ணம்

ஒரு சுத்தமான துண்டு அல்லது ஷீட்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் 4 கப் வெந்நீரை ஊற்றிக் கொள்ளவும்.

இரண்டு அல்லது மூன்று துளி டீ ட்ரீ எண்ணெய்யை இதில் சேர்க்கவும்.

அந்த கிண்ணத்திற்கு மேல் உங்கள் முகம் படும்படி குனிந்து கொள்ளவும்.

அதில் இருந்து வெளிவரும் ஆவி வெளியில் செல்லாதவாறு, துண்டால் மறைத்துக் கொள்ளவும். நீரில் இருந்து வெளிவரும் ஆவி கண்களில் படும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை செய்யவும்.

டீ ட்ரீ எண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்?

டீ ட்ரீ எண்ணெய் அழற்சி எதிர்ப்பி மற்றும் கிருமி நாசியாகும். பல்வேறு சரும கோளாறுகளில் இந்த எண்ணெய் சிறந்த முறையில் தீர்வளிக்கிறது. இந்த குணங்கள், கண்களில் உள்ள வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை மாற்ற உதவுகிறது , மேலும் கண்களில் ஏற்பட்ட தொற்றை போக்க நல்ல தீர்வைத் தருகிறது.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

தேவையான பொருட்கள்

2-3 துளிகள் லாவெண்டர் எண்ணெய்

4 கப் வெந்நீர்

ஒரு பெரிய கிண்ணம்

ஒரு துண்டு அல்லது ஷீட்

ஒரு பெரிய கிண்ணத்தில் 4 கப் வெந்நீரை சேர்க்கவும்.

இந்த நீரில் இரண்டு அல்லது மூன்று துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்க்கவும்.

இப்போது நீரில் இருந்து வெளிவரும் ஆவியில் உங்கள் கண்களில் படும்படி குனிந்து கொள்ளவும்.

உங்கள் தலையை சுற்றி ஒரு துண்டால் மூடிக் கொள்ளவும்.

இந்த ஆவியை 15 நிமிடங்கள் கண்களில் படும்படி பார்த்துக் கொள்ளவும்.

ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யலாம்.

லாவெண்டர் எண்ணெய் கண்களில் உள்ள வீக்கத்தைக் குரைக்கிறது. இதில் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது . ஆகவே தொடரை எதிர்த்து போராடி, கண்களின் சிவப்பு நிறத்தை மாற்றுகிறது.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

தேவையான பொருட்கள்

நறுக்கிய உருளைக்கிழங்கு

செய்முறை

உருளைக்கிழங்கை தோல் உரித்து பிரிட்ஜில் சில நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு அதனை எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய துண்டுகளை ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொன்றை வைக்கவும்.

அரை மணி நேரம் அப்படியே விடவும்.

தினமும் இரண்டு முறை இதனை செய்யலாம்.

உருளைக்கிழங்கை ஏன் பயன்படுத்த வேண்டும்?

உருளைக்கிழங்கில் உள்ள கட்டுப்படுத்தும் தன்மை, கண்களை சுற்றியள்ள பகுதிகளில் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. கண்களின் எரிச்சலைப் போக்கி இதமான உணர்வைத் தருகிறது.

வைட்டமின்

வைட்டமின்

உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ, சி, ஈ , பி 2 (ரிபோப்லேவின்), பி 12, போன்றவை மிகவும் ஏற்றது . கண்களில் உண்டான சிவப்பு நிறம் மறைவதற்கும் மீண்டும் இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும் இந்த வைட்டமின்கள் உதவுகிறது.

பழங்கள், பச்சை காய்கறிகள், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பெர்ரி, பால், தயிர், மீன் , முட்டை பாதாம் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உங்களுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கின்றன.

மேலே கூறிய இந்த தீர்வுகளை பின்பற்றுவதால் உங்கள் கண்களில் தோன்றியுள்ள சிவப்பு நிறம் மாறுகிறது. மறுபடி இந்த நிலைமை வாராமல் இருப்பதற்கு சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அதனை இப்போது பார்க்கலாம்.

தடுக்கும் குறிப்புகள்

தடுக்கும் குறிப்புகள்

கண் தொற்று உள்ளவர்களுடன் பழகிய பின், உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன், கண்களுக்கு போட்ட மேக்கப்பை கழுவ வேண்டும்.

நீண்ட நேரம் காண்டக்ட் லென்ஸ் அணிய வேண்டாம்.

லென்ஸ் பயன்பாட்டுக்கு முன்னும் பின்னும் அதனை நன்றாக கழுவ வேண்டும்.

கண்களை கடினமாக்கும் வேலைகளை செய்வதை தவிர்க்கவும்.

கண்களுக்கு எரிச்சல் தரும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.

கண்களில் எதாவது தூசி விழ்ந்தால் உடனடியாக கண்களை குளிர் தண்ணீரால் கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Red Eyes

Waking up to red and bloodshot eyes is not an attractive proposition. Red eyes are usually a result of irritated or swollen vessels in your eyes and could indicate various health issues.
Story first published: Friday, June 15, 2018, 16:44 [IST]
Desktop Bottom Promotion