For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்ச தூரம் நடந்தாலே கால் வலிக்குதா?... .இப்படி வீங்கிடுதா?... எப்படி சரிசெய்யலாம்?

இந்த பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மா

By Suganthi Rajalingam
|

இந்த பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த் தேக்கம் மற்றும் சிறிய காயங்கள் இவற்றால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதை சில வீட்டு முறைகளைக் கொண்டே இந்த வீக்கத்தை குறைக்கலாம். லெமன் ஜூஸ், எஸன்ஷியல் ஆயில் மசாஜ், எப்சம் உப்பு, பொட்டாசியம் அதிகமான உணவுகள் போன்ற 28 பொருட்கள் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

how to get rid off water retention

உங்கள் பாதம் மற்றும் கணுக்கால் வீங்கி அவஸ்தைபடுகிறீர்களா இதோ இருக்கு எளிய வழிகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளைவுகள்

விளைவுகள்

இதனால் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வெளிரிய சருமம் மற்றும் கண்கள் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இதை சில வீட்டு முறைகளைக் கொண்டே இந்த வீக்கத்தை குறைக்கலாம். இதற்காக தினமும் மருந்து சாப்பிடுபவர்களும் ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களும் உண்டு. அதெல்லாம் இனி தேவையில்லை. கீழ்வரும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இதை சரிசெய்து விடலாம்.

காலை தூக்கி வைத்தல் மற்றும் ஐஸ் ஒத்தடம்

காலை தூக்கி வைத்தல் மற்றும் ஐஸ் ஒத்தடம்

காலை முன்னதாக நீட்டி மேலே தூக்கி உடற்பயிற்சி செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒரு துண்டில் ஐஸ் துண்டுகளை கட்டி ஒத்தடம் கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

வினிகர்

வினிகர்

கால்களில் வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைக்க வினிகர் பெரிதும் பயன்படுகிறது. வினிகரை யும் தண்ணீரையும் சம அளவு எடுத்து சூடாக்கி கொதிக்க வைத்து அதில் துண்டை நனைத்து அதைக் கொண்டு காலில் கட்டி கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடங்கள் வைத்திருக்குவும். ஒரு நாளைக்கு 4-5 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆப்பிள் சிடார் வினிகரை கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்க்கு தண்ணீரை உறிஞ்சி கொள்ளும் சக்தி அதிக அளவில் இருக்கிறது. எனவே வெள்ளரிக்காய் துண்டுகளை காலில் வைத்து கட்டி பேன்டேஜ் மாதிரி போட்டு கொள்ள வேண்டும். அரை மணி நேரம் இப்படி வைத்திருந்தால் போதும். வீக்கத்தில் உள்ள நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.

லெசிதின் விதைகள்

லெசிதின் விதைகள்

உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பாதம் மற்றும் கணுக்கால் வீங்கி இருந்தால் லெசிதின் விதைகளை எடுத்து கொள்ளுங்கள். 4 டேபிள் ஸ்பூன் லெசிதின் விதைகளை 2-3 மாதங்கள் வரை எடுத்து கொள்ளுங்கள்.

ஊற வைத்தல்

ஊற வைத்தல்

பாதங்களை 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். இது நன்றாக வலியை போக்கும். இல்லையென்றால் 2 நிமிடங்கள் குளிர்ந்த நீரிலும் வெதுவெதுப்பான நீரிலும் என்று மாறி மாறி நனைய வைக்கலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தியோ அல்லது அப்படியே கொண்டு பாதங்களை மசாஜ் செய்து வர வீக்கம், வலி நீங்கும். உடனடி நிவாரணம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, குளிர்காலத்தில் பாதத்தில் கடுகு எண்ணெயை நன்கு தேய்த்தால் உடல் வெப்பநிலை கூடும். குளிரால் உண்டாகும் வீக்கம் குறையும். ஜலதோஷம் பிடிக்காமலும் காக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

ஒர் பெரிய டப்பில் 1/2 கப் எப்சம் உப்பை தண்ணீருடன் கலந்து அதில் பாதங்களை அரை மணிநேரம் அளவுக்கு ஊற வைக்க வேண்டும். இது உண்மையிலேயே நல்ல பலனைத் தரும். நீங்கள் அதிசயிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றத்தை இதன்மூலம் காணலாம்.

சுத்தி விடுதல்

சுத்தி விடுதல்

பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க தினமும் 1/2 மணி நேரம் 10 தடவை பாதங்களை கடிகார திசையிலும் அதற்கு எதிர்திசையிலும் சுற்றி வந்தால் அழுத்தம் மற்றும் பாத வலி குணமாகும்.

மக்னீசியம் சல்பேட்

மக்னீசியம் சல்பேட்

ஒரு பெளல் குளிர்ந்த நீரில் மக்னீசியம் சல்பேட்டை கலந்து அதில் துண்டை நனைத்து பாதங்களில் கட்டி கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் திரும்ப திரும்ப செய்யவும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள், உப்பு போன்றவை வெளியேறி விடும். அதிகமாக நடப்பது மட்டுமல்லாது, நம்முடைய உடலுக்குத் தேவையான போதிய நீர்ச்சத்து இல்லாமல் போனாலும் கூட கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் உண்டாகலாம்.

வெல்லப்பாகு மற்றும் பெருஞ்சீரக டீ

வெல்லப்பாகு மற்றும் பெருஞ்சீரக டீ

1/2 டேபிள் ஸ்பூன் வெல்லப் பாகுடன் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அது அரை பங்காக வற்றும் போது வடிகட்டி ஆற வைத்து பருகவும். ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டைகோஸ் இலைகள்

முட்டைகோஸ் இலைகள்

முட்டைக்கோஸ் இலைகள் உடலில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தை உறிஞ்சி கொள்கிறது. எனவே பாதங்களை முட்டைகோஸ் இலைகளால் மூடி பேன்டேஜ் போட்டு கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு துண்டுகளை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

மக்காச்சோள நார்கள்

மக்காச்சோள நார்கள்

மக்காளச்சோளம் வாங்கும்போது சிலர் அதன் மேல் சருகு மற்றும் பிரௌன் கலரில் உள்ள நார் ஆகியவற்றை பிரித்து தூக்கியெறிந்து விட்டு, வாங்குவார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த சோளத்தைவிட அதில் உள்ள நார்களில்தான் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. ஒரு கப் தண்ணீரில் சில மக்காச்சோள நார்களை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி அதை பருகவும். வீக்கம் மற்றும் வலி இவற்றை காணாமல் செய்கிறது.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ

விட்டமின் அடங்கிய உணவுகளான ஆலிவ்ஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரைகள், நிலக்கடலை போன்ற விட்டமின் ஈ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது பாதங்களில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறி விடுகிறது.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

நீர்க்கட்டு (எடிமா) பிரச்சினைக்கு இது சிறந்தது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு லெமன் ஜூஸை பிழிந்து தினமும் குடித்து வந்தால் பாதங்களில் தேங்கியுள்ள நீரை உறிஞ்சி விடும்.

பூண்டு

பூண்டு

தினமும் 2-3 பூண்டு துண்டுகளை சாப்பிடும் போது திசுக்களில் உள்ள தேவையில்லாத கெட்ட நீர் ஊறிஞ்சப்படும். இது பாத வீக்கத்தை தடுக்கிறது. குறிப்பாக, சமையலில் பூண்டு சேர்த்துக் கொள்வதைவிட, தினமும் சாப்பிட்டு முடித்தபின், பச்சையாக இரண்டு பூண்டு பற்களை அப்படியே சாப்பிட்டு வரலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளையும் சேர்த்து குறைக்கும்.

கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகள் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. ஒரு கப் தண்ணீரில் 3 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை கலந்து கொதிக்க வைத்து அரைபங்காக வற்றும் வரை காய்ச்சி ஆறிய பிறகு வடிகட்டி குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

ஆளி விதைகளின் இயற்கையான அலற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் குணம் போன்றவை கால் வீக்கத்தை குறைக்கிறது. ஒரு டீ ஸ்பூன் ஆளி விதைகளை பொடி செய்து சாதத்துடனோ அல்லது சாலட் உடனே சேர்த்து சாப்பிடலாம்.

அரிசி தண்ணீர்

அரிசி தண்ணீர்

தினமும் அரிசி தண்ணீர் குடித்து வந்தால் பாதங்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறையும். அரிசி தண்ணீருடன் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பயன்படுத்தி வந்தால் பாதம் மற்றும் கணுக்காலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும்.

டான்டெலியன் வேர் டீ

டான்டெலியன் வேர் டீ

டான்டெலியன் வேர் நீர்ச்சத்தை குறைக்கிறது. சில உலர்ந்த அல்லது ப்ரஷ்ஷான டான்டெலியன் இலைகளை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி ஒரு நாளைக்கு 2-3 முறை பருக வேண்டும்.

பார்சிலி டீ

பார்சிலி டீ

1 கப் தண்ணீரில் உலர்ந்த 1 டீ ஸ்பூன் பார்சிலியை எடுத்து கொள்ளுங்கள். நன்றாக வடிகட்டி பிறகு ஒரு நாளைக்கு 2 முறை என்று அருந்துங்கள். வீங்கிய பாதங்கள் மற்றும் வலிகள் போன்றவை சரியாகும்.

குப்பைமேனி இலைகள் (நெட்டில் இலைகள்)

குப்பைமேனி இலைகள் (நெட்டில் இலைகள்)

1 டேபிள் ஸ்பூன் நெட்டில் இலைகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதைச் செய்து வந்தால் கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீரை போதுமான அளவு பருகி வரும் போது சிறுநீர் கழிப்பது அதிகம் ஆகி தேங்கியுள்ள நீர்ச்சத்து வெளியேறி விடும். இதில் டையூரிடிக் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. தினமும் காலையும் மாலையும் பார்லி கஞ்சி குடிப்பதால் உடல் எடையும் குறையும். வலிமை உண்டாகும். கால் வலி, வீக்கம் குறையும்.

எஸன்ஷியல் ஆயில்

எஸன்ஷியல் ஆயில்

பாதங்களில் உள்ள வீக்கத்தை போக்க சில எஸன்ஷியல் ஆயில் பயன்படுகின்றன. மிளகுக்கீரை ஆயில், லெமன் ஆயில், யூகாப்லிட்டஸ் ஆயில் போன்றவற்றை சம அளவில் கலந்து பாதத்தில் மசாஜ் செய்து வர இரத்த ஓட்டம் அதிகரித்து தண்ணீர் தேக்கம் குறைந்து விடும்.

சந்தன எண்ணெய்

சந்தன எண்ணெய்

வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சந்தன எண்ணெய்யை கலந்து அதில் 15-20 நிமிடங்கள் காலை ஊற வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சந்தன எண்ணெய் கிடைக்காவிட்டால், வீட்டில் பெரும்பாலும் சிறிய அளவில் சந்தன கட்டைகள் வைத்திருப்போம். அதை உரசி வெதுவெதுப்பான கலந்து அதில் பாதங்களை வைத்திருக்கலாம்.

ஆலிவ் ஆயில், பட்டை பொடி மற்றும் பால் கலவை

ஆலிவ் ஆயில், பட்டை பொடி மற்றும் பால் கலவை

1 டீ ஸ்பூன் பால் மற்றும் ஆலிவ் ஆயில், கொஞ்சம் பட்டை பொடி சேர்த்து பேஸ்ட்டாக்கி கால்களில் அப்ளே செய்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதை தினசரி செய்து வந்தால் பாதங்களில் ஏற்பட்டுள்ள அலற்சி வீக்கம் சரியாகும்.

லாவண்டர் குளியல்

லாவண்டர் குளியல்

ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில் லாவண்டர் எண்ணெய் கலந்து தினசரி அரைமணி நேரம் காலை ஊற வைக்கவும். பாதங்களுக்கு ஒரு நல்ல ரிலாக்ஸ் தன்மையை கொடுக்கும். இதனால் பாதங்கள் மென்மையடைவதுடன் பாதங்களில் உண்டாகும் வலியும் குறையும்.

மிளகுக்கீரை எண்ணெய்

மிளகுக்கீரை எண்ணெய்

1 கப் கொதிக்கின்ற நீரில் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெய் சேர்த்து ஒரு காட்டன் துணியால் நனைத்து பாதங்களில் ஒரு நாளைக்கு 2-3 முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். நேரடியாக இந்த ஆயிலை பாதங்களில் தடவி தினசரி 20-30 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். நல்ல ஓய்வு மற்றும் 8 மணி நேரம் உறக்கம் வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதங்களை தலையணை மேல் தூக்கி வைத்து கொண்டால் இரத்த ஓட்டம் அதிகமாகும். பொட்டாசியம் அதிகமான உணவுகளான வாழைப்பழம், தக்காளி, வெள்ளை பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும். மூலிகை டீ ஒரு நாளைக்கு 2-3 தடவை குடிக்க வேண்டும்

உடல் எடையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். பாதங்களை சுத்தமாக போதுமான ஈரப்பதத்துடன் வைத்து இருக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

புகைப் பிடிக்கும் பழக்கம் பிரச்சினையை பெரிதாக்கும். உப்பு மற்றும் காரம் அதிகமான உணவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் பானம், கார்பனேட், காஃபைன் போன்ற செயற்கை பானங்களை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலையை உடனே மாற்றுவதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருதல் நிற்றல் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: feet pain home remedies வலி
English summary

Home Remedies to Treat Ankle and Feet Swelling

Swelling of feet and ankle is experienced by many of us. Pregnant women are the most likely to suffer from it. The factors that contribute to it are overweight, standing for long hours, long drives, menstrual periods, deficiency of potassium in the body, fluid retention, or minor injury. Find out some effective home remedies to treat the swelling and pain of feet and ankle in this post. Lemon juice, essential oils, barley water, potassium rich foods these are used to reduce feet swelling.
Story first published: Tuesday, April 10, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion