For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை குறைக்க தினமும் 3 நிமிஷம் இத செஞ்சா போதும்!

உடல் எடையை குறைக்க ஜப்பான் நடிகர் அறிமுகப்படுத்திய விசித்திரமான ஐடியா.அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

|

உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாதிப்புகள் குறித்தெல்லாம் நிறைய பேசப்படுவதால் மக்கள் மத்தியில் தொப்பை மற்றும் உடல் எடை குறித்த ஒர் பயம் வந்திருக்கிறது.

முன்பை விட இன்றைக்கு பலரும் உடல நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர்களுக்காகத் தான் இந்த கட்டுரை.கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஜப்பானியர்கள் கடைபிடிக்கிற அந்த டிப்ஸ் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜப்பானைச் சேர்ந்த நடிகர் மிக்கி ரியோஸ்கீ என்பவர் தான் இதனை கண்டுபிடித்திருக்கிறார். இதன் மூலமாக தான் 13 கிலோ எடை வரை குறைத்ததாக சொல்கிறார். முதுகுவலிக்காக மருத்துவரிடம் சென்ற போது, அவர் இந்த மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுக்க, அது உடல் எடை குறைக்கவும் உதவுகிறது என்பதை பின்னர் தான் உணர்ந்திருக்கிறார் மிக்கி.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானது.

Image Courtesy

#2

#2

இதற்கு லாங் ப்ரீத் டயட் என்று பெயர். நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை வெளியிட வேண்டும்.

இப்படியே இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை செய்ய வேண்டும். இந்த லாங் ப்ரீத் முறையில் உடல் எடையை குறைப்பதை ஐரோப்பிய மருத்துவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு மருத்துவ ரீதியாக ஒர் காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

கொழுப்பில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் கலந்திருக்கும். ஆக்ஸிஜனை அதிகப்படியாக நாம் உள்ளிழுக்கும் போது அந்த கொழுப்பு செல்கள் உடைந்து கார்பன் மற்றும் தண்ணீராக உடையும்.

இதனால் அதிக ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் போது அது நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு செல்களை கரைக்க உதவிடுகிறது. அதோடு இந்தப் பயிற்சி தொடர்ந்து செய்வதினால் தசைகளுக்கு வலுவூட்டவும்,செரிமானத்திற்கும் பயன்படுகிறது.

Image Courtesy

#4

#4

அடுத்ததாக இது இன்னொரு முறை. இதற்கும் மிக்கிக்கும் சம்பந்தமில்லை என்றாலும் இதனையும் ஜப்பான் மக்கள் தங்கள் எடையை குறைக்க பயன்படுத்துகிறார்கள். இதனை அறிமுகப்படுத்தியது ஜப்பானைச் சேர்ந்த ஒரு மருத்துவர் டோஷிகி ஃபுடுகுசுட்சி.

இதற்கு அதிக செலவெல்லாம் ஆகாது. டவலை ரோல் செய்து குறிப்பிட்ட இடத்திஒல் வைத்து சில பயற்சிகளை செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

Image Courtesy

#5

#5

தூங்கும் போது தவறான முறையில் படுப்பது கூட சிலருக்கு முதுகு வலி, தொப்பை ஆகியவற்றை ஏற்படுத்தும். வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது தொப்பையை வரவைத்திடும். இதனை சரி செய்தாலே எடை அதிகரிப்பு பிரச்சனையை குறைத்துவிடலாம் என்கிறார் ஜப்பான் மருத்துவர் டோஷிகி.

இது முதுகுவலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு இது வயிற்று தசையையும் வலுவாக்கும்.

Image Courtesy

#6

#6

இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு டவலை எடுத்து அதனை நன்றாக ரோல் செய்து கொள்ளுங்கள். ஏற்ற இறக்கங்களோடு இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது தரையில் உட்கார்ந்து கால்களை நீளமாக நீட்ட வேண்டும். அப்படியே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். படுத்ததும் கையில் வைத்திருக்ககூடிய டவலை உங்களின் இடுப்பகுதிக்கு அருகே வைக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தரையில் மேட் விரித்து செய்யலாம். மெத்தையில் வேண்டாம். அதே போல இப்படி படித்திருக்கும் போது கால்களை 8 முதல் 10 இன்ச் கேப்பில் உள்கூடி திரும்பியிருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Courtesy

#7

#7

தொப்பையை குறைக்க வயிற்று தசைகளுக்கு நேரடியாக அழுத்தம் கிடைக்கிறது. அதோடு முதுகுத்தண்டும் வலுவாகும். ஏற்கனவே முதுகுவலி இருப்பவர்கள், இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். ஆரம்பத்தில் சற்று சிரமாக இருக்கும் வலுக்கட்டாயமாக செய்ய வேண்டும். முதலில் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என்று படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டோர், அதீத உடல் எடை கொண்டிருப்போர் இந்த பயற்சியை பிறர் உதவியுடன் செய்திடலாம். இந்த பயிற்சி செய்யும் போது அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டால் இந்த பயிற்சியை தொடர வேண்டாம்.

#8

#8

தரையில் நேராக படுத்து கால்களை உள்கூடி மடக்கிய பிறகு டவலை முதுகுக்கு கீழே வைத்துக் கொண்டு ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும்.இதன் போது கை விரல்கள் சேர்ந்திருப்பது அவசியம். இப்படியே தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் வரை இப்படி இருக்க முடியாதவர்கள் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது இப்படி இருக்க வேண்டும்.

Image Courtesy

 #9

#9

அதே போல எடுத்த எடுப்பிலேயே ஐந்து நிமிடம் வரை இந்த பொசிசனில் இருக்க முயற்சி செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த பயிற்சியை செய்திடலாம். இவற்றுடன் வழக்கமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்.

எண்ணெயில் பொறித்த உணவுகள், ஜங்க் உணவுகள், பாட்டில் டிரிங்க்ஸ், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்ப்பது, மூன்று லிட்டர் தண்ணீர் மற்றும் குறைந்தபட்சம் ஏழு மணி நேர தூக்கம் ஆகியவை எல்லாம் இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Weight loss tips by Japanese actor

Effective Weight loss tips by Japanese actor
Story first published: Tuesday, June 5, 2018, 16:35 [IST]
Desktop Bottom Promotion