For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கண் எதாவது இப்படி இருக்கா?... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

கண்இமை கீழே இறங்கியிருப்பது சிலருக்கு தற்காலிக பிரச்சினையாகவும் சிலருக்கு நிரந்தரமாகவும் இருக்கும். அதுபற்றி விரிவாக இங்கே பார்ப்போம்.

|

இமை இறக்கம் அல்லதி இமைத் தொய்வு என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். பிறக்கும்போதே ஒருவருக்கு இத்தகைய இமைத் தொய்வு இருக்குமானால் இதனை பிறவி இமைத் தொய்வு என்று கூறுவர். வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் இந்த பாதிப்பு ஒருவருக்கு உண்டாகலாம்.

Do You Have A Drooping Eyelid? Everything You Should Know About It

மேல் கண் இமைகள் சற்று தொய்வடைந்து அல்லது கண்மணியை மறைக்கும்போது அதனை இமைத் தொய்வு என்று கூறலாம். ஒரு தரப்பு இமைத் தொய்வு ஒரு கண்ணை மட்டும் பாதிக்கிறது, மாறாக, இருதரப்பு இமைத் தொய்வு இரண்டு கண்களையும் பாதிக்கிறது. இது தற்காலிக பாதிப்பாகவும் இருக்கலாம், நிரந்தர பாதிப்பாகவும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணிமை தொய்வு

கண்ணிமை தொய்வு

பிறக்கும்போது இமைத் தொய்வு ஏற்படுவதற்கு பிறவி இமைத் தொய்வு என்று கூறலாம். இதன் தீவிர தன்மையைக் பொறுத்து, பார்வையில் குறைபாடு அல்லது தடை உண்டாக நேரலாம். கண்மணியை இது தடை செய்யும் தன்மையைப் பொறுத்து பார்வை கோளாறு கணக்கிடப்படும். பெரும்பாலான வழக்குகளில் இந்த நிலைமை இயற்கையான முறையில் அல்லது மருந்துகளின் உதவியால் சரி செய்யப்படும்.

இமைத் தொய்விற்கான காரணம், அறிகுறி மற்றும் சிகிச்சை பற்றி இப்போது பார்க்கலாம்.

MOST READ: இந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை? எப்படி தப்பிக்கலாம்?

காரணங்கள்

காரணங்கள்

இமைத் தொய்விற்கான சில காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1. வயது அல்லது அதிர்ச்சியின் காரணமாக ஏற்படலாம்

2. ஊட்டச்சத்து இல்லாமை

3. வயது

4. கண்புரை அறுவை சிகிச்சைக்கு பிறகு

5. கண் இமையை தாங்கி பிடிக்கும் தசைகளில் பலவீனம்

6. தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் சேதம்

7. மேல் கண் இமைகளில் இருக்கும் சதை தொங்குதல்

8. மது மற்றும் புகை பழக்கம் அதிகமாக இருப்பது

9. சூரிய ஒளியின் பாதிப்பு

அறிகுறிகள்

அறிகுறிகள்

1. கண்கள் வறண்டு காணப்படுவது அல்லது நீர் நிறைந்து காணப்படுவது,

2. உங்கள் முகம் சோர்வாக காணப்படுவது

3. ஒரு கண் இமை அல்லது இரண்டு கண் இமைகளும் தொய்வடைந்து காணப்படுவது

4. உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முக்கியமாக பாதிக்கப்படும். அந்த இடங்களில் ஒரு வித வலியை நீங்கள் உணரலாம்.

எளிய சிகிச்சை முறைகள்

எளிய சிகிச்சை முறைகள்

1. செவ்வந்தி டீ பருகுவதால் வீக்கம் குறையலாம். அல்லது செவ்வந்தி டீ பேக்கை கண்களைச் சுற்றி வைத்துக் கொள்ளலாம்.

2. நரம்பு அல்லது தசை சம்மந்தமான பாதிப்பு என்றால் அக்குபஞ்சர் நல்ல தீர்வைத் தரலாம்.

3. வைடமின் பி 12 அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

4. நேத்ராபன சிகிச்சை என்னும் ஆயுர்வேத சிகிச்சைப் படி, வெதுவெதுப்பான நெய், உப்பு மற்றும் எண்ணெய்யை கண்களில் ஊற்றலாம். இதனால் தசைகள் மற்றும் நரம்புகள் வலிமையடையும்.

5. இமைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளை செய்யலாம்.

6. பீட்டா கரோடின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

7. லூடின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

8. கண்கள் அதிகம் சிரமப்படுவதை தவிர்க்கலாம்.

MOST READ: ஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது? என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்?

பாதிப்புகள்

பாதிப்புகள்

1. ஒற்றைத்தலைவலி

2. கை, கால் மற்றும் முகத்தில் உள்ள தசைகள் பலவீனமடைதல்

3. இரட்டை பார்வை

4. விழுங்குவதில் சிரமம்

5. கண் தொற்று

6. கண் வீக்கம்

7. கண் வலி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Have A Drooping Eyelid? Everything You Should Know About It

Drooping Eyelid temporary as well as permanent. You can even develop in the later stages of your life.
Desktop Bottom Promotion