Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 17 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மச்சத்தின் மேல் முடி முளைத்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா? அந்த மரண அபாயம் பத்தி தெரிஞ்சிக்கோங்க...
மச்சம் அல்லது தழும்பில் முடி வளர்ச்சி ஏற்படுவதை நாம் பார்த்திருக்கலாம். சில நேரங்களில் இது தோல் புற்று நோய் அபாயத்தை உண்டாக்குவதாக இருக்கலாம் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால் இது குறித்து நம்புவது சற்று கடினமாக உள்ளது. காரணம், பொதுவாக மச்சத்தில் வளரும் முடிகளால் புற்று நோய் ஏற்படுவதில்லை.
இன்னும் சொல்லப்போனால், புற்று நோய் கட்டிகள் பொதுவாக சாதாரண வடிவத்தில் வளர்வதில்லை. ஆனால் முடி வளர்ச்சி என்பது ஒரு சாதாரண வளர்ச்சியாகும். அதனால், ஒரு ஆரோக்கியமான முடியின் வேர்க்காலில் உண்டாகும் மச்சத்தில் முடி வளர்ச்சி என்பது இயற்கையான ஒரு நிகழ்வாகும்.
ஆனால் அந்த பகுதி, சேதமடைந்து இருக்கும்போது, தோல் புற்று நோய் வளர்ச்சி உண்டாகும்போது, அந்த வேர்காலை வலுவிழக்கச் செய்து, அந்த இடத்திலல் முடி வளர்ச்சி தடைபடும். ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மச்சத்தில் முடி
மெலனோமா என்னும் கருங்கட்டி என்பது ஒரு மோசமான வகை தோல் புற்று நோயாக அறியப்படுகிறது. புற்று நோய் அபாயத்திற்கு உட்பட்டிருக்கும் மச்சத்தில் இந்த புற்று நோய் வளர்ச்சி ஏற்படலாம். ஆகவே இந்த வகை மச்சத்தில் முடி வளர்ச்சி இருப்பதாலும் இது புற்று நோயாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த வழக்கில், இந்த இடத்தில் முடி வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த வகை மச்சம் புற்று நோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
MOST READ: கரித்துண்டு மாத்திரையை சாப்பிடலாமா? அது இவ்வளவு பெரிய வியாதியை கூட குணப்படுத்துமா?

மெலனோமா
ஆனாலும் உங்கள் சருமத்தில் உள்ள மச்சம் அல்லது தழும்பு குறித்து உங்களுக்கு பயம் இருந்தால், அதனை உங்கள் மருத்துவரின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.
மெலனோமா பாதிப்பு இருந்தால் அதன் முதல் நிலையில் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. முற்றிய நிலையில் அதனைக் கண்டறிவதால் உயிரிழப்பு பாதிப்பு ஏற்படலாம்.
ஆகவே உங்கள் மச்சம் குறித்த சில தகவல்களை நீங்கள் அறிந்து வைத்துக்கொள்வது உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற உதவும். இதோ சில தகவல்கள்..

ஒத்தமைவின்மை
மச்சத்தின் மத்தியில் ஒரு கோடு வரைந்து பார்க்கும்போது, அதன் இரண்டு பாதியும் ஓரளவிற்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.

ஒழுங்கற்ற எல்லை
பொதுவாக மச்சத்தின் ஓரப்பகுதி, மென்மையாக இருக்க வேண்டும். சமனற்றதாக இருக்ககூடாது.

நிறத்தில் மாறுபாடு
பல நிறங்கள் கொண்ட மச்சம் என்றும் கவலை கொள்ளச் செய்வதாக இருக்கும். குறிப்பாக, மச்சம், பழுப்பு நிறமாக, நீல நிறமாக, அல்லது சிவப்பு, பிங்க் மற்றும் கருப்பு நிறம் கலந்து இருந்தால் உடனடியாக மருத்துவரைக் காணுவது அவசியம்.

பெரிய அளவு
பொதுவாக, இயல்பான மச்சத்தின் அளவு 6 மில்லிமீட்டரை விட குறைவாக இருக்கும். பென்சில் பின்னால் இருக்கும் ரப்பரின் அளவு போல் இருக்கலாம். பெரிய அளவு மச்சம் இருந்தால் கவனிக்க வேண்டும்.
மாறும் பண்புகள்: இந்த குறிப்பு மிகவும் முக்கியமானதாகும். சில வகை மெலனோமா தொடக்கத்தில் மிகவும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் மேலே கூறிய மாற்றங்கள் உண்டாகலாம்.

வித்தியாசமான மச்சம்
வித்தியாசமாக தோன்றும் மச்சம்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மச்சம் காட்சியளிக்கலாம். சிலருக்கு சிறிதாக, சிலருக்கு பெரிதாக, சிலருக்கு லேசாக, சிலருக்கு அடர்த்தியாக தோன்றலாம். ஆனால் ஒருவர் உடலில் உள்ள எல்லா மச்சமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இவற்றில் எதாவது ஒன்று சற்று வித்தியாசமாக தோன்றினால் அதனை உற்று நோக்கி ஆராய்வது நல்லது.

பரிசோதனை
உங்களுக்கு தோல் புற்று நோய் இருப்பதை தெரிந்து கொள்வதற்கு அடிக்கடி சரும பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதை விட சிறந்த ஒரு செயல், ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் சருமத்தை 5 நிமிடம் உற்று பார்த்து அதன் மாற்றங்களை உணரலாம். இதனால் உங்கள் சருமத்தின் மாற்றங்கள் உங்களுக்கு தென்படும். இதனை கொண்டு உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.