மன அழுத்தத்தை குறைக்கும் யோகா பயிற்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல் !!

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

யோகா என்பது வெறுமனே உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. இதில் எண்ணற்ற உடல் நல நன்மைகளும் பொதிந்து கிடக்கின்றன. அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியம்.

இப்பொழுது உள்ள எந்த வயது மக்களாலும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகமாக வட நாடுகளில் இதைப் பற்றிய விழிப்புணர்வும் செயல்முறைகளும் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் யோகாசனங்கள்!

ஒரு புதிதாக வந்த ஆராய்ச்சி தகவல் என்னவென்றால் யோகா பயிற்சியானது நமக்கு மென்டல் தெரபி யையும் கொடுத்து நமது மன அழுத்தம் மற்றும் மென்டல் டிஸ்ஆர்டர் போன்றவற்றை களைகிறதாம்.

இந்த தகவல் 125 வது ஆண்டு ஆனுவல் கான்வென்ஷேசன் ஆஃப் தி அமெரிக்க ஷைகலாஜிக்கல் அஸோஷியேசன் இன் வாஷிங்டன் டிசி யில் தற்போது வழங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டு அவர்கள் யோகா பயிற்சியின் மூலம் எவ்வளவு மன அழுத்தத்தை குறைத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Yoga Helps To Get Rid Of Depression - Study

ஹாத் யோகா (hatha yoga), பிஹிராம் யோகா (bikram Yoga) போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். 23 ஆண்கள் ஹாத் யோகா வை 8 வாரங்களும், 52 பெண்கள் பிஹிராம் யோகா வை 8 வாரங்களும் மேற்கொண்டனர்.

இதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்து அவர்களது வாழ்க்கையில் நிம்மதியான சந்தோஷமான மனநிலையும் வளரத் தொடங்கியுள்ளது தெரிய வந்தது.

மேலும் இந்த ஆராய்ச்சியானது தொடர்ந்து இரண்டு பிரச்சினைகளான நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனக் கவலை இவற்றிற்கும் யோகா எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆராய்ந்தனர்.

இதற்கு 12 நோயாளிகள் 11 வருடம் கொண்டிருந்த கவலைகளுடன் 9 வாரங்கள் தொடர்ந்து 2.5 மணி நேரம் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். அடுத்த கட்ட ஆராய்ச்சியானது மீடியமான மனக் கவலையுடன் காணப்படும் 74 யுனிவர்சிட்டி மாணவர்களிடம் நடத்தப்பட்டது.

இதன் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் யோகா பயிற்சி அவர்களது மன அழுத்தம், அனிஸ்சிட்டி மற்றும் மனக் கவலைகளை வெகுவாக குறைக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

English summary

Yoga Helps To Get Rid Of Depression - Study

Yoga Helps To Get Rid Of Depression - Study
Story first published: Wednesday, August 9, 2017, 19:00 [IST]