4,500ல் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு, பெண்ணுறுப்பு இன்றி பிறந்த பரிதாப பெண்!

Posted By:
Subscribe to Boldsky

18 வயது வரை கேய்லே மோட்ஸ்-ம் ஒரு சராசரி பெண்ணாக தான் இருந்து வந்தார். ஆனால், ஒருநாள் அவர் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சை ரிப்போர்ட் அவரது வாழ்வில் இடியை தூக்கி போட்டது.

எம்.ஆர்.ஐ செய்து பார்த்த போது தான், அவருக்கு கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி இல்லை என்பது கண்டறியப்பட்டது. கேய்லே மோட்ஸ்-க்கு இப்போது வயது 22.

இவருக்கு Mayer-Rokitansky-Kuster-Hauser syndrome எனும் பாதிப்பு இருக்கிறது. இதனால், பெண்ணுறுப்பு மற்றும் கருப்பை முழுமையாக வளராமல் அல்லது உருவாகாமல் போகும் என தேசிய சுகாதார அமைப்பால் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
4500-ல் ஒருவர்!

4500-ல் ஒருவர்!

இது போன்ற பாதிப்பு 4500-ல் ஒருவருக்கு தான் ஏற்படும். அதில் கேய்லே மோட்ஸ் ஒருவராக இருந்துள்ளார். மரபணு வேறுபாடுகள் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என மரபணு ஆராய்ச்சி நிபுணர்கள் இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credits: Go Fund Me

குழந்தை ஆசை!

குழந்தை ஆசை!

மற்ற பெண்களை போலவே கேய்லே மோட்ஸ்-க்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தனது குடும்பத்திலேயே தான் ஒருவர் மட்டும் வேறுபட்டு இருப்பதை கண்டு கேய்லே மோட்ஸ் மனம் வருந்தி வருகிறார்.

இதனால் கேய்லே மோட்ஸ்-க்கு அதிக அச்சம், பாதுகாப்பின்மை உணர்வுகள் மனதில் எழுந்து வருகிறது. இதனால் தனது அடையாளம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறார் கேய்லே மோட்ஸ்.

வேறு முறைகள்!

வேறு முறைகள்!

வாடகை தாய் அல்லது தத்தெடுத்து பிள்ளை வளர்க்கலாம் எனினும், தனது சொந்த பிள்ளையாகாது என்ற வருத்தம் கேய்லே மோட்ஸ்யிடம் காணப்படுகிறது.

இது குறித்து தனது காதலனிடம் கூறவும் கேய்லே மோட்ஸ் அஞ்சுனார். இதை அறிந்தால் அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும், எப்படி எடுத்துக் கொள்வார், தன்னை விட்டு பிரிந்துவிடுவாரோ என்ற எண்ணங்கள் அவருள் ஓடியது.

ஆனால், இதை அறிந்த பிறகு அவரது காதலன் குடும்பத்தை போலவே மிகவும் உறுதுணையாக தான் இருந்து வருகிறார்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

ஆனால், கேய்லே மோட்ஸ்-வின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் வகையில், அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்தால், அவரே செக்ஸ் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உண்டாகியுள்ளது.

ஆனால், அந்த அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள $15,000 செலவாகும். இது இந்திய மதிப்பில், ஏறத்தாழ 10 இலட்சத்திற்கு சமம் ஆகும். மேலும், இந்த அறுவை சிகிச்சை மூலம் வெற்றி காண 96% வாய்ப்புகள் உள்ளன என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உதவி!

உதவி!

$15,000 இதுவரை $1,2000 டாலர்கள் வரை பண உதவி ஈட்டியுள்ளார் கேய்லே மோட்ஸ். இன்னும் அவருக்கு தேவை மூவாயிரம் டாலர்கள் தான். இவருக்கு உதவி செய்ய ஆன்லைன் நன்கொடை GoFundMe தளம் முன்வந்து இதை செய்து வருகிறது. பலரும் கேய்லே மோட்ஸ்விற்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Born Without a Vagina Raises Money For Surgery So She Can Have Intercourse!

Woman Born Without a Vagina Raises Money For Surgery So She Can Have Intercourse!
Subscribe Newsletter