டென்னிஸ் பந்தை வைத்து முதுகு வலியை விரட்டி விடலாமா? எப்படினு பார்க்கலாம் வாங்க...

Subscribe to Boldsky

முதுகு வலி என்பது இப்போதெல்லாம் மிக சாதாரணமாகி விட்டது. ஏனென்றால், அனைவரின் வேலையும் பெரும்பாலும் உட்கார்ந்துக் கொண்டே பார்ப்பதாகத் தான் இருக்கிறது. இதனால் முதுகு வலி என்பது சாதாரணமாக வந்துவிடுகிறது. இது மட்டுமல்லாது வேறு சில செயல்களும், அதாவது தூங்கும் முறைகளில் ஏதேனும் மாற்றம் இது போன்றவையும் முதுகு வலிக்கு காரணங்களாக உள்ளன.

தசைச் சுருக்கமும் முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணமாகும். தசைகளில் ஏற்படும் சுருக்கம் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலி உண்டாகச் செய்கிறது. இந்த வலிகளை டென்னிஸ் பந்தைக் கொண்டு சுலபமாக சரி செய்து விடலாம். இதனை உபயோகித்து மசாஜ் செய்வதால் தசைகளுக்கு ஓய்வு கிடைத்து வலியானது குறைந்து உடலுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

இதை ட்ரை செய்யும் போது நீங்களே வலி குறைவதை உணர்வீர்கள். இப்போது டென்னிஸ் பந்தைக் கொண்டு உடலின் பல்வேறு வலிகளை எப்படி போக்குவது என்று பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதுகு வலி

முதுகு வலி

ஒழுங்கற்ற முறையில் தூங்கினாலோ அல்லது ஒழுங்கற்ற முறையில் நீண்ட உட்கார்ந்தாலோ அல்லது ஹை ஹீல்ஸ் காலணி அணிந்தாலோ நிச்சயமாக முதுகு வலி ஏற்படும். இதனை சரி செய்ய நமக்கு 2 டென்னிஸ் பந்து தேவைபடுகிறது.

கீழே படுத்துக் கொண்டு பந்தை முதுகிற்கு கீழே வலி இருக்கும் இடத்திற்கு தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். உங்கள் உடலை மேலும் கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும். அதாவது வலி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்வது போன்று அசைக்க வேண்டும். வலிக்குத் தகுந்தவாறு வேகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடத்திற்குத் தொடர்ந்து செய்தால் போதுமானது.

 கழுத்து வலி

கழுத்து வலி

இந்த முறையை கழுத்து வலிக்கும் உபயோகிக்கலாம். கீழே படுத்துக் கொண்டு பந்தை உங்கள் கழுத்து பகுதியில் மண்டையை தொடும் படி வைக்க வேண்டும். பின்னர் மெதுவாக மேலும் கீழுமாக அசைத்து மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் வலிக்குத் தகுந்தவாறு பல திசையில் பக்குவமாக அசைக்க வேண்டும். இதனை 3 நிமிடத்திற்கு செய்யவேண்டும்.

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி

ஒழுங்கற்ற தூங்கும் முறை மற்றும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதால் ஏற்படக்கூடிய வலிக்கு இந்த முறை சிறந்ததாகும். கீழே படுத்துக் கொண்டு 2 டென்னிஸ் பந்துகளையும் தோள்பட்டையின் இரு பக்கங்களிலும் வைக்க வேண்டும். பந்துக்கள் மெதுவாக சுழலும் படி மேலும் கீழுமாக அசைந்து 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இடுப்பு வலி

இடுப்பு வலி

நிறைய நேரம் உட்கார்ந்து இருப்பதால் அல்லது நாள் முழுவதும் ஷூ அணிந்து இருப்பதால் இடுப்பு வலி ஏற்படக்கூடும். கீழே படுத்து டென்னிஸ் பந்தை இடுப்புக்கு பகுதியில் வைத்துக் கொண்டு அதை வட்டமாக சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். 3 நிமிடத்திற்கு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

சில தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் மார்பு விறைப்பு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு சுவற்றிக்கு எதிரே நின்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கும் சுவற்றிக்கும் இடையே பந்தை வைத்துக் கொள்ள வேண்டும். காலர் எலுப்புக்கு கீழே வைக்க வேண்டும். 2 நிமிடத்திற்கு பந்தை மெதுவாக மசாஜ் செய்வது போன்று உருட்டுங்கள்.

கை வலி

கை வலி

நீண்ட நேரம் டைப் செய்வது அல்லது எழுதுவதால் கைகளில் வலி ஏற்படக்கூடும். ஒரு பந்தை மேஜையின் மீது வைத்து கைகளை பந்தின் மீது வைக்க வேண்டும். இன்னொரு பந்தை கைகளின்மீது வைக்க வேண்டும். பின்னர் 2 நிமிடத்திற்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

 குதிங்கால் வலி

குதிங்கால் வலி

குதிங்காலில் வலி இருந்தால் காலுக்குக் கீழே பந்தை வைத்து மெதுவாக உருட்டி 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இது கால் வலியை விரைந்து குறைத்துவிடும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try this tennis ball remedy to get rid of back pain

Try this tennis ball remedy to get rid of back pain
Please Wait while comments are loading...
Subscribe Newsletter