மலச்சிக்கலால் அவதிப்படறீங்களா? அப்போ இந்த அற்புத தேநீரை குடிங்க!!

Written By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

ஒருவரது உடல் நிலை சரியாக இருப்பது அவர்களின் செரிமான செயலைப் பொருத்தது. ஒருவரது செரிமான தன்மையே நமது உடலுக்கு என்ன சத்துக்கள் தேவை என்பதை நாம் சாப்பிடும் உணவில் இருந்து எடுத்துக் கொள்ளும். அப்படி நாம் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்கள் நம் உடலுக்கு எடுத்துக் கொள்ளபட வேண்டும் என்றால் அதற்கு செரிமான வேலை சரியாக நடந்தே ஆக வேண்டும்.

ஒருவரது குடல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் முதலில் ஏற்படும் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். எப்போது நமது செரிமான செயலில் தாமதமோ அல்லது ஏதாவது குளறுபடியோ ஏற்படுகிறது என்றால் குடலின் இயக்கமானது தாமதமாகி நச்சுக்கள் உடலினுள் தங்க ஆரம்பித்துவிடும்.

எப்போது நம் உடலில் உள்ள நச்சுகள் சரியான நேரத்தில் வெளியேறவில்லை என்றால் அது பல பிரச்சனைகளையும் நோய்களையும் உண்டாக்கக்கூடும். இங்கு நமது குடலை சுத்தம் செய்ய உதவவும் அதன் இயக்கத்தை துரிதப்படுத்தவும் ஒரு பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தை நீங்கள் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது மிக முக்கியம். மேலும் இந்த பானத்தை தொடர்ந்து 2 அல்லது 3 நாளைக்கு மேல் குடிக்கவும் கூடாது. இது மிக முக்கியம் எனவே மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானப் பொருட்கள்

தேவையானப் பொருட்கள்

தண்ணீர் - 2 டம்ளர்

பேரீச்சம்பழம் - 150 கிராம்

பிளம்ஸ் - 150 கிராம்

 செய்முறை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்த தண்ணீரில் மேலே கூறப்பட்டுள்ள அளவு பேரீச்சம்பழம் மற்றும் பிளம்ஸை சேர்க்க வேண்டும்.

 செய்முறை

செய்முறை

தண்ணீருடன் சேர்த்து பேரீச்சம்பழம் மற்றும் பிளம்ஸ் ஆகியவை குறைந்தது 15 நிமிடமாவது குறைந்த தீயில் கொதிக்க விட வேண்டும். கொதித்த அந்த நீரை ஆறியப் பிறகு பதப்படுத்தி வைத்துக் கொள்ளவேண்டு

 செய்முறை

செய்முறை

இந்த தேநீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும். இதை குடித்த சிறிது நேரத்தில் உங்கள் குடலானது அதன் வேலையை ஆரம்பித்துவிடும். அதாவது, நம் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தயாராகி விடும்.

பலன்கள்

பலன்கள்

இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான வேலை நன்கு நடைபெறும். மேலும் இது மலச்சிக்கலை சரி செய்யும். உடலில நச்சுக்களைத் தங்க விடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This mixture moves your bowl fast

This mixture moves your bowl fast.Try this amazing tea to relieve from constipation
Story first published: Wednesday, April 5, 2017, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter