For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஜெல்லியை எப்படி தயாரிக்கிறார்கள் எனத் தெரியுமா?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லியை எப்படி எதிலிருந்து தயாரிக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.

By Ambikasaravanan
|

ஜெல்லி, ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கலாம் என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு ஜெல்லியின் புகழ் பரவி கிடக்கிறது.

ஆனால், ஜெல்லிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை எப்படி தயாரிக்கின்றன என பல்வேறு சமூக வலைத்தளங்களில், யூடியுப் முதலான காணொளித் தளங்களிலும்பல்வேறு வகையான தயாரிப்பு முறைகளை காண்பிக்கின்றன. குறிப்பாக பன்றிகளின் கொழுப்பை வைத்து ஜெல்லி தயாரிக்கும் ஒரு முறை மிகப் பிரபலமாக பார்க்கப் பட்ட காணொளி ஆகும்.

Things you should know about almond gum

இது உண்மை எனில் நமது குழந்தைகளுக்கு நாம் பன்றிகளின் கொழுப்பையா கொடுத்து வந்திருக்கிறோம் என்றால். அதற்கு விடை ஆம் மற்றும்இல்லை என இரண்டையுமே கூறலாம். சில நிறுவனங்கள் தாம் ஜெல்லி தயாரிக்க பன்றிகளின் கொழுப்பை உபயோகிப்பதில்லை எனவும் கூறுகின்றன.

நமக்கு எதுக்கு இந்த குழப்பம் எல்லாம்?

சரி அப்போது எவ்வாறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவது. அதற்கு நமது தமிழ் உணவு வகைகளிலேயே ஒரு மாற்று உள்ளது. ஆம், ஜெல்லிக்கு மாற்று நமது

முன்னோர்கள் பரவலாக பயன்படுத்திய "பாதாம் பிசின்".

"பாதாம் பிசின்" என்பது ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைக்கப் படுகிறது. இது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பசை. இது பயன்பாட்டிற்கு முன் ஒரு காய்ந்த பசை போல் இருக்கும். அதை தண்ணீர் அல்லது பால் போன்ற திரவத்தில், சர்க்கரை, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் தேவையென்றால்நிறத்திற்காக கேசரி தூள்.

இவை அனைத்தையும் நன்கு கலந்து ஒரு 7-8 மணி நேரங்கள் ஊற வைத்தால் பளபளப்பான ஒரு திடமான அல்லது ஜெல்லி போன்ற கெட்டியான ஒரு வடிவில் அது மாறிவிடும். பாதாம் பிசின் தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குளிர் பானம் தயாரிப்பதற்கு பயன் படுகிறது. அதை இந்த கட்டுரையின் கடைசியில்குறிப்பிட்டு இருக்கிறோம்.

பாதாம் பிசினை ஜெல்லியின் மாற்றாக மட்டும் நாம் இங்கு பார்க்கவில்லை. பாதாம் பிசின் நமது உடல் நலத்திற்கும் நல்லது.

இந்தியா போன்ற ஒரு நாடு, கோடை காலங்களில் தாங்க முடியாத சூடாக இருக்கும். அதனை சமாளிக்க நம் உடலை குளிர்ச்சிக் கொள்ள உதவும் விஷயங்களைத்தேடுகிறோம். அதற்கு தற்போதைய காலங்களில் நாம் தேர்தெடுத்து இருக்கும் தனியார் குளிர் பானங்களால் உண்மையில் நமக்கு நன்மை கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வெற்று கலோரிகள் கொண்ட அவ்வகை தனியார் குளிர் பானங்கள் நமக்கு, நமது உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும்உண்மையில் அவை நமது உடலை குளிர்விப்பது இல்லை.

இது குளிரூட்டப்பட்ட தனியார் குளிர் பானங்களின் ஒரு அனுகூலம் அற்ற விஷயமாகும் . ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக உபயோகித்த பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிரூட்டும் குணங்களைக் கொண்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆம், பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளிர்ச்சி கொண்ட மற்றும் ஜெல்லி போன்ற குணங்களை வழங்குகிறது. நமது உடலை குளிரூட்டும் ஒரு சிறந்த உணவாக இது இருக்கிறது.

பாதாம் பிசினின் குணங்கள்:

  • பாதாம் பிசின் உடலுக்கு குளிரூட்ட பயன் படுகிறது.
  • வயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது.
  • விலை மலிவானது மற்றும் இயற்கையானது.
  • உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.
  • பாதாம் பிசின் கொண்டு அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களை குணப்படுத்தலாம்.
  • பேதிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது.
  • கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  • வட இந்தியாவில் இது பொதுவாக கர்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது எலும்புகளை பலப்படுத்தி உடலுக்கு சக்தி கொடுக்கிறது.
  • இயற்கையான உணவு என்பதால் இதில் செயற்கையான நிறங்கள் ஏதும் இல்லை, இதனால் இவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
  • பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இது உடல் எடையை கூட்ட வல்லது.
  • உடல் எடையை அதிகரிப்பதால் எடை தூங்குபவர்கள்(weight lifters ) இதனை உபயோகிப்பர்.
  • உணவிற்கு பிறகு உண்ணப்படும் இனிப்புகளிலும் குளிர்பங்களிலும் இதனை சேர்ப்பதால் அசிடிட்டி குறைகிறது.
  • பாதாம் பிசின் அதிக குளிர்ச்சி அடைய செய்யும் ஒரு உணவுப் பொருள் என்பதால். அவற்றை ஆஸ்துமா, சைனஸ், சளி தொல்லை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

இப்போது நாம் முன்பு குறிப்பிட்ட, பாதாம் பிசின் கொண்டு தயாரிக்கப் படும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பானம், "ஜிகர்தண்டா".

English summary

Things you should know about almond gum

Things you should know about almond gum
Story first published: Saturday, August 26, 2017, 14:16 [IST]
Desktop Bottom Promotion