உங்க உணவுக்குடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதன் 10 அறிகுறிகள்!! அஜாக்கிரதையாக இருக்காதீங்க!!

Posted By:
Subscribe to Boldsky

உணவுக் குடலில் இருக்கும் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணிக்க வைக்கும் நொதிகளின் வேலையை தூண்டிவிடுகின்றன. அதனால்தான் ஜீரண மண்டலங்கள் எப்போதும் ஆக்டிவா இருக்கும். நன்றாக செயல்படும்.நீங்கள் நம்பினால் நம்புங்கள் உங்கள் உணவுக் குடல் ஒரு அறையின் 3000, 4000 சதுர அடி நீளம் வரை இருக்கும். அவை மடிப்பு மடிப்பாக உங்கள் வயிற்றுப் பகுதியில் பொதிந்துள்ளது.

இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலையை செய்கின்றது. உடல் உணவு உறிஞ்சி ஜீரணத்திற்க அனுப்பி, சத்துக்களை பிரித்தெடுக்க என பலவேலைகளை அது இழுத்துப் போட்டு செய்கிறது.

இப்படி செய்யும் உணவுக்குடலை பாதுகாக்கும் நன்மை தரும் உணவுகள், பழக்க வழக்கங்கள், உணவுக் குழலை பாதிக்கும் மோசமான உணவுகள், என இருக்கின்றன. அப்படி உணவுக் குடல் பாதித்தால் அதன் அறிகுறிகள் நமக்கு காண்பித்துவிடும். எதையும் சிறிதாவது தெரிந்து வைத்துக் கொண்டால் வரும் முன் காப்போம் என்ற ஆயுதத்தை நாம் கையில் எடுக்கலாம். அப்படி உணவுக் குடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக்குடலின் வேலை :

உணவுக்குடலின் வேலை :

உண்வுக் குடலிலுள்ள் சுரப்பிகள் நொதிகளை சுரக்கின்றன. அவை முறையான செரிமானத்தை தூண்டி உணவை ஜீரணிக்கச் செய்கிறது.

பாதுகாப்பு வளையம் :

பாதுகாப்பு வளையம் :

உடலிலுள் உருவாகும் மோசமான கிருமிகளை கல்லீரலி தாக்காமல் பாதுகாப்பு வளையம் போல் செயல்படுகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டவும் உதவிபுரிகிறது.

உணவுக் குடல் பாதிக்கப்பட்டதன்

உணவுக் குடல் பாதிக்கப்பட்டதன்

உணவுக் குடல் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் எளிதாக உங்களால் கண்டுபிடித்துவிடலாம். பொதுவகவே வயிற்றுப் பிரச்சனை வந்தால் உண்டாகும் பிரச்சனைகள்தான் இதற்கும் அறிகுறிகள் என்றாலும். கீழ்கண்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை நாடுதல் அவசியம்.

வயிற்று உப்புசம் மற்றும் வாயு :

வயிற்று உப்புசம் மற்றும் வாயு :

வயிற்றில் காற்று அடைத்தாற்போல் நிரப்பியிருக்கும். பசிக்காது. மிகவும் அசோஉகரியாம வயிறு காணப்படும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் உண்டாகும். மலத்துடன் ரத்தம் கலந்து வருவது, திடீரென மூலம் உண்டாவது போன்றவையாகும்.

துர் நாற்றம்

துர் நாற்றம்

மலம் மிக மோசமான துர் நாற்றத்துடன் வெளிவரும். மிக அடர் நிறத்தில் உருவாகும்.

அடிவயிறு வலி

அடிவயிறு வலி

அடிவயிற்றில் தாங்க முடியாத வலி அடிக்கடி உண்டாகும். அடிக்கடி வயிற்றுப் பிடிப்பு ஏற்படும்.

அஜீரணக் கோளாறுகள்

அஜீரணக் கோளாறுகள்

செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதனால் குமட்டல் வாந்தி போன்ரவை வந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நலம்.

வெள்ளை நாக்கு

வெள்ளை நாக்கு

ஆரோக்கியமான நாக்கின் இயற்கை நிறம் லேசான பிங்க் நிறத்தில் இருக்கும். இது உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதன் அறிகுறிகள். உணவுக் குழாய் பாதிக்கப்பட்டிருந்தால் நாக்கு வெள்ளை நிறத்தில் அமையும்.

மூட்டு வலி

மூட்டு வலி

எல்லா மூட்டு இணைப்புகளில் வலி இருக்கும். ஆர்த்ரைடிஸினால் வரும் மூட்டு வலிக்கும், செரிமானக் கோளாறினால் உண்டாகும் மூட்டு வலிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது. இந்த பிரச்சனையில் மூட்டு அடிக்கடி வலித்தாலும் தாள முடியாத அளவிற்கு இருக்காது.

உணவுக் குழாயை பாதுகாக்க, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும். எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என பார்க்கலாம்.

புரதம்

புரதம்

அதிக புரதச் சத்து, கொண்ட உணவுகள், தானிய வகை உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவை உங்கள் வயிற்றிலுருக்கும் நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்கின்றது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிகமாக கார்போஹைட்ரேட், மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்த்தல் நல்லது. அசைவ உணவுகளில் அதிக கொழுப்புள்ள உணவுகளிய சாப்பிடக் கூடாது. அடிக்கடி ஆன்டிபயாடிக் சாப்பிடக் கூடாது. இவை நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடும்.

உணவுக் குழாயை பாதிக்கும் விஷயங்கள்

உணவுக் குழாயை பாதிக்கும் விஷயங்கள்

மாத்திரைகள், மன அழுத்தம், ஜீரண நோய்கள், அதிகமான மதுப் பழக்கம், போன்றவை உங்கள் உணவுக் குழாயின் செயல்களை பாதிக்கும் மிக முக்கிய காரனங்கள் ஆகும்.

 சூடு செய்யப்பட்ட உணவுகள் :

சூடு செய்யப்பட்ட உணவுகள் :

மறுமுறை அல்லது திரும்ப திரும்ப சூடு செய்து சாப்பிடும் உணவுகள் குடல் நொதிகளுடன் வேதிவினைகள் புரிந்து புற்று நோய் போன்ற அபாயங்களிய நமக்கு தருகின்றன. ஆகவே சூடு செய்யப்பட்ட உணவுகளை அறவே உண்ணக் கூடாது. பாலினை திரும்ப திரும்ப சூடுபடுத்துதல், குழம்பு குளிர்சாதனங்களில் வைத்து மீண்டும் சூடு படுத்துதலை தவிர்த்தால் ஆபத்தான குடல் நோய்களை தடுக்கலாம்.

எண்ணெய் :

எண்ணெய் :

கொழுப்பேற்றிய எண்ணெய்கள், வனஸ்பதி, டால்டா போன்ற கலப்படங்கள் நிறைந்த எண்ணெய்கள் குடலில் படிந்து மிகவும் பாதிப்புகளிய தரும். கல்லீரல் கொழுப்பு படிந்து கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். ஆகவே செக்கிலிருந்து பெறப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெயை அதிகம் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம் ?

குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம் ?

பூண்டு

பூண்டு குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆரஞ்சு :

ஆரஞ்சு :

வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் உள்ளன.

குடல் நோய்களால பாதித்துத் தேறியவர்களுக்கு இது நல்ல டானிக். அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும். குடலுக்கும் நன்மைகளிய தரும்.

 மாதுளை

மாதுளை

சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து இதில் மிகவும் அதிகம். ஓரளவு வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இருக்கின்றன.

பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of Damaged Intestinal flora and foods to eat and avoid.

Symptoms of Damaged Intestinal flora and foods to eat and avoid.