For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடும்போது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது! ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதால் உண்டாகும் உட்ல நலக் கேடுகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை எல்லாம் தற்காலத்தில் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது, இக்கால இளைய தலைமுறை, அவற்றின் நல்ல தன்மைகளை அறிய ஆர்வம் காட்டுவதில்லை, என்பதே கசப்பான உண்மையாகும்.

நம்மிடையே தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் சில பழக்க வழக்கங்கள் யாவும், நமக்கு சிறந்த தீர்வையே அளித்து வருகின்றன. ஆயினும், அவற்றின் உண்மை நிலையை, இக்கால தலைமுறைகள் அறியும் வண்ணம் நாம்தான், அவற்றை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

Reasons for why eating food at dining table is not good for health

இருந்தாலும் இக்கால தலைமுறையினரும், பாரம்பரிய பழக்கங்களை அவர்கள் அறியாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர், என்பதே உண்மை.
உதாரணமாக, கை கால்களைக் கழுவிய பின்னரே, வீட்டின் அறைகளுக்கு செல்ல வேண்டும், சாப்பிட வேண்டும், என்பதை நாமாக கற்றுக்கொண்டோமா?

நம் அன்னை தந்தை நமக்கு உரைத்ததை, நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லி வருகிறோம், அவர்களும் அப்படியே நடந்து வருகின்றனர், கால்களை கழுவாவிட்டாலும், கைகளை கழுவிய பின்னரே, சாப்பிடுகின்றனர், இதுவும், இன்றைய விஞ்ஞானம் சொல்லியா, அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்?

வெளியில் பல்வேறு இடங்களில் உள்ள கிருமிகள் நம் கை கால்களின் மூலம், வீட்டில் பரவாமல் தடுக்கவே, அவ்வாறு உரைத்தனர், கைகளை கழுவாமல் சாப்பிட்டால், கிருமி தொற்றினால், உடல் நலம் கெடும்.

அதைத் தவிர்க்கவே, கைகளை நன்கு கழுவிய பின்னரே உணவு அருந்தவேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும், பகுத்தறிவால் ஏற்பட்டதுதானே! முன்னோர் சொல்லியதால் அதை கடைபிடிக்கமாட்டோம், என்று கைகளை கழுவாமல் சாப்பிடலாமா?

இது போலவே, பல விசயங்களை, நாம் அனிச்சை செயலாக செய்து வருகிறோம், சிலவற்றை, நவீன காலத்தன்மைகளுக்கு ஏற்ப, உடல் வசதிக்காக மாற்றிக்கொள்கிறோம், அப்படி ஒரு மாற்றம்தான், டைனிங் டேபிளில் உணவு உண்பது.

உடலுக்கு சிரமம் இல்லாத வகையில் விரைவாக உண்ண முடியும்ம பரிமாற்ற எளிதானது என்று சிலப்பல காரணங்கள் சொல்லிக் கொண்டு, நாம் செய்யும் இந்த செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறோம். இது எந்த அளவுக்கு உண்மை? இதனால், நம் உடல் நலத்துக்கு தீங்கு ஏதும் இல்லையா?
உடல் உழைப்பு மிக்க வாழ்க்கை முறை!

நம் தாத்தா பாட்டிமார் எல்லாரும், உடல் உழைப்பு மிக்கவர்கள், தாத்தாக்களுக்கு வயல்வெளிகளில் உடலை வருத்தும் கடும் வேலைகள் என்றால், வீடுகளில் பாட்டிகளுக்கோ, கூட்டுக்குடித்தன பிள்ளைகளுக்கு சமைப்பதே பெரும் வேலையாகும், இத்துடன் வீடுகளில் உள்ள மாடுகளில் இருந்து பால் கறப்பது, அவற்றுக்கு நேரத்துக்கு தீவனம், புல் இடுவது என்று, ஒரே நேரத்தில் வீடுகளில் உள்ள மக்களையும், வீடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாக்களையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது.

இதோடு, துணி துவைப்பது, அம்மியில் அரைப்பது, குடக்கல்லில் மாவு ஆட்டுவது, உரலில் மாவு இடிப்பது, மர மத்தில் வெண்ணெய் கடைவது போன்ற அனைத்து வீட்டுவேலைகளும் அவர்கள்தான் செய்வர்.

ஆயினும் என்ன? வாழும்வரை, அவர்கள் நல்ல உடல் மனநலனுடனும், கிடப்பில்லாத இறப்பும் பெற்றே, மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்றைய தலைமுறையின் நிலை என்ன?

இன்றைய தலைமுறையின் நிலை என்ன?

சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்றைய வேகமான வாழ்க்கை முறையால், மருந்துகளுடனேயே பல சிறார்களின் இளமைக்காலம் ஆரம்பிக்கிறது என்பதை நாம் கண்டு, மன வேதனை அடைகிறோம்.

இவற்றையெல்லாம், எப்படி சரிசெய்வது?

இவற்றையெல்லாம், எப்படி சரிசெய்வது?

பிள்ளைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், வீடுகளில் இருக்கும் காலங்களில், நாம் சில அடிப்படை விசயங்களை, ஆணித்தரமாக, எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி, கடைபிடித்தாலே, அவர்கள் வாழ்வும், அவர்களின் மூலம் அவர்களின் சந்ததிகளுக்கும், உடலும் மனமும் நலமுடன் விளங்கும்,

நாம் படிப்பதும், வேலை செய்து சம்பாதிப்பதும், எதற்காக?

அவ்வைப்பாட்டி சொல்லும், "எண்சாண் வயிற்றுக்காக!", அந்த வயிறு பசித்தபின், உண்பதே, உடலுக்கு நலம் சேர்க்கும்.

தவறான அணுகுமுறை :

தவறான அணுகுமுறை :

உடைகளை மாற்றி, இலகுவான உடையுடன், தரையில் அமர்ந்து உண்பதே, சிறப்பாகும், உணவும் எளிதில் செரிமானமாகும். ஆயினும் நடப்பது என்ன?

நேரம் இல்லை, உடனே, வேலைக்கு போகணும் என்று அலுவலக உடைகளைக் களையாமல், இறுக்கமான உடைகளுடன், வேக வேகமாக உணவு மேஜையில் சாப்பிடுவது தவறு.

பரிமாறுதல் :

பரிமாறுதல் :

எனக்கு மூட்டு வலி, தரையில் அமர முடியாது, என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது, இதனால், என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்தோமா?

மேலும், பெண்களால், குனிந்து நிமிர்ந்து உணவுகளைப்பரிமாற முடியவில்லை, எளிதாக பரிமாற வசதி என்று, பாதிப்புகளை உணராமல், டைனிங் டேபிளை வீடுகளில் அத்தியாவசியப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்.

இதைவிட, பாதிப்புகள் மிக்க மற்றுமொரு உணவுமுறை, தற்கால வேகமான வாழ்க்கையின் ஒரு அங்கமான, பஃபே ஸ்டைல் மற்றும் நின்றுகொண்டே சாப்பிடும் கையேந்தி பவன்களின் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்.

டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

கால்களை தொங்கவிட்டு அமர்ந்து சாப்பிடுவதால், இரத்த ஓட்டம் கால்களில் மட்டும் இயங்கிறது. இதனால், உடலில் ஆற்றல் மையங்களான மூளை, நுரையீரல், சிறுநீரகம் இவற்றுக்கு இரத்த ஓட்டம் செல்லாமல், அவற்றின் இயக்கத்தில் தடைகள் ஏற்பட்டு, அதுவே, செரிமானக் கோளாறு போன்ற பல உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

இதனாலேயே, டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பதை, தவிர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தரையில் அமர்ந்து சாப்பிடுதல் :

தரையில் அமர்ந்து சாப்பிடுதல் :

பொதுவாக வெறும் தரையில் அமர்ந்து யாரும் சாப்பிடுவதில்லை, தரையில், ஈச்சம் இலைகளால் செய்யப்பட்ட தடுக்கு மேல் அமர்ந்தோ, பந்திப்பாய் எனும் பனை ஒலைப்பாய்களில் அமர்ந்தோ, கால்களை சம்மணமிட்டு அமர்ந்து, வாழை இலைகளில் உணவைப்பரிமாற, மெதுவாக உணவை நன்கு மென்று சாப்பிடுவர்.

உணவு பிடித்ததாக இருந்தால், அள்ளியள்ளி நிறைய சாப்பிடுவது, பிடிக்காத உணவு எனில், வேண்டாவெறுப்பாக சாப்பிடுவது போன்று இல்லாமல், நிதானமாக, இலையில் இடப்பட்ட உணவுகளை, அளவோடு உட்கொள்வர்.

செரிமானம் :

செரிமானம் :

காலை மடித்துவைத்து, சம்மணமிட்டு சாப்பிட்டுவருவதால், உடலில் உள்ள இரத்த ஓட்டம், கால்களுக்கு செல்லாமல், வயிற்றுப்பகுதியில் ஆற்றலை அளித்து, உண்ட உணவு விரைவில் செரிமானமாகி, உடல் நலம் சீராகும்.எனவேதான், தரையில் அமர்ந்து சாப்பிடுவதை, பெரியோர்கள் வலியுறுத்தி வந்தனர்.

 நன்மைகள் :

நன்மைகள் :

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் உள்ள இராஜ உறுப்புகள் எனும் மூளை, கண்கள், நுரையீரல், கல்லீரல் மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு இரத்த ஒட்டம் சீராக சென்று, ஆற்றல்சக்தி, உடலில்பரவி, உடல் ஆரோக்கியம் மேம்பட, காரணமாக அமைகிறது.

தரையில் அமர முடியாதவர்கள் என்ன பண்ணலாம்?

தரையில் அமர முடியாதவர்கள் என்ன பண்ணலாம்?

விருப்பம் இருக்கு ஆனால், என்னால் தரையில் அமர்ந்து சாப்பிட முடியவில்லையே!

டைனிங் டேபிளில் அமராமல் என்னால் சாப்பிட முடியவில்லை என்பவர்கள், கால்களை தொங்க விடாமல், மடித்து வைத்து உட்கார்ந்து சாப்பிடலாம், ஆயினும், இறுக்கமான உடைகள், உங்களுக்கு, வேதனையை அளிப்பதுடன், உணவையும் சரியான முறையில் சாப்பிடமுடியாத அளவில் வைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons for why eating food at dining table is not good for health

Reasons for why eating food at dining table is not good for health
Desktop Bottom Promotion