இரண்டு ஆண்குறியுடன் வாழ்ந்து வரும் விசித்திர ஆண்!

Posted By:
Subscribe to Boldsky

இரண்டு ஆண்குறியுடன் வாழ்ந்து வரும் இந்த நபரை டிஃப்ஹாலிக் ட்யூட் (Diphallic Dude - Double Dick Dude) என அழைத்து வருகிறார்கள்.

இவர் 1989ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவருக்கு படிப்பதும், பயணிப்பதும் மிகவும் பிடித்த வேலைகள். இத்தாலியன் உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.

2014ல் ரெடிட் "ஆஸ்க் மீ எனிதிங்" என்ற நிகழ்வில் பங்குபெற்ற போது, தனது இரண்டு ஆணுறுப்புகளின் படத்தை வெளியிட்டார். அந்த ரெடிட் பதிவு சமூக தளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

இரண்டு ஆணுறுப்புடன் பிறக்கும் நிலையை "diphallia" என மருத்துவ முறையில் கூறுகிறார்கள். இது போன்ற தாக்கம் அமெரிக்காவில் 55 இலட்சம் பேரில் ஒருவரிடம் காணப்படுகிறது என கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாக்கம்!

தாக்கம்!

இந்த "diphallia" தாக்கம் கொண்டுள்ளவர்களது ஆண்குறிகள் சாதாரண அளவில், வடிவில், செயல்திறனுடன் இருக்கும்.

ரெடிட் பதிவு வைரலான பிறகு டிஃப்ஹாலிக் ட்யூட் "Double Header: My Life With Two Penises" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவரது காதல் வாழ்க்கை மற்றும் அதில் அவரது இரண்டு ஆண் குறிகள் மூலம் உண்டான தாக்கங்கள் குறித்தும் கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரை!

கிழக்கு கடற்கரை!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வாழ்ந்து வரும் 27 வயது மிக்க டிஃப்ஹாலிக் ட்யூட் தன்னை பை-செக்சுவல் என்று கூறிக் கொள்கிறார்.

"இந்த சமூகம் ஒருவர் வித்தியாசமாக இருந்தால், அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொள்ள தடுமாறுகிறது, மறுக்கிறது" என டிஃப்ஹாலிக் ட்யூட் கூறுகிறார்.

எல்லாரும் ஒன்று தான்...

எல்லாரும் ஒன்று தான்...

"இது ஒன்றும் நான் பெற்று வந்த வரம் அல்ல. விபத்தாக, இயற்கையாக நடந்த ஒன்று. வெளிப்படையாக காணும் போது நானும் மற்ற நபர்களை போல ஒருவன் தான். எனக்கும் உணர்வுகள், கனவுகள், நம்பிக்கை, அச்சம் போன்றவை இருக்கின்றன.

ஆனால், ஒருவரை ஒருவருடன் ஒப்பிடும் போது ஒரு அசௌகரிய சூழல் உண்டாகிறது. அப்போது தான் இந்த உலகம் இன்னும் நல்ல இடமாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது." என தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் டிஃப்ஹாலிக் ட்யூட்.

விறைப்பு பிரச்சனை!

விறைப்பு பிரச்சனை!

"Diphallia" இருந்தால் விறைப்பு பிரச்சனை ஏற்படும் என கூறுகிறார்கள். ஆனால், டிஃப்ஹாலிக் ட்யூட் மற்ற ஆண்களை போல சாதாரணமாக தான் காணப்படுகிறார்.

நான் மற்ற ஆண்களை போல நார்மலாக இருப்பது என்னை மகிழ்ச்சியாக இருக்க செய்கிறது. இளம் வயதில் ஒரு முறை சிறுநீர் குழாய் பிரச்சனை ஏற்பட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டேன். மற்றபடி எனது ஆண்குறியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார் டிஃப்ஹாலிக் ட்யூட் .

ஒருமுறை...

ஒருமுறை...

பதின் வயதில் ஒருமுறை இரண்டாவது ஆண்குறியை நீக்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டிருந்ததாகவும். பின்னாட்களில் நீண்ட விவாதம் மற்றும் பலரின் ஆலோசனையின் படி அந்த எண்ணத்தில் இருந்து வெளிவந்துவிட்டதாகவும் டிஃப்ஹாலிக் ட்யூட் கூறியுள்ளார்.

"சிலர் தங்கள் உடல் வடிவம் கொண்டு அசௌகரியங்கள் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூற விரும்புவது ஒன்று, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதன்படியே உங்களை நீங்கள் விரும்ப வேண்டும். மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம்." - டிஃப்ஹாலிக் ட்யூட் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet the Man with Two Penises!

Meet the Man with Two Penises!
Subscribe Newsletter