நோய் தீர்க்கும் இந்த முக்கியமான ஹெர்பல் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கீங்களா?

Written By:
Subscribe to Boldsky

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கின்றன.

பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள், கடுகு, இஞ்சி பூண்டு என பலவற்றையும் அவை நோய் தீர்க்கும் குணத்தையும் பற்றியும் பார்த்திருப்பீர்கள்.

Magical herbs that heal various health issues

இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கணக்கிலடங்காதது. அவ்ற்றில் சிலவகைகளாவது நாம் தெரிந்து வைத்தால் நமக்குதானே நல்லது.

அவ்வகையில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளும், அவை எந்த நோய்க்கு மருந்தாகிறது என்பதையும்தான். தொடர்ந்து பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருமல் :

இருமல் :

ரோஸ்மெரி மார்புச்சளியை கரைக்கும். தொண்டையில் உண்டாகும் கரகரப்பு மற்றும் நமைச்சலை கட்டுப்படுத்தும். அதிலுள்ள ஆற்றல் கிருமித் தொற்றை அழிக்கும். அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. ரோஸ்மெரி எண்ணெயையும் நுகர்வதால் பலன் தரும்.

குடல் தொற்று :

குடல் தொற்று :

குடலில் குறிப்பாக குழந்தைகள் கண்டதையும் வாயில் வைப்பதால் எளிதாக குடலில் பேக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளும். இதனை தவிர்க்க சபக்கி கீரையை வாங்கி உணவில் சமைக்கலாம். இதில் லைமோனைன் என்ற பொருள் உள்ளது. இது கிருமிகளை அழிக்கும் பண்பை பெற்றுள்ளது.

மாதவிடாய் வலி:

மாதவிடாய் வலி:

மாதவிடாயின்போது உண்டாகும் உடல் வலி, இடுப்பு வலி, சதைப்பிடிப்பிற்கு ஓமம் அருமருந்தாகும். ஓமத்தை 1 ஸ்பூன் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வலி குணமாகும். புத்துணர்வையும் தரும்.

கடின தாதுக்கள் :

கடின தாதுக்கள் :

நமது உடலிலிருந்து வெளியேறாத தாதுக்கள் சேர்த்து கல் போன்று சிறு நீரகத்தில் உண்டாகிவிடும். அதோடு அவை மன அழுத்ததையும் தரும். இதனை தவிர்க்க, கொத்துமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கார்பாக்ஸிலிக் அமிலம் கடின தாத்துக்களையும் நச்சுக்களையும் வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது.

சிவப்பு மிளகாய் :

சிவப்பு மிளகாய் :

சைனஸ் பிரச்சனை நிறைய பேருக்கு பாதிப்பை தரும். காயாத சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

வயிற்று வலி உப்புசம், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றை குணப்படுத்த புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா சாறு அல்லதுதுவையல் என எடுத்துக் கொண்டால் வயிற்றுவலி குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Magical herbs that heal various health issues

Magical herbs that heal various health issues
Story first published: Wednesday, February 8, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter