"கண்மணி நீ வர காத்திருந்தேன்"- எந்த பாட்டு எந்த நோயை குணப்படுத்தும் ?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

சிலர், மன அழுத்தம் ஏற்பட்டு மனச்சோர்வடையும் நேரங்களில், தங்களுக்கு பிடித்த இசையை ஒலிக்கவிட்டு தியானம் செய்வது போல, அமைதியாக அமர்ந்து விடுவர், இதயத்தை வருடி அவர்களை மன அமைதிப்படுத்தும் அந்த இசையைக் கேட்டபின்னர், மன அழுத்தம் நீங்கி, இயல்பு நிலைக்குத் திரும்புவர். நல்ல இசை எப்போதும், நம்மை இளமையாக வைத்திருக்கும், நல்ல இசை என்பது, காதுகளில் இல்லை, நம் மனங்களில் இருக்கிறது!

நாம் அறிந்திருப்போம், கர்நாடக சங்கீத பாடகரோ, திரை இசைப் பாடகரோ குரல்வளம் உள்ளவரை, அவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். டி.எம்.எஸ் அவர்கள் வயது முதிர்ந்த நிலையிலும் கணீர் குரலில் பாடி, முதிர்வு என் உடலுக்குத்தான், குரலுக்கு இல்லை என்று நிரூபித்தவராயிற்றே.

பாட்டுக்கள் குணப்படுத்தும் நோய்கள்

ஜானகி அம்மா அவர்களும் எண்பதைக் கடந்த அகவையிலும், பாடி, தற்போதுதான், அவராகவே, அதுவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க நான் விலகுகிறேன் என்று கச்சேரிகளில் பாடுவதில் இருந்து விலகிக்கொண்டார்கள்.

பாடகர்கள் தான் என்றில்லை, இசையமைப்பாளர்கள், வாத்தியங்கள் வாசிப்போர் யாவரும் தம் வாழ்நாள் வரை, இசையோடே வாழ்கிறார்கள், வாழ்வதோடு மட்டுமல்ல, மனதில் என்றும் இளமையுடனேயே இருக்கிறார்கள், அதனால்தானே, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் பாடிய பாடல்கள், அமைத்த இசையை இன்றும் ஞாபக மறதி இன்றி, பிசிறு தட்டாமல் பாடவும், இசைக்கவும் முடிகிறது என்றால், அதுதான் இசையின் சிறப்பு!

நமக்கு பிடித்த இசையை, நாம் இரசிக்க, நல்ல கேட்கும் திறனுடன், நினைவு ஆற்றல் மிகுந்து, வயோதிக நிலையிலும், உடல் தளர்வின்றி, உற்சாகமாக இயங்க முடிகிறதென்றால், அதற்கு காரணம் இசையே, என்பதை விரிவாகக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளமையுடன் இருக்க விருப்பமா?

இளமையுடன் இருக்க விருப்பமா?

நமக்கு பிடித்த ஒரு இசைக்கருவியை நாம் இசைக்கப் பழகுவதன் மூலம், நாம் இளமைத் தன்மையைத் தக்க வைக்க முடியும். இசைக்கருவிகளை தினமும் இசைத்து வருவதன் மூலம், ஞாபக சக்தி அதிகரிக்கிறது, செவிகளின் கேட்கும் ஆற்றல் தெளிவாகும் என்பதற்கும் மேலாக, இசைக்கருவிகளை இசைப்பதன் மூலம், மனதின் ஆற்றல் அதிகரித்து, உடலும் மனமும் இலேசாகிறது, உடல் தசைகள், நரம்புகள் புத்துணர்வடைகின்றன.

ரசிப்பு :

ரசிப்பு :

எனக்கு இசைக்கருவிகள் வாசிக்க விருப்பம் இருந்தாலும், வாய்ப்புகள் இல்லையே, ஆனாலும், நான் இசையை இரசிக்கிறேன்!, நல்லது. எல்லோருக்கும் இசையை வாசிக்க வாய்ப்புகள் கிடைக்காது தான், ஆயினும், நல்ல இசையை கேட்டு இரசிக்க முடியுமே, முன்னோர்கள் எல்லாம் மன மகிழ்வுக்கோ நல்ல பொழுதுபோக்குக்கோ, திரைப்படங்கள் வராத காலகட்டத்திலும், வந்தபின்னும்கூட, என்ன செய்வார்கள் தெரியுமா?

கர் நாடக இசை :

கர் நாடக இசை :

வாய்ப்பாட்டு எனும் கர்நாடக சங்கீத கச்சேரிகளை கண்டு, கேட்டு இரசிப்பார்கள், அதில் வயலின், கடம், கஞ்சிரா, புல்லாங்குழல், மிருதங்கம் வீணை போன்ற பாரம்பரிய இசை வாத்தியங்கள் இணைந்திருக்கும். அக்காலத்தில் புகழ் மிக்க பாடகர்கள் இருந்தார்கள், ஊர்ப்பெயரை கொண்டு அழைக்கப்பட்ட, செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், செம்மங்குடி சீனிவாச அய்யர் போன்ற ஜாம்பவான்கள் கர்நாடக சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்தார்கள்.

பக்கவாத்தியத்தில் தனித் திறமைமிக்க வயலின் குடந்தை இராசமாணிக்கம் பிள்ளை, கடம் உமையாள்புரம் கோதண்டராமன், காருகுறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம், தவில் தெட்சிணாமூர்த்தி போன்ற இசை மேதைகள், இசை உலகை ஆண்ட காலமது.

அந்த கர்நாடக சங்கீத இசையே, நம் முன்னோர்க்கு சிறந்த பொழுதுபோக்காகவும், மனமும் உடலும் இலேசாக ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது, பின்னர் இரவு நேரங்களில் வானொலியிலும் கர்நாடக இசைக் கச்சேரி தினமும் ஒலிபரப்பாகும், அதுவே, அவர்களுக்கு மன மகிழ்வு தரும் நிகழ்வுகளாக அமைந்தன.

இதுபோன்ற இசையை இரசித்து, மனமும் உடலும் இலேசாகி, நல்ல உடல் வலுவுடன், மனதளவில் குழந்தைகளைப்போல, மலர்ந்த முகத்துடன், இறுதிக்காலம் வரை, வியாதிகள் இன்றி வாழ்ந்து மறைந்தார்கள்!

இன்று மலர்ந்த முகத்தை காண்பது அரிதாகிவிட்டது. பெரும்பாலும் ரோபோக்கள் போல சீரியசான முகங்கள், இதுவே, இன்றைய தலைமுறைகளின் பெரும்பான்மை மனநிலையாக இருக்கிறது, மனங்கள் மலரட்டும்!

நல்ல இசை நமக்கு என்ன தரும்?

நல்ல இசை நமக்கு என்ன தரும்?

நல்ல இசை, நமக்கு எல்லாம் தரும்! எதையும் ஆதாயத்தோடு அணுகும் மனநிலையே பொதுவாக எங்கும் பரவிவிட்டதால், இசையைக் கேட்டால் எனக்கு என்ன பயன், என்று சிலர் கேட்கலாம்.

"அலைகடலில் ஊசலாடும் படகைப்போல துன்பத்தில் தத்தளிக்கும் மனதை, ஆழ்கடலில் அமைதியாக செல்லும் ஓடம் போல, நல்ல இசை அமைதிப்படுத்தும்!."

மனம் அமைதியான பின்னே, தானாகவே இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம், வேதனை, கோபம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் சீரற்ற நிலையில் இயங்கிய இதயத்துடிப்பு இயல்பாகும், இயல்பான மனதை மேலும் இலகுவாக்கி, ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவச்செய்யும் இனிய நல்லிசை!.

இசையைத் தேடிச்சென்று கேட்க வேண்டியதில்லை, இருக்கும் இடத்திலேயே கேட்கலாம், கேட்டு மன இறுக்கமெல்லாம் விலகி, இலகுவாகலாம், எப்படி?

காலையில் உகந்த பாடல் :

காலையில் உகந்த பாடல் :

காலையில் - பூபாள இராகம் - ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி....., செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்...,

Image Courtesy

மாலையில் :

மாலையில் :

மாலையில் - மலைய மாருதம், சக்ரவாக இராகங்கள் - கண்மணி நீ வரக் காத்திருந்தேன்..., பூப்பூக்கும் மாசம் தை மாசம்..., நீ பாதி நான் பாதி கண்ணே,

மனதை உருக வைக்க :

மனதை உருக வைக்க :

கல்மனதையும் கரைய வைக்கும் - அரி காம்போதி இராகம் - பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்..., உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்...

மனதை இலேசாக்கும் - ஆனந்த பைரவி, சகானா, ஸ்ரீ ரஞ்சனி இராகங்கள் - நாதம் எழுந்தடி கண்ணம்மா..., கற்பக வள்ளி நின் பொற்பதங்கள் பணிந்து.....

அம்சத்வனி - அழகென்ற சொல்லுக்கு முருகா.., தோகை இளமயில் ஆடி வருகையில்., வாராய் நீ வாராய்.... , இரு விழியின் வழியே நீயா வந்துபோனது...

பூங்காத்து திரும்புமா - கரகர பிரியா

மன வாட்டம் போக்க - முகாரி

சொல்லடி அபிராமி ,- எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே..

தலைவலி போக்க :

தலைவலி போக்க :

மகிழ்ச்சி - தானா வந்த சந்தனமே, - கரகரப்பிரியா

தலைவலி தீர - சாரங்கா, தர்பாரி - ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ.., இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்......

போன்ற பாடல்களை தினமும் கேட்டுவர, மாற்றங்களை உணர முடியும்.

மனதை ஆட்டுவிக்கும் இசை :

மனதை ஆட்டுவிக்கும் இசை :

கிராமங்களில் வசிப்போர் கோவில் திருவிழாக்காலங்களில், துள்ளிசை ஒலிக்கும் ஆடலோடு பால் குடம், காவடி, அலகு குத்தி இசையோடு கலந்த பக்தி முழக்கங்களோடு ஊர்வலம் வருவர், அந்த இசையொலி நம்மைக் கடந்து செல்லும்போது, பறை, உறுமி, உடுக்கை மற்றும் தவில் நாதஸ்வரம் போன்ற பழமையான இசைக்கருவிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, நம்மை அறியாமல், ஒரு துள்ளல் வருமே, அதுதான், நம் மனதை, மன இறுக்கத்தில் இருந்து விடுவித்து, நம் சிந்தனையை மாற்றி, மனதில் எழுச்சியான அமைதியைக் கொடுக்கும். இந்த துள்ளல் இசையே, சிலருக்கு மன எழுச்சியை அதிகரித்துவிடும் தன்மை காரணமாக, ஆவேசம் கொண்டு சாமியாடுதல் எனும் நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் தன்மை மிக்கது.

பனிக்காலங்களில் பஜனை

பனிக்காலங்களில் பஜனை

தற்காலங்களில் நகரங்களில் கூட, ஆடி மாதங்களில் நள்ளிரவில், நவீன கால டிரம்ஸ், நாயனம், மற்றும் மேள தாளம் முழங்க சுவாமிகள் ஊர்வலத்தின்போது, அதிக ஒலியில் இசைக்கும் பக்தியோடு பாரம்பரியமும் நவீனமும் கலந்த துள்ளல் இசை, நம்மை ஒரு வினாடி, மெய் சிலிர்க்க வைத்து, நம் அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்தி, அமைதியாக்கியிருக்குமன்றோ!., அனுபவித்திருப்போம் தானே!

வியாதிகள் போக்கும் :

வியாதிகள் போக்கும் :

இதுபோலவே, பயணங்களில் கடக்கும் ஊர்வலங்களில் காணும் இன்னிசையும் நம் மனதை, நொடியில் இலகுவாக்கும் தன்மைமிக்கது.

இதன் காரணமாகவே, தற்காலங்களில் இசை மருத்துவம் எனும் புது சிகிச்சை முறையின் மூலம், மன சோர்வை நீக்க முடியும், வியாதிகளைப் போக்க முடியும்.

சுகப்பிரசவம் நடக்கும் :

சுகப்பிரசவம் நடக்கும் :

கர்ப்பிணிப்பெண்கள் சுகப்பிரசவம் அடைய முடியும், ஏன் மரம் செடி கொடிகளைக் கூட, நல்ல இசையின் மூலம், செழித்து வளர வைத்து, அவற்றின் காய்ப்பின் அளவை அதிகரிக்க முடியும் என்கின்றனர், இசை ஆய்வாளர்கள். என்ன, கேட்கும்போதே, ஆர்வமாக இருக்கிறதா, இந்த இசைதெரபியின் மேல்?

இசையால் மலையையே கரைய வைத்தவர்கள் பண்டைத் தமிழ்ச் சித்தர்கள், அதுபோல, அக்பர் அரசவையின் இசை வித்தகர் தான்சேன், குறிப்பிட்ட இராகத்தில் இசைத்து, இசையால், விளக்குகளை எரிய வைத்தவர். இவ்வளவு ஏன், சமீப காலங்களில் மழைக்காக இசை அறிஞர்கள் சேர்ந்து, இசை வேள்வி செய்யவில்லையா?

தினமும் இருவேளை, அந்தந்த வேளைக்கு உகந்த சில குறிப்பிட்ட இராகத்தில் அமைந்த பாடலைப் பாடி வர வேண்டும், பாடத்தெரியாதவர்கள், பாடலை ஒலிக்க விட்டு, கேட்டு வரலாம்.

இதன் மூலம், அந்த இசையின் அதிர்வுகள் நல்லவண்ணம் மனதிலும், உடலிலும் செயலாற்றி, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பாகிறதாம். உதாரணமாக காலை வேளையில், பூபாள இராகம், மலைய மாருதம், அரி காம்போதி, அம்சத்வனி போன்ற இராகங்களில் அமைந்த இசையையோ, பக்திப்பாடல்களையோ தொடர்ந்து கேட்டு வரலாம்.

வயலின் :

வயலின் :

வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் இசையில், சென்னையின் தண்ணீர் பஞ்சம் போக்க புழல் ஏரியில் நின்று அமிர்தவர்ஷினி இராகத்தில் வயலின் வாசிக்க, மேகங்கள் திரண்டு மழை பெய்தது என்றும், இராக ஆராய்ச்சி மையம் நிறுவி, இசையின் மூலம் மனிதரின் வியாதிகள் நீங்குவது மட்டுமல்ல, மரம் செடிகள் கூட, இசையால் நன்கு செழித்து வளரும் என்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, வயலின் மேதை குன்னக்குடி அவர்கள் உலகிற்கு உணர்த்த முற்பட்டதை, அறிவோமா நாம்?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் 2001 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய இசை வேள்வி பற்றி, நமது தளத்தில் வந்த செய்தியை, இணைப்பில் காணலாம்.

வியாதிகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

வியாதிகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

மனதை புத்துணர்வாக்கி, மனதையும் உடலையும், இலகுவாக்க, நல்ல இசை உறுதுணை புரியும். குறிப்பிட்ட இராகங்களில் அமைந்த, பாரம்பரிய இசையை அல்லது பக்திப் பாடல்களைத் தொடர்ந்து கேட்டுவர, மாற்றங்களை விரைவில் உணரலாம். சில இராகங்கள் உடல் வியாதிகளை சரிசெய்யும் வல்லமைமிக்கவை.

திரை இசையிலும், இராகங்களின் பயன்பாட்டில் பல இனிய பாடல்கள் உள்ளன, அவையும், நமக்கு அருமருந்தாக அமைந்து, உடல் மன நலத்தை சீராக்கும்.

எந்த இராகங்கள் என்ன பாதிப்புகளை சரிசெய்யும் என்பதை அடுத்து வரும் குறிப்புகளின் மூலம், அந்த இராகங்களில் அமைந்த திரை இசைப்பாடல்களைத் கேட்டு வருவதன் மூலம், நாம் உணர முடியும்.

சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ சுவாமிகள் "பிலஹரி" எனும் இராகத்தில் "நா ஜீவா தாரா" என்று பாட, இறந்தவர் எழுந்த அதிசயமும் நடந்திருக்கிறது. இராகங்களின் அடிப்படையில் அமைந்த மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் பலவும், உடல் உபாதைகள், மன பாதிப்புகளை போக்க வல்லவை என்பதை அடிக்கடி பெரியோர் சொல்வர்.

இசையைக்கேட்டவுடன் என்ன நடக்கிறது?

இசையைக்கேட்டவுடன் என்ன நடக்கிறது?

குறிப்பிட்ட இசையால் தூண்டப்பட்ட ஹார்மோன்கள், மூளையின் உணர்வுகளைத் தூண்டி, அவை இரத்த ஓட்ட மண்டலத்தில் அதிர்வேற்படுத்தி, சுவாசத்தை சரியாக்கி, இரத்த அழுத்தம், உள்ளிட்டவற்றை சீராக்கி, மனதை அமைதியாக்குகிறது, என்கிறது இன்றைய விஞ்ஞானம். நல்ல இசையைக் கேட்பதன் மூலம், ஆழ்மனதில் எண்ணங்களை வலுவாக்கி, இலட்சியத்தை உறுதியாக அடைய வாய்ப்பாகும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Listening to the music is the great therapy to cure diseases

Listening to the music is the great therapy to cure diseases