Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
வெல்லத்தை எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம்னு உங்களுக்கு தெரியுமா?
வெல்லத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
வெல்லம் ஒரு இனிப்பு சுவை உடைய ஒரு பொருள். பழங்காலத்தில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த வெல்லத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் ஒரு இனிப்பாகும் . இதன் நன்மைகளை பற்றி இப்போது காண்போம்.
வெல்லம் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை தீர்க்கிறது. உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கிறது. மற்றும் பல நன்மைகளை கொண்டுள்ளது.

இப்போது சந்தைகளில் பல விதமான இனிப்புகள் கிடைக்கப்படுகின்றன. ஆனால் அவை யாவும் வெள்ளை சர்க்கரையால் தயாரிக்கப்படுகின்றன. அவைகள் வெறும் இனிப்புகள் மட்டும் தான். இதனை உண்பதால் எந்த ஒரு பலனும் உடலுக்கு கிடைக்க போவதில்லை. மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படும். இதற்கு மாற்றாக நாம் வெல்லத்தை கொண்டு செய்த இனிப்புகளை சுவைக்கும் போது இது நாவிற்கு சுவை தரும். உடலுக்கும் வலு சேர்க்கும்.
ஒரு சிறிய சோதனை. நீங்கள் ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரையை எடுத்து வாயில் போடுங்கள். அது கரைந்தவுடன் வெல்லத்தை எடுத்து வாயில் போடுங்கள். வெள்ளை சர்க்கரையின் சுவை உங்கள் நாவிலிருந்து உடனடியாக மறைந்து விடும். வெல்லத்தின் சுவை நீண்ட நேரம் உங்கள் வாயில் இருக்கும்.

செரிமானத்தை சீராக்குகிறது:
ஒரு சுவையான விருந்திற்கு பிறகு சிறிது வெல்லம் சாப்பிடுவது ஜீரணத்தை எளிதாக்கும். குறிப்பாக இறைச்சி சாப்பிட்டவுடன் சிறிது வெல்லம் சாப்பிடுவதை இன்றும் சிலர் பழக்கமாக பின்பற்றுகின்றனர். செரிமான என்சைம்களை ஊக்கப்படுத்தி தானே அசிட்டிக் அமிலமாக மாறி செரிமானத்தை வேகப்படுத்துகிறது.
உடலை சுத்தம் செய்வதற்கு பொதுவாக இனிப்புகள் பயன்படுவதில்லை. ஆனால் வெல்லம் உடலின் சுவாச பகுதி, நுரையீரல், உணவு குழாய், வயிறு மற்றும் குடல் ஆகியவற்றை சுத்தீகரிக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட விஷயமாகும்.

மலச்சிக்கலை தீர்க்கிறது:
வெல்லத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வெல்லம் உடலில் உள்ள குப்பைகளை அகற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீர்க்கப்படுகிறது. மலச்சிக்கல் தீக்கப்படுவதாலும், சீரான குடல் இயக்கங்களாலும் , மேலும் உடல் சுத்தீகரிக்கப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் மொத்தமாக வெளியேறுகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது:
கார்போஹைரேட் மூலமாக உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. உடனடியாக ஆற்றலை அதிகரிப்பதால், சோர்வாக இருப்பவர்களும் விளையாட்டு வீரர்களும் சர்க்கரை மற்றும் க்ளுகோஸ் உட்கொண்டு உடனடி ஆற்றலை பெறுகின்றனர்.
இவை ஒரு சிறந்த கார்போஹைடிரேட் ஆகும். வெள்ளை சர்க்கரையும் க்ளுகோஸும் வேகமாக இரத்தத்தில் கலந்து ஆற்றல் அதிகரிக்கிறது. ஆனால் இந்த முறையில் ஆற்றல் அதிகரிப்பதை சில மருத்துவர்கள் தவறு என்கின்றனர்.
திடீரென்று அதிகரிக்கும் ஆற்றலால் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் , அதுவும் குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களை இது அதிகம் பாதிக்கும்.
இந்த நிலையில் நாம் வெல்லத்தை பயன்படுத்தும்போது , அதிலுள்ள கார்போஹைரேட் உடலில் செரிக்கப்பட்டு படிப்படியாக ஆற்றலை மேம்படுத்துகிறது. இதன்மூலம் மேற்கூறிய அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன.

மினரல்கள் அதிகம் :
சர்க்கரை போலில்லாமல், வெல்லத்தில் இரும்பு சத்தும் மற்ற மினரல்களும் அதிகமாக காணப்படுகின்றன. வெல்லம் தயாரிப்பதில் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதால் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
கரும்பிலிருந்து வெல்லம் தயாரிப்பதால், கரும்பில் இருக்கும் மினரல்கள் நேரடியாக வெல்லத்தில் இருக்கின்றன. இதற்கு காரணம் கரும்பில் இருந்து வெல்லம் தயாரிப்பதில் எந்த ஒரு சுத்திகரிப்பும் செய்ய படுவதில்லை. ஆகையால் வெல்லம் உடலுக்கு மினரல்களை பெற்று தருகிறது.

வெல்லத்தின் பிற பயன்பாடுகள்:
கட்டுமான பணிகளில் பயன்படுத்துவர்:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெல்லம் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக சிமெண்ட் உடனடியாக கிடைக்காத இடங்களில் , வெல்லத்தை எலுமிச்சை, மணல், களிமண் போன்றவற்றுடன் சேர்த்து செங்கற்களை சேர்த்து கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் இன்றும் வெல்லத்தால் செய்த கட்டிடங்களை பார்க்கலாம்.

டூத் பேஸ்ட்டில் வெல்லம் :
இந்தியாவின் பல இடங்களில், தரத்தில் குறைந்த ரக வெல்லத்தை புகையிலையுடன் சேர்த்து டூத் பேஸ்ட் செய்வதில் பயன்படுத்துகின்றனர்.அரசுக்கு இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. இது பல கிராமங்களில் பரவலாக புகழ் பெற்ற ஒரு தயாரிப்பாகும். ஆனால் வெல்லத்துடன் புகையிலை சேர்ப்பதால், உடலுக்கு எந்த ஒரு நலனையும் கொடுப்பதில்லை.

கால்நடைகளுக்கு உணவு:
கால்நடை தீவனத்துடன், குறைந்த ரக வெல்லத்தை சேர்த்து கொடுப்பது , கால்நடைகளுக்கு ஒரு மாற்று சுவையாக இருக்கும். அதனால் அவைகள் அதிகமான உணவை உட்கொள்கிறது. அதிலிருந்து கிடைக்க படும் பாலும் சுவை நிறைந்ததாக இருக்கிறது.

வெல்லத்தை சேர்த்து கொள்ளும் வழிகள் :
காஃபி அல்லது டீ பருகும்போது வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பழச்சாறு தயாரிக்கும்போது வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை சேர்க்கலாம்.
சர்க்கரையில் செய்த இனிப்புகளை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்காமல், வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை, பொட்டுக்கடலை உருண்டை போன்ற வெல்லம் சேர்த்த இனிப்புகளை கொடுக்கலாம்.
நமது பாரம்பரிய உணவான வெல்லத்தை நமது உணவில் சேர்த்து அதன் ஆரோக்கிய பலன்களை அனுபவிப்போம்.



Click it and Unblock the Notifications











