நீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷ் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி மோசமாக்கும் என தெரியுமா?

Written By: Bala Karthik
Subscribe to Boldsky

பெரும்பாலும் 90 சதவிகித பேர், காலையில் பல் துலக்கும் பழக்கத்தை தினசரி வைத்திருக்கிறார்கள். ஏனெனில், இதனால் நாம் மிக ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நாம் பின்தொடரவேண்டிய தேவையான ஒரு பழக்கமாகவும் இது அமைகிறது.

இன்றைய உலகில், தினசரி நம் பற்களை துலக்குவதால் நம் தனிப்பட்ட சுகாதாரமானது மேம்படுகிறது என்பதனை உணர்ந்திருக்கிறோம் என்பதே உண்மை. அத்துடன் பல் இடுக்குகளையும் இது பாதுகாக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம்.

This Is How Your Toothbrush Can Be Very Dangerous For Your Health!

நீங்கள் தினசரி ஒரு முறையாவது உங்கள் பற்களை துலக்குவதில்லை என்றால்... இதனால், உங்கள் பற்களில் கறைகள் படிய வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. அத்துடன் பற்களின் இடுக்கில் சீமை சுண்ணாம்பு போன்ற பொருளும் சேர்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, நாம் உண்ணும் உணவின் தேக்கங்கள் சென்று பற்களின் இடுக்கில் சேருவதனாலே என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், சுகாதாரமற்ற பற்களால் நிறைய பேருக்கு இதய நோய்கள் கூட உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆம், நம் வாயில் இருக்கும் பேக்டீரியாவானது, இதயத்தை நோக்கி இரத்தம் மூலம் நகர்ந்து செல்கிறது.

பழங்காலத்தில், அனைவரும் தங்கள் பற்களை பாதுகாக்க  வேப்பங்குச்சியை பயன்படுத்தினார்கள். அவர்கள் பல் துலக்கியவுடன், அந்த பொருளை தூர எறிந்து அடுத்து நாள் மற்றுமோர் (கரிஅல்லது வேப்பங்குச்சி) புதிய பொருளை எடுத்து துலக்குவது வழக்கமாகும்.

ஆனால், இன்றோ...நாம் அனைவரும் அவற்றை விலக்கி, டூத் ப்ரெஷ்ஷின் உதவியுடன் நம் பற்களை சுத்தமாக வைத்துகொள்ள ஆசைகொள்கிறோம்.

உங்களுக்கு தெரியுமா? டூத் ப்ரஷ்ஷை தவறாக உபயோகிப்பதனால், உங்கள் உடல் நலத்திற்கு எவ்வளவு கேடுகள் உண்டாகும் என்பது? அப்படி தெரியவில்லையென்றால்...தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1:

உண்மை #1:

ஒருவேளை, உங்கள் தோழன், அவன் டூத்ப்ரஷ்ஷை எடுத்துவர மறந்துவிட்டான் என்றால்...ஒருபோதும் உங்கள் டூத்ப்ரஷ்ஷை அவனுக்கு தாரை வார்த்து தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர்கள் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள், டூத்ப்ரஷ்ஷிற்கு மிகவேகமாக சென்றுவிட, அதனை நீங்கள் திரும்ப உபயோகிக்கும்பொழுது, பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகிறீர்கள்.

உண்மை #2:

உண்மை #2:

நீங்கள் பல் துலக்கும்பொழுது, ஒருபோதும் கழிப்பறையை ப்ளஷ் (Flush) செய்யாதீர்கள். பெரும்பாலானோர் காலை நேரங்களில், அவசர அவசரமாக இவ்வாறு செய்வது வழக்கமாகும். ஏனென்றால், நீங்கள் ப்ளஷ் செய்யும்பொழுது, கழிப்பறையில் இருந்து வரும் தண்ணீர் 3 மீட்டர் இடைவேளையில் இருக்கும் டூத்ப்ரஷ்ஷில் பட, அசுத்தமான தண்ணீர் பட்டு, அது உங்கள் ப்ரஷ்ஷில் தங்கிவிடுகிறது.

உண்மை #3:

உண்மை #3:

உங்களுடைய டூத்ப்ரஷ் தலையை ஒருபோதும் ப்ளாஸ்டிக் தொப்பி அல்லது திசுபேப்பர் கொண்டு மூடாதிர்கள். ஏனெனில், அந்த டூத்ப்ரஷ் முட்களின் மீது ஈரப்பதம் தங்கிவிட, அது தரையை நோக்கி இனப்பெருக்கம் செய்து தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது.

உண்மை #4:

உண்மை #4:

உங்கள் டூத்ப்ரஷ்ஷை மேற்பரப்பின் படுக்கை வாட்டத்தில் (நிலையில்) வைப்பதை தவிர்க்கவும். இந்த நிலையில் இருக்கும்பொழுது ஈரம் வெகு நேரத்திற்கு டூத்ப்ரஷ்ஷிலே தங்கிவிடுகிறது.

இதனால், பாக்டீரியா வளரவும் செய்கிறது. ஆகையால், உங்கள் டூத்ப்ரஷ்ஷை செங்குத்தான கோணத்தில் உலர்ந்த கப் அல்லது பிடிப்பானில் (Holder) வைக்க வேண்டியது அவசியமாகும்.

உண்மை #5:

உண்மை #5:

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தவறாமல் டூத்ப்ரஷ்ஷை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் பழைய டூத்ப்ரஷ்ஷை பயன்படுத்தினால்...பல நோய்களும் இதனால் உண்டாகிறது. அதனால், தங்கும் பாக்டீரியாவானது சுத்தப்படுத்த முடியாத நிலைக்கு சென்று நம்மை துன்பத்தில் தள்ளவும் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is How Your Toothbrush Can Be Very Dangerous For Your Health!

This Is How Your Toothbrush Can Be Very Dangerous For Your Health!