உங்கள் மூளை பலம் பெற நீங்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள் எவை என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

உடலில் ஒட்டு மொத்த செயல்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைமை செயலகம்தான் நமது மூளை. மூளையின் வேலைகள் சொல்லி மாளாது. சற்று சிக்கலான வடிவமைப்பை கொண்டது.

Impoartant yogasanas to strengthen brain

நரம்பு மண்டலம், ஹார்மோன் அதோடு அதன் ஒவ்வொரு மடிப்பிலும் பல விதமான நுண்ணிய செயல்களை கொண்டது. அத்தகைய மூளைமிகவும் சென்ஸிடிவ்.

அதனை பலப்படுத்தினால் உங்கள் உடல் இன்னும் சுறுசுறுப்பாகவும், பலமாகவும், அறிவு கூர்மையுடனும் விளங்கும். அதற்கு தேவையான முக்கிய விஷயங்களின் ஒன்றுதான் யோகாசனம். உங்கள் மூளையைப் பலப்படுத்தும் முக்கிய ஆசனங்கள் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உத்தனாசனம் :

உத்தனாசனம் :

இந்த ஆசனத்தை செய்யப்படும்போது மூளைப்பகுதிக்கு அதிக ரத்தம் பாய்கிறது. இதனால் மூளையில் உண்டாகும் பாதிப்புகள் நிவாரணம் செய்கிறது. மூளைக்கு தங்கு தடையில்லாமல் ரத்த கிடைக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

விருக்ஷாசனம் :

விருக்ஷாசனம் :

இந்த ஆசனத்தை செய்யும் போது மனதை ஒருமுகப்படுத்தப்படுகிறது. நரம்பு மண்டலம் கட்டுப்படுத்தப்படுவதால் மூளை அமைதி கொள்கிறது. மூளைக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.

 திரிகோணாசனம் :

திரிகோணாசனம் :

திரிகோணாசனா என்னும் ஆசனம் தண்டுவடத்தை பலப்படுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். அதோடு மூளைக்கும் சக்தியை தரும் ஆசனம் இந்த ஆசனம்.

அதோ முக்த ஷவனாசனம் :

அதோ முக்த ஷவனாசனம் :

நாய் போன்ற தோற்றத்தில் செய்யப்படும் இந்த ஆசனத்தினால் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறுகிறது. மூளையும் வலுப்படும் . இந்த ஆசனத்தை தினமும் செய்து பாருங்கள்.

ஹாலாசனா :

ஹாலாசனா :

இந்த ஆசானம் செய்வது எளிதுதான் இது மூளைக்கு மட்டுமல்ல, வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகளுக்கும் பலம் தருவதால் இந்த ஆசனம் மிகவும் நல்லது.

வஜ்ராசனா :

வஜ்ராசனா :

மூளை பலம் பெற இந்த ஆசனம் மிகவும் பயன் தரக் கூடியது. முட்டி போட்டு செய்யபப்டும் இந்த ஆசனத்தால் மூளையின் செல்கள் தூண்டப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impoartant yogasanas to strengthen brain

Important yogasanas to strengthen brain
Story first published: Thursday, January 19, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter