இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

உங்கள் உடலின் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்விற்கும், நோய் இல்லாமல் வாழவதற்கும் முறையான உணவு பழக்கம் மிக முக்கியமானது. இந்த உலகில் எந்த ஒரு நோயும் இல்லாமல் யாரும் வாழ முடியாது. ஆனால் ஒரு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கம் தான். சிலர் சிறிய அளவிளாக நோய்கள் மட்டுமே ஏற்பட்டு தப்பித்து விடுவார்கள். ஆனால், வைட்டமின் குறைபாட்டால் நோய் ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.

This Yummy Drink Can Cure Vitamin C Deficiency Within Days!

ஒரு நோய் எப்போது ஏற்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. ஆனால், நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய முயற்சியாக ஆரோக்கியமான முறைகளை கடைபிடிக்கலாமே. நீரிழிவு நோய் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியாது; ஆனால், சளி, இருமல், உடல் பருமன் போன்றவற்றை நம்மால் சில முறைகளால் தடுக்க முடியும்.

முன்பு கூறியது போல, முறையான ஆரோக்கியமான உணவு முறைகள் எப்போதுமே உடலை ஆரோக்கியமாகவும், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களையும் சேர்க்கக் கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், கொழுப்புச் சத்துக்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் சி குறைபாடு :

விட்டமின் சி குறைபாடு :

இந்த இயற்கை ஜூஸை தினமும் குடிப்பதனால்இ, வைட்டமின் சி குறைபாட்டினை சரி செய்ய நன்கு உதவும். வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.

மூட்டு வலி :

மூட்டு வலி :

எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

தேவையானப் பொருட்கள்

தேவையானப் பொருட்கள்

ஆரஞ்சு ஜூஸ் - 1/2 டம்ளர்

கிவி ஜூஸ் - 1/2 டம்ளர்

மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்

ஜூஸ் தயாரிக்கும் முறை

ஜூஸ் தயாரிக்கும் முறை

கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமான வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Yummy Drink Can Cure Vitamin C Deficiency Within Days!

This Yummy Drink Can Cure Vitamin C Deficiency Within Days!
Story first published: Monday, June 26, 2017, 13:10 [IST]