உடல் கொழுப்பை குறைக்க வாரம் 4 நாட்கள் இந்த சூப் குடிச்சு பாருங்க!! சிக்கென்று ஆகும்.

Written By:
Subscribe to Boldsky

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு.

How to reduce body fat by using Horse gram dal soup

நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு.

பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொள்ளின் நன்மைகள் :

கொள்ளின் நன்மைகள் :

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

 தேவையான பொருள்கள்:

தேவையான பொருள்கள்:

கொள்ளு - 4 ஸ்பூன்

பூண்டு - 5 பல்

தக்காளி - 2

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

துவரம்பருப்பு - 1 ஸ்பூன்

பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிதுதாளிக்க

நல்லெண்ணெய் - சிறிதுகடுகு - சிறிது

வரமிளகாய் - 2

செய்முறை :

செய்முறை :

முதலில் கொள்ளை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

பின் அதனுடன் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளங்கள். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

செய்முறை :

செய்முறை :

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

செய்முறை :

செய்முறை :

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

வாரம் 4 நாட்கள்

வாரம் 4 நாட்கள்

அதிக பருமன் இருப்பவர்கள் கொள்ளு சூப் வைத்து தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் குடித்தால் கொழுப்பை அப்படியே கரைத்து உடல் எடை கணிசமாக குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reduce body fat by using Horse gram dal soup

Horse gram dal soup to reduce Body fat- An ayurvedic remedy,
Story first published: Tuesday, May 2, 2017, 14:10 [IST]
Subscribe Newsletter