For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாந்தி வருவதை தடுக்க பயனுள்ள வீட்டு வைத்தியம்!

வாந்தி வந்தால் அதனை தடுக்க இயற்கை மருத்துவம் நாடுவது நல்லது. அவ்வகையில் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

By Ambika Saravanan
|

இன்றைய கால கட்டத்தில் நாம் பல தரப்பட்ட உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் சில நேரங்களில் இவற்றில் சில உணவுகள் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாமல் புட் பாய்சன் என்ற உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் கடும் வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் நோய் தோற்று ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

நாம் உண்ணும் எல்லா உணவுகளிலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தற்போது எதிர்பார்க்க முடிவதில்லை. நம்கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் நுண் கிருமிகளால் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது. இதன் மூலம் வயிற்றில் ஒரு வித கலக்கமும், வாந்தியும் ஏற்படுகிறது.

ஏன் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது?

பலநேரங்களில் நம்மால் வாந்தியை கட்டுப்படுத்த முடியாது. நம் உடலுக்கு தேவையில்லாத ஒன்றை நாம் உட்கொள்ளும் போது உடலிலுள்ள தடுப்பு அமைப்புகள் அவற்றை வாந்தியின் மூலமாக வெளியேற்றுகிறது.

வாந்தி ஒரு பெரிய தொற்றுநோய்க்கான அறிகுறியாகும். உணவில் உள்ள நோய்க்கிருமிகள் எளிதில் கொல்லப்பட முடியாது. அந்த நோய்க்கிருமிகள் வாந்தியைத் தூண்டுகிறது.

How to prevent nausea and vomiting

வாந்தியெடுத்தல் பெரும்பாலும் பிற உடல் மாற்றங்களுடன் சேர்ந்துகொள்கிறது. இது வியர்வை மற்றும் அதிகரித்த இதய துடிப்புக்கான முக்கிய காரணியாகும். அநேக நபர்கள் மயக்கத்திற்கும் ஆளாவார்கள்.

குமட்டல் மற்றும் வாந்தி இவற்றின் வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். குமட்டல் என்பது வாந்தியின் போது உடலுக்கு ஏற்படும் ஒரு மந்த நிலை. குமட்டல் இருந்தால் வாந்தி கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மலச்சிக்கல் மற்றும் மன அழுத்தம் இருக்கும்போது கூட குமட்டல் ஏற்படலாம். நீண்ட தூர பிரயாணங்களில் சிலருக்கு குமட்டல் ஏற்படும்.

உணவு சுவையாக இருக்கும்போது நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவை நாம் எடுத்துக் கொள்வோம். செரிமான அளவிற்கு அதிகமாக உண்ணும்போது செரிமான மண்டலம் வாந்தியை ஏற்படுத்தும் . உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள் ,மது போன்றவற்றை நாம் பருகும் போதும் வாந்தி ஏற்படும்.

புலிமியா மற்றும் அனோரெக்ஸியா போன்ற உணவு சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளனர். இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை அடைவதற்காக உணவு உட்கொண்டதை கட்டாயமாக வாந்தி எடுக்கலாம். மேலே கூறப்பட்ட காரணங்கள் தவிர, வாந்தியலுக்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்கள் உள்ளன. இதில் குடல் அழற்சி, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி அல்லது கட்டிகள் அடங்கும்.

வாந்தி எடுப்பதை தவிர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும் என்கிறார் Dr. சிநா,.இவர் ஒருஆயுர்வேத நிபுணர். வாந்தியை தடுக்கும் சிகிச்சைகளை பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to prevent nausea and vomiting

Home remedies to prevent nausea and vomiting
Story first published: Friday, August 18, 2017, 17:29 [IST]
Desktop Bottom Promotion