காய்ச்சலின் போது நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?

By: Batri Krishnan
Subscribe to Boldsky

உடல் நிலை சரியில்லாத பொழுது நம்முடைய உடல் மட்டுமல்ல, மனதும் சோர்வாக காணப்படும். அப்பொழுது நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உங்களுடைய உடலுக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதுடன் உங்களுடைய மன நலத்தையும் பாதுகாக்கின்றது. 

இங்கே நாம் குறிப்பாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுவகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Foods you should avoid when you have viral flu

வைரஸ் காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் நோயின் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கலாம்.

மேலும், இதைப் பின்பற்றுவது நீங்கள் நோயின் தீவிரத்தில் இருந்து வேகமாக விடுபட உதவும். இங்கே, நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக், நீங்கள் வைரஸ் காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிவித்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரிக்கின்றது. எனவே, நீங்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் உட்கொள்ளுவதை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பால் உங்களுடைய மூச்சு விடுதலை கடினமாக்கிவிடுகின்றது. மேலும் இது மார்பு எரிச்சல் மற்றும் மூக்கு அடைப்பை ஏற்படுத்துகின்றது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

வைரஸ் காய்ச்சலின் போது, உங்களுடைய செரிமான அமைப்பு வழக்கம் போல் செயல்பட முடியாமல் போகலாம். சிவப்பு இறைச்சி ஜீரணிக்க எளிதானது அல்ல. இதை ஜீரணிக்க உங்களுடைய உடல் அதிகம் சிரமப்படும்.

இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, நீங்கள் உங்களுடைய உடலை அதிக வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்துகின்றீர்கள். வது போன்றதாகும். எனவே இதைத் தவிர்த்து அதிக ஓய்வு எடுத்துக் கொண்டு, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகள், நீங்கள் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே எளிதாக செரிமானம் ஆகக்கூடிய மற்றும் உடலினால மிக எளிதாக உறிஞ்சப்படக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுகளுக்கு பதில் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் / பொரித்த உணவுகள்

எண்ணெய் / பொரித்த உணவுகள்

நீங்கள் மொத்தமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் உங்களுடைய செரிமான அமைப்பு உங்களுக்கு என்றென்டும் நன்றியுடன் இருக்கும். எனவே சந்தேகமே இல்லாமல் நீங்கள் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படும் போது இதை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடல் உணவு செரித்தலுக்கு அதிக ஆற்றலை செலவளிப்பதை விட வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட அதிக ஆற்றலை செலவிடத் தொடங்கும்.

சீஸ்

சீஸ்

பாலாடைக்கட்டி நீங்கள் காய்ச்சலால் அவதிப்படும் போது சாப்பிடக்கூடாத ஒரு தவறான உணவாகும். இதை உட்கொள்வதன் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலுக்கு வழி வகுக்கும்.

டீ / காபி

டீ / காபி

நீங்கள் படுக்கையை ஓய்விலிருக்கும் போது டீ அல்லது காபி அருந்த வேண்டும் என்கிற மயக்கம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இது ஒரு வலுவான டையூரிடிக் ஆகும். இதை அருந்துவதன் மூலம் உங்களின் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறி உடலில் நீரிழப்பு ஏற்பட்டு விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods you should avoid when you have viral flu

Foods you should avoid when you have viral flu
Subscribe Newsletter