விமானத்தில் செல்வதால் ஏற்படும் தளர்ச்சியைப் போக்க நீங்கள் செய்ய வேண்டிய பயற்சிகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நமது நாகரீக முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டுகள் ஏராளம். அவற்றில் முக்கியமான ஓன்று விமான பயணம். விமான பயணங்கள் தற்போது மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. வெளியூர்களுக்கு வெளிநாடுகளுக்கும் சில மணி நேரங்களில் செல்வதற்கு இந்த விமான பயன்கள் துணை புரிகின்றன. உலகின் எந்த மூளைக்கும் செல்ல தற்போது விமானங்கள் துணை புரிந்தாலும், இந்த பயணத்தில் நமக்கு சில அசௌகரியங்கள் உள்ளன.

விமானங்களில் பயணிக்கும்போது நாம் நமது வளி மண்டலத்திற்கு மேல் செல்கிறோம். ஆகையால் நமது உடலில் பலவித மாற்றங்கள் உருவாகும். விமானத்தில் ஏறியதில் இருந்து தரை இறங்கும் வரை உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அந்த தருவாயில் சில வித பயிற்சிகள் மேற்கொள்ளும்போது அவை உடல் தளர்ச்சியை தணிக்க உதவும்.

கீழே சில எஎளிய உடற்பயிற்சிகள் கொடுக்க பட்டுள்ளன. இவற்றை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

Exercises to soothing body ache due to frequent air travel

கணுக்கால் பயிற்சி:

தரையில் இருந்து உங்கள் பாதத்தை தூக்கி , விரல்களினால் ஒரு திசையில் வட்டம் போடுங்கள்.மற்றொரு காலிலும் இதையே எதிர்திசையில் செய்யுங்கள். சில விநாடிகள் இந்த பயிற்சியை தொடரலாம் .

பாத பயிற்சி:

இரண்டு குதிகால்களை தரையில் வையுங்கள். உங்களால் இயன்றவரை உங்கள் பாதங்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். மறுபடியும் உங்கள் பாதங்களை தரையில் வையுங்கள். இந்த பயிற்சியை மீண்டும் சில முறை முயற்சியுங்கள்.

முழங்கால் பயிற்சி:

உங்கள் முழங்காலை வளைத்து தொடையை தளர்த்தி காலை உயர்த்துங்கள்.மறுமுறை மற்றொரு காலையும் இதே போல் செய்யுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்யுங்கள் .

Exercises to soothing body ache due to frequent air travel

தோள் பயிற்சி:

உங்கள் தோள்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் சுழற்றுங்கள். வேகமாக செய்யாமல் மென்மையாக சுழற்றுங்கள்.

கை பயிற்சி :

வலது முழங்கையை கீழ் நோக்கி இறக்கி வைக்கவும். மறுபடி அதனை உங்கள் மார்பு பகுதிக்கு நேரே கொண்டு வரவும்.மற்றொருமுறை கைகளை கீழே இறக்கவும். இதனை உங்கள் இடது கையிலும் செய்யுங்கள். இந்த முயற்சியை மாற்றி மாற்றி இரு கைகளிலும் செய்யவும்.

முழங்கால் முதல் மார்பு வரை :

முன் பக்கம் சற்று குனிந்து உங்கள் கைகளை இடது முழங்காலை சுற்றி வளைத்து உங்கள் முழங்காலை மார்பு பகுதி வரை கொண்டு வரவும். 15 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். இதனை தொடர்ந்து உங்கள் வலது முழங்காலில் இதே பயிற்சியை செய்யவும்.

Exercises to soothing body ache due to frequent air travel

தலைக்கு மேல் கைகளை நீட்டவும்:

இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தவும். ஒரு கையால் மற்றொரு கையின் மணிக்கட்டை பிடித்து ஒரு பக்கமாக தலையை சாய்த்து இழுக்கவும். இதே நிலையில் 10 வினாடிகள் நீடிக்கவும். இந்த முறையை மற்றொரு கையிலும் செய்து பார்க்கவும்.

கழுத்து பயிற்சி :

உங்கள் ஒரு பக்க தோளில் உங்கள் காதை வைத்து உங்கள் தலையை முன்னும் பின்னும் சுழற்றவும்.இதே நிலையில் 5 வினாடிகள் இருக்கவும். இதனை மறு பக்க தோளிலும் செய்யுங்கள்.

தரை இறங்கும்போது:

விமானம் தரை இறங்கும் போது வலி மண்டல மாற்றங்களால் நீங்கள் சில சிரமங்களை உணரலாம். அந்த தருணங்களில் தொடர்ந்து எச்சில் விழுங்குவதாலும், கொட்டாவி விடுவதாலும் உங்கள் அசௌகரியத்தை குறைக்கலாம். அல்லது உங்கள் மூக்கு துவாரங்களை மூடிக்கொண்டு வாயில் காற்றை நிரப்பி மெதுவாக வெளியில் விடலாம்.

இந்த வகை பயிற்சிகளால் சிரமமின்றி புத்துணர்ச்சியுடன் உங்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு எங்கள் வாழ்த்துக்கள் !

English summary

Exercises to soothing body ache due to frequent air travel

Exercises to soothing body ache due to frequent air travel
Story first published: Saturday, August 26, 2017, 16:43 [IST]
Subscribe Newsletter