For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லியில் வேகமாக பரவி வரும் ஸ்வைன் ஃப்ளூவை தடுப்பதற்கான 5 வழிகள் பற்றி தெரியுமா?

இந்த மழைக்காலத்தில் டெங்கு, சிக்கன் குனியா மட்டுமல்லாமல் ஸ்வைன் ஃப்ளூவும் வேகமாக பரவி வருகிறது.

By Suganthi Ramachandran
|

நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் 2017 ல் இந்த நாள் வரைக்கும் ஏறத்தாழ 300 பேர்கள் ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கவலைக்கிடும் நிலைமை என்னவென்றால் இந்த வருடத்திலயே 2 பேர்கள் இந்த ஸ்வைன் ஃப்ளூவால் இறந்துள்ளனர் என்பது தான்.

இது தலைநகரம் டெல்லியில் மட்டும் உள்ள நிலவரம். ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்து கொண்டால் நிறைய இடங்களிலும் ஸ்வைன் ஃப்ளூ வேகமாக பரவி வருகிறது. ஜனவரி 2017 லிருந்து ஜீலை முதல் வாரம் வரை உள்ள தகவல்படி 12,640 பேர்கள் இந்தியா முழுவதும் ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 600 பேர்கள் பரிதாபமாக உயிழந்துள்ளனர்.

Delhi Witness Rise In Swine Flu (H1N1) Cases; 5 Ways To Prevent Swine Flu

அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி குஜராத்தில் பாதிக்கப்பட்ட 289 பேர்களில் 75 பேர்கள் இறந்துள்ளனர். கேரளாவில் 1127 பேர்களில் 63 பேர்கள் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் பாதிக்கப்பட்ட 407 பேர்களில் 59 பேர்கள் இறந்துள்ளனர். கர்நாடகாவை பொருத்த வரை 2377 பேர்களில் 15 பேர்கள் இறந்துள்ளனர்.
எனவே இந்த மாதிரி சமயத்தில் நோயை வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே ஸ்வைன் ஃப்ளூ வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம் .

கைகளை சுத்தமாக கழுவுதல் :

முதல் படியாக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதுவும் குறிப்பாக மக்கள் நெருக்கடி இடங்களுக்கு சென்று விட்டு வந்தாலோ, பஸ்ஸில், ரயிலில் பயணம் மேற்கொண்டாலோ நன்றாக கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மூக்கு மற்றும் வாய் பகுதிக்கு மாஸ்க் போட வேண்டும் .

கண்டிப்பாக வெளியில் செல்லும் போது மூக்கு வரைக்கும் மாஸ்க் போட்டு செல்லவும். இது மற்றவர்களின் இருமல், தும்மல் மூலமாக நமக்கு நோய் பரவுவதை தடுக்கும்.
கைகளால் மூக்கு, கண்கள் மற்றும் வாய் பகுதியை தொட வேண்டாம் .

நிறைய நேரம் கைகளால் மூக்கு, கண்கள் மற்றும் வாய் பகுதியை தொட வேண்டாம். ஏனெனில் இந்த பகுதிகளில் தான் தொற்றுக்கள் வேகமாக பரவ ஆரம்பிக்கும்.

மாஸ்க் பயன் :

இதற்காகத்தான் வெளியே கூட்ட நெரிசல் உள்ள இடங்கள், தெருக்கள் வழியாக செல்லும் போது மாஸ்க் போட்டு சென்றால் தூசி மற்றும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் . இந்த மாதிரி நேரங்களில் நிறைய தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். இது நோய் கிருமிகள் உங்களை அணுகாமல் போராட உதவி தொற்றுக்களிடமிருந்தும் உங்களை காக்கும்.

English summary

Delhi Witness Rise In Swine Flu (H1N1) Cases; 5 Ways To Prevent Swine Flu

Delhi Witness Rise In Swine Flu (H1N1) Cases; 5 Ways To Prevent Swine Flu
Desktop Bottom Promotion