ஞாபக மறதி அதிகமாயிடுச்சா? அப்போ இந்த ஒரு பொருள் உங்களுக்கு கைகொடுக்கும்!

By: Aashika Natesan
Subscribe to Boldsky

தினசரி உணவுகளில் எப்போதும் இடம்பெறும் பொருள் கறிவேப்பிலை. சமையலில் தொடர்ந்து சேர்த்தாலும் நம் தட்டிற்கு வரும்போது அதனை நைஸாக ஒதுக்கிவிட்டு சாப்பிடுவது தான் நம் வாடிக்கை.

கறிவேப்பிலையை உணவிலிருந்து அப்படியே சாப்பிட முடியாது, தொண்டையை அடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் , அதனை வேறு விதத்தில் சாப்பிட்டு பாருங்க.

Curry leaves help to increase our memory power

கறிவேப்பிலை புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்தது. ரத்த சோகையை குணப்படுத்தும் அதுமட்டுமல்ல. உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தும். எப்படி தெரியுமா? இந்த மாதிரி கருவேப்பிலையை சாப்பிட்டுப் பாருங்க.

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.கறிவேப்பிலை டீ

1.கறிவேப்பிலை டீ

நம்முடைய வாடிக்கையை மாற்றுவதற்க்கென்றே வந்திருக்கிறது ‘கறிவேப்பிலை டீ'

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

சீரகம் - சிறிதளவு

வெல்லம் - சிறிதளவு

கருப்பு உப்பு - சிறிதளவு

செய்முறை :

செய்முறை :

1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

3.நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.

4.ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

2.கறிவேப்பிலை சாதம் :

2.கறிவேப்பிலை சாதம் :

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை -சிறிதளவு

இஞ்சி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - சிறிதளவு

பூண்டு - இரண்டு பல்

சீரகம் - சிறிதளவு

புதினா - சிறிதளவு

எலுமிச்சை சாறு - சிறிதள

செய்முறை :

செய்முறை :

எலுமிச்சை சாறைத் தவிர மற்ற பொருட்களை எல்லாம் அரைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் பொடியை சாதத்தோடு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி சாப்பிடலாம்.

எண்ணெயில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் !

எண்ணெயில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் !

எண்ணெயில் பொறிக்கும் உணவுகளில் அதிக கொழுப்பிருக்கும். அதனை குறைக்க நினைப்பவர்கள் எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலையை

போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டினால் போதும். எண்ணெயில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும்.

கறிவேப்பிலையில் அப்படி என்ன இருக்கு தெரியுமா?

கறிவேப்பிலையில் அப்படி என்ன இருக்கு தெரியுமா?

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறதென்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் .

இதிலுள்ள நார்ச்சத்து,வைட்டமின்,மினரல் உள்ளிட்டவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

கண்பார்வை அதிகரிக்க, முடி கொட்டாமல் இருக்க, சளித்தொல்லைக்கு,மலச்சிக்கல் என நம் கெட்ட கொழுப்பை கரைக்க, உடல் உபாதைகள் பலவற்றிற்கும் அருமருந்தாய் இருக்கிறது.

தாளிக்கும் ஓசை சங்கீதமே!

தாளிக்கும் ஓசை சங்கீதமே!

சமையல் எல்லாம் முடிந்தவுடன் சிறிதளவு எண்ணெயில் கடுகு,உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பது வழக்கம். அப்படி ஏன் செய்கிறோம் தெரியுமா?

சாப்பிடும் உணவின் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடைய தாளிப்பது அவசியம். கடுகும் கறிவேப்பிலையும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை பாதுகாப்பதால் தாளிக்கும் வரை காத்திருந்து சுவைக்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Curry leaves help to increase our memory power

Curry leaves help to increase our memory power
Subscribe Newsletter