மாத விடாய் பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்ட விஷயங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

மாதவிடாய் பற்றி பெண்களே இன்னும் சில விஷயங்களை சரிவர புரிந்து கொள்ளவில்லை. ஏன் எதற்கு என தெரியாமலே தவறென தெரிந்தும் சில விஷயங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

கீழே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எதுவும் அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடவில்லை. நாமாகவே கட்டிக் கொண்ட கதைகள்தான் அதிகம். அந்த உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை -1

உண்மை -1

"மாதவிடாயின்போது கழுவுகள் வெளியேற்றப்படுகிறது. இது நல்லது " - இந்த எண்ணம் தவறு. உண்மையில் கல்லீரல், சருமம் போல், கர்ப்பப்பை அப்படியெல்லாம் கழிவுகளை அகற்றாது.

இயல்பில் அங்கே கருவளர்ச்சிக்காக, கர்ப்பப்பையை பாதுகாக்க சுற்றி கட்டப்பட்டிருக்கும் திசுச் சுவர், கர்ப்பம் நடைபெறாமல் போகவே, அவை உதிர்ந்து ரத்தப்போக்காக வருகிறது.

உண்மை- 2

உண்மை- 2

" ரத்தப் போக்கு அதிகம் உண்டாவது இயற்கை"- உண்மையில் அவ்வாறெல்லாம் கிடையாது. அந்த மூன்று நாட்களில் நீங்கள் 9 உறைக்கும் அதிகமாக உபயோகித்தால், அவை உடலில் கர்ப்பப்பை மற்றும் வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறி.

உண்மை -3 :

உண்மை -3 :

"மாதவிடாயின்போது செக்ஸ் கூடாது" - இது தவறான நம்பிக்கை. மாதவிடாயின் போது செக்ஸ் வைத்தால் சுகாதராமற்றது என பலரும் கூறி கேட்டிருக்கிறோம்.

இதில் உண்மையில் இல்லை. பெண்ணிற்கு விருப்பமிருந்தால், அந்த சமயங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. தொற்றுக்கள் உண்டாகும் என்பதில் உண்மையில்லை.

உண்மை -4 :

உண்மை -4 :

உடற்பயிற்சி செய்யக் கூடாது: - இதில் உண்மையில்லை. . உங்களுக்கு மிக களைப்பாக இருந்தால் அல்லது மிக அதிக ரத்தப் போக்கு எற்பட்டுக் கொண்டிருந்தால் அந்த சமயங்களில் நெனெகல் தவிர்க்கலாம். மற்றபடி, நீங்கள் இந்த சமயங்களில் உடற்பயிற்சி செய்வதற்கும் மாதவிடாய்க்கும் எந்தவித சம்பந்தமில்லை. இதனால் அதிக ரத்தப்போக்கெல்லாம் உண்டாகாது.

உண்மை - 5 :

உண்மை - 5 :

மாதவிடாயின்போது நீச்சல் அடிக்கக் கூடாது. குறிப்பாக கடலில் நீச்சல் அடிக்கக் கூடாது. திமிங்கலம் போன்றவை வாசனை நுகர்ந்து வந்து கொன்றுவிடும் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அபப்டி எதுவுமே இதுவரை நிருபிக்கப்பட்டதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common myths you need to stop believing during menstruation cycle

Common myths you need to stop believing during menstruation cycle
Story first published: Friday, February 3, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter