பைல்ஸ் எனப்படும் மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இலை எது தெரியுமா? இதப் படிங்க!!

Written By:
Subscribe to Boldsky

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

Ayurvedic treatment to treat Piles at home itself

நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பது எப்படி :

தடுப்பது எப்படி :

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

துத்தி கீரை :

துத்தி கீரை :

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் வளரும்.

அதனை மூல வியாதிக்கு பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கு காண்போம்

வழிமுறை -1 :

வழிமுறை -1 :

துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினமும் மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.

வழிமுறை -2 :

வழிமுறை -2 :

காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.

வழிமுறை -3 :

வழிமுறை -3 :

துத்திஇலையை விளக்கெண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.

வழிமுறை-4 :

வழிமுறை-4 :

காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை எண்னெய் குளியல் எடுக்க வேண்டும். இவ்வாறு மேலே சொன்னபடி தொடர்ந்து 40 நாட்கள் செய்துவந்தால் மூலநோய் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic treatment to treat Piles at home itself

Ayurvedic treatment to treat Piles at home itself
Story first published: Saturday, May 27, 2017, 14:41 [IST]