நீங்கள் அதிகமான பயத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்!!

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு ஆனால் இந்த உணர்வு அதிகமாகும்போது பதட்ட உணர்வுகளை ஏற்படுத்தும்.இந்த கவலை நோய் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விடாமல் பாதித்து பல்வேறு சிரமங்களான அதிகப்படியான துன்பம்,மன அதிர்ச்சி,அதிக அளவு பதற்றம் இவற்றை ஏற்படுத்தும்.எனவே இந்த கவலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப் படுகிறது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எப்பொழுதும் கவலை,பயம்,பதற்றம் போன்ற உணர்வுகளுடன் இருப்பர்.

5 Signs that you are suffering from anxiety disorder

இந்த கவலை கோளாறுகள் கவலை மற்றும் பயம் இவற்றை கொண்டே அமைந்துள்ளது.கவலை என்பது எதிர்காலத்தை பற்றிய நினைவு,பயம் என்பது நிகழ்கால நடப்புகளின் பயம்.இந்த உணர்வுகள் சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.மக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கவலை கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

உங்களுக்கு அதிகப்படியான பயம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.அதிகப்படியான கவலை:

1.அதிகப்படியான கவலை:

இந்த நிலை நமது தினசரி நடவடிக்கைகளில் ஆரம்பமாகிறது.நாம் தினமும் செய்யும் வேலைகளில் சின்ன சின்ன விஷயங்களில் கவலைப் பட ஆரம்பிப்பீர்கள்.ஒரு சின்ன நடவடிக்கை அதை பற்றியே அதிக பதற்றத்துடன்,அதிக வருத்தத்துடன் பேசிக் கொண்டே இருப்பர்.

இது உங்களை அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அனைவரிடம் இருந்து ஒதுக்கி தனிமையை ஏற்படுத்தி விடும்.அதிகப்படியான கவலை அதிகமான சோர்வை உருவாக்கும்.இது குறிப்பிடத்தக்க அறிகுறி ஆகும்.

2.தூக்கப் பிரச்சனை:

2.தூக்கப் பிரச்சனை:

சரியான நேரத்தில் உறக்கம் வராமல் இருப்பது மற்றும் உறங்கும் நேரத்தில் அதிக குரட்டை சத்தம் இந்த இரண்டு பிரச்சனையும் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஆகும்.

 3.முரண்பாடான அச்சம்:

3.முரண்பாடான அச்சம்:

இது பொதுவான அறிகுறி இல்லை.அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட விசயத்திற்கு (அ) குறிப்பிட்ட நிலைக்கு அதற்கு தொடர்பாக (அ) அந்த விஷயத்தில் தன் உள் உணர்வு சார்ந்து இந்த அச்சம் வெளிப்படும்.மேலும் இந்த அச்சம் திடீரென எதிர்பாராத விதமாக தோன்றும்.ஆனால் இதற்கு நிலையான காரணம் இருக்காது.

4.தசை இறுக்கம்:

4.தசை இறுக்கம்:

தசையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் வலி இவை போன்ற உடலியல் கரணங்கள் முன்னணியாக திகழ்கிறது.கவலை நோய்க்கு இந்த தசையின் வலி நாட்பட்டதாகவும்,வலி பரவக் கூடியதாகவும் இருக்கும்.

இதனால் மக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாவர்.இந்த கவலை நாட்பட்டதாக மாறினால் நீங்கள் அதிக சோர்வு,தசை வலி மற்றும் வேலை செய்ய விருப்பமின்மை போன்றவை ஏற்படும்.

5.நாள்பட்ட அஜீரணம்:

5.நாள்பட்ட அஜீரணம்:

செரிமான அமைப்புடன் தொடர்புடைய சிக்கல்கள் அனைத்தும் இந்த கவலை கோளாறுகளை ஏற்படுத்தும்.இந்த நிலையில் நிலையான செரிமான சிக்கல்களை சந்திப்பீர்கள்.இது IBS (எரிச்சல் மிகுந்த குடல் நோய்) என்று அழைக்கப்படுகிறது.

இந்த IBS வயிற்றில் வலிகள்,தசை பிடிப்பு,வீக்கம்,மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இவற்றின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் இது செரிமானத்தில் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தும்.

மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர மேடை பதற்றம்,சுய உணர்வு,அச்ச தாக்குதல்கள்,கடந்த கால நினைவுகள்,நிறைவான செயல்கள் சியா முடியாமை,கட்டாயப்படுத்தப்படுகிற நடத்தைகள்,சுய சந்தேகம் ஆகிய சில அறிகுறிகளும் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Signs that you are suffering from anxiety disorder

5 Signs that you are suffering from anxiety disorder
Story first published: Thursday, April 20, 2017, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter