For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனோ திடம் மற்றும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்க தினமும் இந்த 5 விஷயங்களை கட்டாயம் செய்யனும்!!

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிக முக்கியமானது அவற்றை இந்த 5 பழக்க வழக்கங்களால் ஆரோக்கியமாக வைக்க முடியும் என இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

வேலை செல்பவர். வியாபாரிகள், தொழில் அதிபர் என இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்தித்து அவற்றை எதிர்நோக்கும் திறனையும்,பக்குவத்தையும் பெறுகவது அவசியம்.

தங்களை கவர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆண்கள் செய்ய வேண்டிய 16 குட்டி, குட்டி விஷயங்கள்!

குறிப்பாக தொழில் அதிபர்கல் பொறுமையுடனும், பல மதிப்புமிக்க நல்ல பழக்க வழக்கங்களுடன் ,மன ஆரோக்கியத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.இங்கு மன ஆரோக்கியத்தை மட்டுமின்றி செயலாக்கும் திறன் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கக் கூடிய 5 சிறந்த பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை:

5 habits that improve your mental ability and health

1.இரவில் நல்ல தூக்கம்:

நம்மில் பெரும்பாலும் அதிகாலையிலேயே எழுந்து இரவு வெகு நேரம் உழைக்கின்றனர்.தூக்கத்தைக் குறைத்து அதிக வேலை செய்வதால் தொழிலில் உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறு.உண்மையில் இவ்வாறு செய்வதால் உற்பத்தித் திறனை குறைக்கிறீர்கள் என்பதே உண்மை.அதிக நேரம் தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து மூளை வேலை செய்யும் திறனைக் குறைக்கிறது என்று ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூல் கண்டறிந்துள்ளது.மேலும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள் பல நாட்கள் நீடிக்கும்.மேலும் கூடுதலாக இந்த தூக்கமின்மையால் மாரடைப்பு,நீரிழிவு மற்றும் உடல் பருமன் இன்னும் பிற சிக்கல்களும் ஏற்படும்.இந்த சிக்கல்களுக்கு மிக சிறந்தத் தீர்வு ஒரு நாளுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

2.சரியான, ஆரோக்கியமான உணவை எடுப்பது:

பெரும்பாலும் தொழில் முனைவோர்கள் தொழில் தொழில் என்று ஓடிக் கொண்டே இருப்பார்கள்.இதனால் ஆரோக்கியமான சத்தான உணவை அவர்கள் எடுப்பதில்லை இதற்கு நேரமின்மையும் ஒரு காரணம்.எனவே அவர்கள் பர்கர் மற்றும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட சில உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை போகிற போக்கில் உண்பார்கள்.இது அவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்று.துரதிஷ்டவசமாக இது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.

நல்ல ஆரோக்கியமான,சத்தான உணவை உண்பது உடலின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த உணவுகள் உடலுக்குள் நுழைந்ததும் குளுக்கோஸாக மாறுகிறது.இது மூளையின் செயல்திறனுக்கு ஒரு உந்துதலைத் தருகிறது.கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்தால் அதில் உள்ள கொழுப்பைக் கரைக்க உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப் படுகிறது.இதனால் மிகவும் சோர்வாகவும் மற்றும் பயன்தரும் அளவு வேலையும் செய்ய முடியாது.எனவே ஆரோக்கியமான உணவை சரியான அளவில் எடுக்க வேண்டும்.

3.வழக்கமான உடற்பயிற்சி:

பொறுப்புகள் நிறைந்த ஒரு நாளில் உடற் பயிற்சிக்கென ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது என்பது எளிதான விஷயம் அல்ல.பின்வரும் நன்மைகளை கருத்தில் கொண்டு உடற்பயிற்சிக்கு உங்கள் நேரத்தை சிறிது செலவழியுங்கள்.

-மன மற்றும் உடலின் அழுத்தத்தின் அளவைக் குறைக்கிறது.
-உடற்பயிற்சி செய்வதால் உடலானது சில வேதிப் பொருட்களை உருவாக்குகிறது.இது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு மன ஆரோக்கியத்தையும் உண்டாக்குகிறது.
-சுய மதிப்பு மற்றும் சுய நம்பிக்கையை அதிகரிக்கிறது.
-மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.இதனால் பிரச்சனைகளுக்கு எளிதான,சரியான,வித்தியாசமான தீர்வைப் பெறலாம்.
எனவே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

4.பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கு நேரம் ஒதுக்குதல்:

பொதுவாக தியானம்,தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் வெற்றியுடன் இணை சேர்வதில்லை.ஆனால் தியானம் செய்வதால் உங்கள் செயல் திறனை ஆக்கபூர்வமாக அதிகரிக்க முடியும்.தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் மன அழுத்தத்தை (கூடுமானவரை விரைவில்) தியானம் செய்வதால் நீக்கலாம்.இது ஆச்சரியமல்ல.தியானம் செய்வதால் அதிகப்படியான ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக வைக்க முடியும்.தியானம் செய்வதற்கு பெரிய அறையோ (அ) அதிக நேரமோ தேவை இல்லை.பஸ் (அ) ரயில் பயணத்தின் போது ஒரு நாளுக்கு 5 நிமிடம் அமைதியாக தியானம் செய்யலாம் (அ) அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் அமைதியான இடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம்.தனிப்பட்ட முறையில் நான் பிரார்த்தனை செய்த தினம் முழுவதும் ஒரு அமைதியை உணர முடியும்.

5.படிக்கும் பழக்கம்:

நீங்கள் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினாலோ (அ) நல்ல தலைவராக மாற விரும்பினாலோ எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிக்க வேண்டும்.பல வெற்றிகரமான உதாரணங்கள்:பில்கேட்ஸ் ஒரு சிறந்த படிக்கும் வழக்கம் உடையவர்.கடந்த ஆண்டு மார்க் ஜுகர்பர்க் பேஸ்புக்கில் ஒரு புத்தக சங்கம் ஒன்றை ஆரம்பித்தார்.வாரன் பஃபெட் ஒரு நாளில் 80 சதவிகிதத்தை படிப்பதற்கு செலவழிப்பார்.

சுய உதவி மற்றும் வர்த்தகம்,அறிவியல் அல்லாத புத்தகங்களில் நேரம் செலவிட அவசியமில்லை.படிக்கும் பழக்கம் உங்கள் உணர்வுகளில் ஒரு விழிப்புணர்வுத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரம் உள்ளது.இது உங்களை மேம்படுத்த உதவுகிறது.

பெரும்பாலான தொழில் முனைவோர்கள்,அவர்களின் தொழிலின் வெற்றிக்கு அவர்களது மன ஆரோக்கியம் சிறந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.ஆனால் உண்மையில் அதன் ஆழத்தை யாரும் அறியவில்லை.போதுமான தூக்கத்தைப் பெற்று,ஆரோக்கியமான உணவு எடுத்து,தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்து வந்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வந்தால் குறைந்த நேரம் வேலை செய்து வந்தாலும் அதிக அளவு உற்பத்தித் திறனையும்,செயலாக்கும் திறனையும்,மன ஆரோக்கியத்தையும் பெறலாம்.

English summary

5 habits that improve your mental ability and health

5 habits that improve your mental ability and health
Story first published: Friday, June 23, 2017, 11:16 [IST]
Desktop Bottom Promotion