உங்கள் பல் மருத்துவரிடம் நீங்கள் மறைக்கும் உண்மைகளை எப்படி கண்டுபிடிப்பார் தெரியுமா? இப்படித்தான்!

Written By:
Subscribe to Boldsky

பல் மருத்துவரிடம் செல்லும்போது இன்னும் கொஞ்சல் கூடுதல் அக்கறை தேவை. காரணம் மூளை பற்களின் நரம்புகளோடு நேரடி தொடர்பு இருப்பதால் அசாக்கிரதையோடு இருக்காதீர்கள்.

Things your doctor know by looking in your teeth

என்னதான் நீங்கள் உங்களிடம் இருக்கும் தவறுகளை மறைத்தாலும் உங்கள் மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். அவை என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 முந்தைய இரவில் மட்டும் ஃப்ளாஸிங்க்!!

முந்தைய இரவில் மட்டும் ஃப்ளாஸிங்க்!!

சிலர் அத்தனை நாட்கள் சும்மா இருந்துவிட்டு பல் மருத்துவரிடம் போவதற்கு முந்தைய நாள் இரவு ஃப்ளாஸிங்க் எனப்படும் நூலிழையால் சுத்தம் செய்வார்கள்.

ஆனால் உங்கள் மருத்துவர் இதனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார். ஏனென்றால் என்றைக்காவது ஒருமுறை செய்தால் ஈறு வீங்கும். ரத்தம் கசியும். சிவந்து போகும். எனவே இந்த விஷயத்தில் அவரை நீங்கள் ஏமாற்ற முடியாது.

கர்ப்பமாக இருந்தால் :

கர்ப்பமாக இருந்தால் :

40 % பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது ஈறு வீக்கம் உண்டாகும்.

ஜிஞ்சிவிடிஸ் எனப்ப்படும் இந்த் பதிப்பு உடலில் புரொஜஸ்ட்ரான் ஹார்மோன் அதிகம் ஆகும்போது உண்டாகும். இதனால் பாக்டீரியாக்கள் அதிகம் உண்டாகி ஈற் பிரச்சனையை தரும்.

ஈறில் கட்டி போன்று வீக்கத்துடன் நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் உங்கள் மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார்.

நகம் கடித்தால் :

நகம் கடித்தால் :

நகம் கடிப்பவர்களுக்கு முன் பற்கள் சீராக இருக்காது. அதோடு பற்கள் சொரசொரப்புடன் காணப்படும். இது நகம் கடிக்கும்போது மேல் மற்றும் கீழ் பற்கள் உர்சுவதால் உண்டாகும் பாதிப்பினால் பற்கள் கரடு முரடாக அமையும்.

விரல் சூப்பிய பழக்கம் :

விரல் சூப்பிய பழக்கம் :

உங்களுக்கு முன் தாடை தூக்கலாக இருந்தால் உங்கள் மருத்துவர் எதனால் என்று சொல்லிவிடுவார். குழந்தையாக இருக்கும் போது பொதுவாக விரல் சூப்பினால் தாடை எலும்பு முன் வந்துவிடும்.

இதனால் பற்களும் முன் தூக்கலாக காணப்படும். சிலருக்கு பேசுவது கடினமாக இருக்கும். ஆகவே இந்த விரல் சூப்பும் பிரச்சனையை மறைக்க முடியாது.

மீன் வாசனையா? பழ வாசனையா?

மீன் வாசனையா? பழ வாசனையா?

உங்கள் வாய் நாற்றத்திலிருந்து உங்கள் உடல் நோய்களை கண்டுபிடித்துவிடுவார்.

வாயில் பழ வாசனை வந்தால் உங்களுக்கு சர்க்கரை வியாதி, மீன் வாசனை வந்தால் கல்லீரல் அல்லது சிறு நீரக பாதிப்பு இருக்கிறது என அர்த்தம்.

அறுவெறுப்பான நாற்றம் வந்தால் ஜீரண மண்டல நோய்களாக இருக்கலாம் என சொல்வார்.

பற்களின் பின் பகுதியில் அரித்திருந்தால் :

பற்களின் பின் பகுதியில் அரித்திருந்தால் :

முன்னிருக்கும் பற்களின் பின்னால் அரித்து காணப்பட்டால் அதற்கான காரணங்களை சொல்வார்.

உணவு சாப்பிடுவதில் கோளாறு, தவறாக இருந்த, மன அழுத்தம், பதட்டம், அசிடிடி ஆகிய பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இப்படியாக பற்களில் பாதிப்பு உண்டாகும்.

சைனஸ் பாதிப்பு இருந்தால் :

சைனஸ் பாதிப்பு இருந்தால் :

சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள் ரூட் கேனல் சிகிச்சை தரும்படி பலர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பார்கள்.

ஆனால் அவ்வாறு சைனஸ் இருப்பவர்களுக்கு பற்களின் வேர்ப்பகுதியில் வலி வருவது சகஜமே.

ஏனென்றால் பற்களின் வேப் பகுதியும் சைனஸ் அறையும் முகத்தில் ஒரே பகுதியில் அமைந்திருப்பதால் சைனஸ் பிரச்சனை இருப்பாவ்ர்களுக்கு பல் வலி ஊண்டாகும்.

இதற்கு ரூட் கேனல் தீர்வல்ல. சைனஸை சரிப்படுத்த வேண்டும்.

விட்டமின் குறைபாடு :

விட்டமின் குறைபாடு :

உங்கள் நாக்கில் கொப்புளம் எரிச்சல் உண்டானால், ஈறுகளின் காயம் ஆறாம்லிருந்தால், ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டானால் உங்கள் பல் மருத்துவர் அதற்கு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? விட்டமின் குறைபாடு. விட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டினால் இந்த பிரச்சனைகள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things your doctor know by looking in your teeth

These things your Dentist know about you by looking in your teeth,
Story first published: Saturday, November 19, 2016, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter