For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விஷயங்களை உங்கள் அந்தரங்க பகுதியில் செய்யவே கூடாது என தெரியுமா?

|

பெண்களுக்கு பிறப்புறுப்பு அமிலத் தன்மை கொண்டது. இந்த அமிலத்தன்மையால் நல்ல பெக்டீரியாக்கள் பிறப்புறுப்பில் பெருக்குகின்றன. இவை கிருமி களை தொற்ற விடாமல் காக்கும்.

நாம் பொதுவாகவே எல்லாரும் சொல்வது போல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி சோப், திரவ சோப் என்று போட்டு கழுவுகிறோம்.

இன்னும் பல விஷயங்களை அறியாமலே செய்கிறோம். எதெல்லாம் நீங்கள் செய்யக் கூடாது என்பதற்கான விஷயங்கள் இங்கே. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரவ சோப்பினால் சுத்தப்படுத்தாதீர்கள் :

திரவ சோப்பினால் சுத்தப்படுத்தாதீர்கள் :

திரவ சோப், அல்லது சாதரண குளியல் சோப்பில் இருக்கும் வாசனை ரசாயனங்கள் உங்கள் பிறப்புறுப்பை பாதிக்கச் செய்யும்.

அந்த பகுதிகளில் மிகவும் மென்மையான சருமம் இருப்பதால், அந்த ரசாயனங்கள் பாதித்து அலர்ஜி, தொற்றை உருவாக்கும்.

ஆகவே பிறப்புறுக்கென்றே இருக்கும் திரவ சோப், அல்லது குளியல் சோப் உபயோகப்படுத்தாதீர்கள். மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டும் உபயோகிக்கலாம்.

அதிகம் சுத்தப்படுத்தாதீர்கள் :

அதிகம் சுத்தப்படுத்தாதீர்கள் :

இயற்கையாகவே உங்கள் அந்தரங்க பகுதியில் எண்ணெய் சுரக்கும். அது உங்கள் சருமத்தை அழுக்கிலிருந்து பாதுகாக்கும்.

ஆனால் நீங்கள் தேவைக்கு அதிகமாக சுத்தப்படுத்தி, டிஸ்யூ பேப்பரில் துடைத்தால் நீங்கள் எண்ணெய், அமிலத்தன்மை, நல்ல பேக்டீரியாக்களை முற்றிலும் அழித்துவிடுகிறீர்கள்.

இதனால் தொற்று வறட்சி, அரிப்பு உண்டாகும்.

வெதுவெதுப்பான நீரில் கைகளால் உங்கள் பிறப்புறுப்பை கழுவினாலே போதும்.

 பிறப்புறுப்பில் எரிச்சலாகிறதா?

பிறப்புறுப்பில் எரிச்சலாகிறதா?

மேலே சொன்னவற்றால் உங்கள் பிறப்புறுப்பில் வறட்சி உண்டாகலாம். இதனால் எரிச்சல் ஆகிறதா?

அப்படியென்றால் இதற்கு வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தினால் , எரிச்சல் வறட்சியை போக்கச் செய்யலாம். லோஷன் பயன்படுத்துதல் கூடாது. இவை சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும்.

உள்ளாடைகள் :

உள்ளாடைகள் :

நிச்சயம் பருத்தியலான உள்ளாடைகள்தான் உங்கள் சருமத்திற்கு தோழமையை தரும். அது அதிகபப்டியான ஈரப்பதத்தை உறிவதால் தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

வேக்ஸிங்க் முறையில் முடி அகற்றலாமா?

வேக்ஸிங்க் முறையில் முடி அகற்றலாமா?

அந்தரங்க பகுதிகளில் க்ரீம் உபயோகித்து அல்லது வேக்ஸிங்க் முறையில் முடியை அகற்றுவது நல்லதல்ல. இவை அங்கே கடும் பாதிப்புகளை அளித்துவிடும். சரும எரிச்சல் உண்டாகி வீக்கம், தடிப்பு இதன் விளைவாக தொற்றை உண்டாக்கும்.

ஷேவ் செய்யலாமா?

ஷேவ் செய்யலாமா?

ரேஸரில் ஷேவ் செய்து கொள்ளலாம். ஆனால் ரேஸர் சுத்தமாக ஈரமில்லாத பகுதிகளில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

முக்கியமாய் ஷேவிங் க்ரீமில் ரசாயனம், வாசனை இல்லாதவற்றை உபயோகிப்பது நல்லது. ஒவ்வொர் த்டவையும் புது பிளேடை உபயோகிப்பது நல்லது.

டிடர்ஜென்ட் ஆடைகள் :

டிடர்ஜென்ட் ஆடைகள் :

வாசனை மிகுந்த டிடர்ஜென்ட் நுகர நன்றாக இருக்கும். ஆனால் சருமத்திற்கு அறவே அலர்ஜி. ஆகவே உங்கள் உள்ளாடைகளை துவைக்கும்போது அதிக வாசனை மற்றும் ரசாயனங்கள் இல்லாத டிடர்ஜெண்டுகளை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் அவையுமே உங்கள் பிறப்புறுப்பில் பாதிப்புகளை உண்டாக்கும்.

 கிருமி தொற்றை குணப்படுத்த :

கிருமி தொற்றை குணப்படுத்த :

பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் அதிகமாக யோகர்ட் சாப்பிடுங்கள். இவை நல்ல பேக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.

உங்கள் தொற்றை விரைவில் குணமாக்க முடியும். அதி முக்கியமாய் குறைந்தது 3 லிட்டர் நீரை மருந்து போல் குடித்துக் கொண்டிருந்தால், தொற்று ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to stop doing to protect your vagina

Stop Constantly doing these things and protect your vagina
Story first published: Monday, September 26, 2016, 16:39 [IST]
Desktop Bottom Promotion