ஏன் குப்புறப்படுத்து தூங்குறது தப்புன்னு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நிறைய பேர் குப்புறப்படுத்து தூங்குவதைத்தான் விரும்புகிறோம். அவ்வாறு தூங்கக் கூடாது என கேள்விப்பட்டிருப்பீர்கள். வயிற்றிலுள்ள உறுப்புகள் பாதிக்கும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவ்வாறு குப்புறப்படுத்து தூங்குவதால் பெரியவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை என்பது நல்ல விஷயம். ஆனால் முதுகுவலி இருப்பவர்களுக்கு பாதிப்பை தரும் என்று கூறுகிறார்கள்.

Sleeping on stomach is bad for back

முதுகுவலி இருந்தால் நிம்மதியற்ற தூக்கத்தை தரும். எப்படி படுத்தாலும் முதுகுவலி பிரச்சனையை தரும். அவ்வாறு முதுகுவலி இருப்பவரகள் எப்படி தூங்க வேண்டும் எனத் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குப்புறப்படுத்து தூங்குவதால் என்னாகும்?

குப்புறப்படுத்து தூங்குவதால் என்னாகும்?

முதுகு வலி இருப்பவர்கள் தூங்கும்போது முதுகு தன்னுடைய எல்லையிலிருந்து விரிவடைகிறது. இதனால் முதுகில் அதிகம் அழுத்தம் தரப்படுவதால் முதுவலி அசாதரணமாகிறது.

குப்புற படுக்கும்போது என்ன செய்ய வேண்டும் :

குப்புற படுக்கும்போது என்ன செய்ய வேண்டும் :

அவ்வாறு குப்புறப்படுப்பது உங்களுக்கு மிகவும் விருப்பமெனில் வயிற்றிற்கு அடியில் ஒரு தலையணையை வைத்து உறங்க வேண்டும். இதனால் முதுகிற்குஏற்படும் அழுத்தம் தடுக்கப்படுகிறது.

ஒருக்களித்து படுப்பீர்களா?

ஒருக்களித்து படுப்பீர்களா?

ஒருக்களித்து படுப்பீர்களென்றாலும் முதுகிற்கு பாதிப்பு உண்டாகாதபடி கால்களை மடக்கி நெஞ்சிற்கு அருகில் குறுகிக் கொள்ளுங்கள்.

இருகால்களுக்கு இடையே தலையணை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் முதுகிற்கு சிரமம் உண்டாகாமல் தடுக்க முடியும்.

நேராக படுப்பீர்களா?

நேராக படுப்பீர்களா?

நேராக முதுகு படுக்கியயில் படும்படி நீங்கள் படுப்பீர்களென்றால் தலையணையை முட்டிக்கு அடியில் வைக்க வேண்டும். இதனால் வடிவம் மாறாமல் வசதியான சூழ் நிலையை உங்கள் முதுகிற்கு தரமுடியும்.

அப்பவும் முதுகு வலி உள்ளதா?

அப்பவும் முதுகு வலி உள்ளதா?

எப்படி படுத்தாலும் அமர்ந்தாலும் முதுகுவலி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். கவனிக்காவிட்டால் அவை உங்கள் முதுகுத் தண்டுவடத்தை இன்னும் பாதித்து எலும்பு தேய்மானம், டிஸ்க் பிரச்சனையைகூட தந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sleeping on stomach is bad for back

Sleeping on stomach may cause your lumbar region to extend beyond its limits, this leads to back pain
Subscribe Newsletter