உடல் பருமனால் உண்டாகும் 7 வகையான புற்று நோய் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

Written By:
Subscribe to Boldsky

உடல் பருமன்தான் பல வகை மரபுக் கோளாறுகள் உருவாவதற்கு காரணம் என தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதய நோய் தொடங்கி புற்று நோய் வரை பல பாதிப்புகளை உடல் பருமன் உண்டாக்கும்.

பலப்பல மோசமான விளைவுகளை தரும் உடல் பருமனைப் பற்றி சற்றும் சிந்திப்பீர்களா? வாய்க்கு பூட்டு போடாவிட்டால் நோய்கள் நுழைந்துவிடும் என்பதை கண்ட தீனிகளை சாப்பிடும்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

Obesity may cause for 7 types of cancer

தீராத அபாய நோயான புற்று நோய் பாதிப்பு மற்றவர்களை விட உடல் பருமனானவர்களுக்கு தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை மறக்காதீர்கள். எந்த வகையான புற்று நோய் அதிகம் உடல் படுமானவர்களை தாக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிறு :

வயிறு :

வயிற்றுப் புற்று நோய்க்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அதிகப்படியான கொழுப்பு உடல் படிவதால் அவற்றை எரிக்க முடியாமல் பாதிப்பிற்குள்ளாகிறது. உணவுக் குழாய் புற்று நோயும் பெருமளவு தாக்குகிறது.

பித்தப்பை :

பித்தப்பை :

உடல் பருமன் பித்தப்பையில் கற்களை உண்டாக்குகிறது. அதோடு கொழுப்புகளும் பித்தப்பையில் சேர்ந்து பாதிப்பை உருவாகும்.

பித்தப்பை கற்கள் புற்று நோய்க்கு வழிவகுக்கக் கூடும். பித்தப்பை புற்று நோயும் உடல் பருமனால் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கணையம் :

கணையம் :

உடல் பருமனால் இன்சுலின் சுரப்பது குறையும். கணையத்திலுள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க அதிக சிரமம் மேற்கொள்ளும். இதனால் பாதிப்படைந்து புற்று நோய் உருவாக ஏதுவாகிவிடும்.

 கருப்பை :

கருப்பை :

அதிக கொழுப்பு செல்கள் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கச் செய்யும். மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்தால் அவை கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும்.

தைராய்டு :

தைராய்டு :

உடல் பருமனாகும்போது தைராய்டு சுரப்பியும் அளவில் பெரிதாகும் என ஆய்வுகள் கூறுகின்றது.

அளவில் பெரிதாகும்போது செல்களில் மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களால மாறும் அபாயமும் இருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 ரத்தம் :

ரத்தம் :

உடல் பருமன் எலும்பு மஜ்ஜையில் அதிக மைலாய்டு செல்கள் உற்பத்தி செய்கின்றன. அளவுக்கு அதிக ரத்த செல்கள் உருவாகும்போது அவ்ற்றில் திடீர் மாற்றம் உண்டாகி ரத்த புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.

 கல்லீரல் :

கல்லீரல் :

மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் பாதிப்பு போலவே உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் கல்லீரல் பாதிக்கிறது.

கல்லீரல் வீக்கம் உண்டாகி, கொழுப்பு கல்லீரல் உண்டாகி அது புற்று நோயாக மாறும் அபாயம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Obesity may cause for 7 types of cancer

Obesity people are more likely to get these 7 types of cancer
Subscribe Newsletter