மருதாணிப் பூக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்யும்? -அதன் மருத்துவ நன்மைகள்!!

Written By:
Subscribe to Boldsky

மருதாணியை பிடிக்காதவர்கள் குறைவு. என்னதான் மெஹந்தி கோனில் அலங்காரம் செய்தாலும் மருதாணி இலையை அரைத்து கைகளில் இடுவதை விட அழகு அதில் கிடையாது.

கைகளில் பல நாட்கள் மருதாணியின் வாசம் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.

How to use Henna for Insomnia

வெறும் அழகை மட்டும் மருதாணி தர வில்லை. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என தெரியுமா? மருதாணியின் பூக்களும் பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதனை எப்படி நோய்களுக்கு உபயோகப்படுத்துவது? தொடர்ந்து படியுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவலிக்கு, கூந்தல் வளர :

தலைவலிக்கு, கூந்தல் வளர :

சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும். கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும்.

தூக்கம் வர :

தூக்கம் வர :

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

கைகால் வலிக்கு :

கைகால் வலிக்கு :

மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.

 வாத வலிக்கு:

வாத வலிக்கு:

கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

சரும வியாதிகளுக்கு

சரும வியாதிகளுக்கு

காலில் தோன்றக்கூடிய தேமல் மற்றும் கரப்பான் புண்களுக்கு மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும்.எக்ஸிமா என்னும் சரும நோய்க்கும் மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

பாத வெடிப்பு மற்றும் சொத்தை நகத்திற்கு :

பாத வெடிப்பு மற்றும் சொத்தை நகத்திற்கு :

பாத வெடிப்பு இருப்பவர்கள் மருதாணி அரைத்து பற்று போடவும். சொத்தையான நகங்கள் இருந்தால் அவற்றிற்கு மருதாணி அரைத்து இட்டால், நகங்களில் சொத்தை மறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use Henna for Insomnia

health uses of henna and way of using for diseases,
Story first published: Thursday, December 8, 2016, 16:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter