இனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்?

Written By:
Subscribe to Boldsky

குரல் இனிமையாக இருக்கவேண்டுமென எல்லாருக்குமே ஆசை. ஆனால் கரகரப்புடன் ஸ்ருதி விலகி, குரலே சுமார் ரகத்தில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதனை மெருகூட்ட முடியும். .

மிகவும் சுமாரான குரல் உடையவர்கள் வசீகரமான குரலை பெறுவதற்கு சில வைத்திய முறைகள்தான் காரணம். அதோடு சில முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

How to improve your vocal health

உரக்க பேசுவது தொண்டையின் குரல் அளவை பாதிக்கும். கட்டை மாறிவிடும். ஆகவே நன்றாக பாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கத்தி பேசுதலை தவிர்க்க வேண்டும். (பாடுபவர்களின் பேச்சை கேட்டுப்பாருங்கள். ஸ்ப்தமே அதிகம் வராது. )

உங்களுக்கு நல்ல குரல் வளம். ஆனால் தொண்டையில் பிசறல் அதிகம் இருந்தாலும் ராகம், ஸ்வரம் கை கூடாது. இப்படி நல்ல குரல் வளம் பெறவும். பிசிறில்லாத குரல் பெறவும் கீழே உள்ள குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்கள் கை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேரிச்சம் பழம் :

பேரிச்சம் பழம் :

பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் குரலில் இருக்கும் கரகரப்பு போய் இனிமையான குரல் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் :

சின்ன வெங்காயம் :

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் வெண்ணெயில் வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் இனிமையான குரலாக மாறும்

 மாவிலை :

மாவிலை :

முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.

சுக்கு மிளகு திப்பிலி :

சுக்கு மிளகு திப்பிலி :

அதிமதுரம், பனங்கற்கண்டு, திப்பிலி சம அளவு இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் இனிமையான குரல் கிடைக்கும். அதுபோல் வல்லாரைக் கீரையை தினசரி சாப்பிட்டு வர இனிமையான குரல் கிடைக்கும்.

தேன் :

தேன் :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் மலைத்தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் , தொண்டையில் இருக்கும் கரகரப்பு நீங்கி , தடங்கலில்லா இனிமையான குரலை மாறுவது நிஜம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to improve your vocal health

Tips to improve your vocal health and strengthen larynx
Story first published: Friday, December 2, 2016, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter