முதியவர்களின் மூட்டி வலிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்

By: Srinivasan P M
Subscribe to Boldsky

ஒருவருக்கு வயதாக் ஆக மற்ற உடல் உபாதைகளோடு மூட்டி வலியால் அவதியுற நேருகிறது.

எனினும் சில நேரங்களில் வலி மூட்டின் மேல்பகுதியிலும் சில நேரம் மூட்டுகளிலும் அல்லது தசைகள், மூட்டு சவ்வுகள் அல்லது எலும்புகளில் கூட ஏற்படலாம் என்பதால் வலிதோன்றும்.

Home remedies to treat knee pain for old age people

இங்கே உங்களுக்காக சில அருமையான முட்டி வலிக்கான தீர்வுகளைத் தரவிருக்கிறோம். இந்த வீட்டிலேயே செய்யக்கூடிய முறைகள் உங்களுக்கு ஆர்தரிடிஸ் உள்ளிட்ட மற்ற முட்டி தொடர்பான பிரச்சனைகளுக்கும் கூட உதவிகரமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆப்பிள் சிடர் வினிகர் :

1. ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் முட்டி வலிக்கு மிகவும் உதவக்கூடிய ஒன்று. இதில் அதிக அளவில் உள்ள அல்கலைன் முழங்கால் பகுதியில் சேரும் தேவையற்ற நச்சுக்கள் மற்றும் வீக்கங்களை போக்க உதவுகிறது.

இது மூட்டுகளில் எண்ணெய் பசையை தக்கவைக்கவும் அதன் மூலம் நீங்கள் நன்கு நடமாடவும் உதவுகிறது. இரண்டு கப் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இரண்டு கப் ஆப்பிள் சிடர் வினிகரை செர்க்கவும்.

இதை சிறு சிறு அளவுகளில் நாள் முழுவதும் பருகிவரவும். இதைத் தவிர நீங்கள் குளிக்கும் தண்ணீரிலும் இரு கப் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து தினமும் குளித்து வரலாம்.

 2. இஞ்சி

2. இஞ்சி

இஞ்சி முழங்கால் அல்லது முட்டி வலிக்கு ஆறுதலளிப்பதில் சிறந்த பலனைத் தரக்கூடியது. இதில் காணப்படும் இரணம் அகற்றும் தன்மைகள் முழங்கால் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பதோடு, ஆர்தரிடிஸ் வலி, தசை அழற்வு அல்லது காயம் ஆகியவற்றிற்கும் நல்ல பலன் தரக்கூடியது.

இஞ்சி வலியை குணப்படுத்தவும் இரணத்தை குறைக்கவும் வல்லது. ஒரளவு இஞ்சியை எடுத்து 2-3 கப் தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்கவிடவும். இந்த தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிடவும்.

பிறகு ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த ஜிஞ்சர் டீயை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பருகவும். இஞ்சி எண்ணெயைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்வதும் நல்ல பலன் தரும்.

3.மஞ்சள்

3.மஞ்சள்

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டு அதை ஒரு கப் கொதிக்கும் தண்ணீரில் போடவும். அதில் ஒரு ஸ்பூன் தேனை சுவைக்காக சேர்த்து தினமும் பருகி வரலாம். இதைத் தவிர 250 முதல் 500 மில்லிகிராம் காப்சியுல்களாகக் கிடைக்கும் மஞ்சளையும் இந்த முழங்கால் வலிக்கு பயன்படுத்தலாம்.

 4. கடுகெண்ணெய்

4. கடுகெண்ணெய்

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்கள் கடுகெண்ணெயை எடுத்து அதில் சிறிதளவு பூண்டு வில்லைகளை நறுக்கிப் போட்டு பூண்டு நிறம் மாறும் வரை காய்ச்சவும்.

இந்த எண்ணெய் குளிர்ந்தவுடன் அதை முழங்காலில் தேய்க்கவும். பின்னர் ஒரு பிளாஸ்டிக் கேப் கொண்டு காற்று முட்டியில் படாதவாறு முட்டியை மூடவும். இதை ஒரு நாளைக்கு இரு அல்லது மூன்று முறை செய்யலாம்.

 5. எப்சம் உப்பு

5. எப்சம் உப்பு

ஒரு கப் எப்சம் உப்பை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கலக்கவும். பின்னர் இந்த தண்ணீரில் முழங்கால் அல்லது முட்டியை 15 நிமிடங்கள் வரை மூழ்குமாறு வைக்கவும். இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை வலி முழுதும் குறையும் வரை செய்துவரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to treat knee pain for old age people

Home remedies to treat knee pain for old age people
Story first published: Wednesday, December 14, 2016, 18:30 [IST]
Subscribe Newsletter