டெட்டனஸ் ஊசி போட்டால் உண்டாகும் பின்விளைவுகளைப் பற்றி தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

டெட்டனஸ் என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய். க்ளாஸ்ட்ரீடியம் டெட்டனி என்கின்ற பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய். இந்த பேக்டீரியா மிக அசுத்த நிலையில் உருவாகும். விலங்குகளின் மலத்தில், துருபிடித்த இரும்புகளில், என எல்லாவித இடத்திலும் உருவாகும்.

Did you know about side effects of tetanus

இது ஏன் கொடியது?

இந்த கிளாஸ்ட்ரீடியம் டெட்டனி பேக்டீரியா மிகக் குறைந்த காற்றில்தான் உயிர்வாழும். அதனால்தான் அவை உடலுக்குள் தோலின் மூலமாக ஊடுருவி அங்கே வாழ்கின்றது.

Did you know about side effects of tetanus

உடலுக்குள் இந்த பேக்டீரியா சென்றதும். அங்கே டெட்டனோஸ்பாஸம் என்ற நச்சை வெளியிடுகிறது. இது நேரடியாக நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது. இறுதியில் உயிருக்கே உலை வைக்கிறது.

Did you know about side effects of tetanus

பொதுவாக இந்த பாக்டீரியாக்கள், தோலில் உண்டாகும் காயங்கள் வெட்டுக்கள் மூலமாக உள்ளே செல்லும். சிலவகை பேக்டீரியாக்கள் தலையில் அடிபட்டாலோ, அல்லது காதுகளின் மூலமாகவோ பரவும் நியோனேடல் டெட்டனஸ் என்ற தொற்று நோயில் குழந்தைகளுக்கு எளிதில் இந்த பேக்டீரியாக்கள் பரவும்.

Did you know about side effects of tetanus

டெட்டனஸ் ஊசி :

இதற்காகத்தான் பிறந்ததிலிருந்தே ஐந்து வயது வரை குழந்தைகளுக்கும், ஏதாவது அடிபட்டால் பெரியவர்களுக்கும் டெட்டனஸ் ஊசி போடப்படுகிறது.

இந்த ஊசியிலுள்ள மருந்து ரத்தத்தில் கலந்து, அதிக அளவு நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்து, டெட்டனஸ் பாக்டீரியாக்களை உள்ளே வரவிடாமல் காக்கிறது.

Did you know about side effects of tetanus

டெட்டனஸ் ஊசியின் பக்கவிளைவுகள் :

டெட்டனஸ் ஊசி போடுவதால், ஒரு பக்கம் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதால், ஆபத்தில்லை. இருப்பினும் இந்த ஊசியினால் சில பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.

சாதரண பக்கவிளைவுகள்:

சோர்வு, காய்ச்சல், மூட்டு வலி, குமட்டல், தசை வலி, ஆகியவை உண்டாகும்.

சில அரிதான பக்க விளைவுகள் :

நரம்பு தளர்ச்சி, நடுக்கம், வாய் குழறுதல், வீக்கம், அலர்ஜி போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும். ஆனால் அவை அரிதானவை. சிலருக்கு மூச்சு விடுவதற்கும் சிரமமாக இருக்கும்.

ஆனால் இந்த ஊசி எல்லாருக்கும் பக்கவிளைவுகளைத் தரும் என்று சொல்லமுடியாது. இதற்காக ஊசி போடாமல் இருப்பது ஆபத்து. ஆகவே எந்த ஆழமான காயம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.

English summary

Did you know about side effects of tetanus

Did you know about side effects of tetanus
Story first published: Monday, July 11, 2016, 18:00 [IST]
Subscribe Newsletter