Latest Updates
-
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும்
மாவாட்டுவது ஒரு யோகாசனம் என்பது தெரியுமா? தொப்பையை குறைக்கும் சக்கி சலனாசனா !!
தெரிந்தோ தெரியாமலோ அந்த காலப் பெண்கள் வீட்டு வேலை செய்தத்தில் ஒவ்வொரு அர்த்தம் நிறைந்தது.
அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். அதேபோல் அம்மி அரைப்பதால் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.

அது போல் மாவாட்டுவது போன்று சிறந்த பயிற்சி பெண்களுக்கு தேவை. தசை இறுகும். தொப்பையை குறைக்கும். மாதவிடாயை சீர் செய்யும்.
இப்படி ஒவ்வொரு வேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உபாதைகளும் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டது. நோய்களும் பெருகிவிட்டது.

சக்கி சலனாசனா :
உங்கள் முதுகையும் அடிவயிறையும் பலப்படுத்த ஒரு ஆசனம் உள்ளது. அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்கும்.
சக்கி சலனாசனா. சக்கி என்றால் அரைப்பது. சலன என்றால் இயக்குவது. ஒரு சுழற்சியில் வட்ட வடிவமாக அரைப்பது போன்று செய்யபடுவதால் இந்த பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :
முதலில் தரையில் கால் நீட்டி அமருங்கள். நீண்ட ஒரு மூச்சை இழுத்து விட்டபின் கால்களை வி வடிவத்தில் வைக்கவும்.
இப்போது இரு கைகளையும் இணைத்து நேராக வைத்துக் கொள்ளுங்கள். கூன் போடாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

செய்முறை :
பின்னர் உடலை, இடுப்பு வரை வட்ட வடிவத்தில் சுழற்றுங்கள். இடமிருந்து வலமாக ஆட்டுங்கள்.
முன் செல்லும்போது மூச்சை இழுக்க வேண்டும். அப்படியே பின் வரும்போது மூச்சை விட வேண்டும்.

செய்முறை :
இவ்வாறு 10 சுற்று சுற்றுங்கள். மாவு அரைப்பது போல். கையை இணைத்தபடியே சுற்ற வேண்டும். இப்போது அதே போன்று வலமிருந்து இடமாக சுற்றுங்கள்.

பலன்கள் :
நரம்பு பிரச்சனைகளை தடுக்கும். முதுகு, இடுப்பு, அடிவயிறு ஆகியவற்றை பலப்படுத்தும். அடிவயிறு தொப்பையை கரைக்கும். மாதவிலக்கை சீர் செய்யும்.

குறிப்பு :
கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும், தண்டுவட பாதிப்பு இருப்பவர்களும் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.



Click it and Unblock the Notifications
