Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
தாளாத முதுகுவலியா? வீட்டிலேயே இருக்கக் கூடிய இந்த 5 ஆயுர்வேத பொருட்களை யூஸ் பண்ணுங்க !!
முதுகு வலியா? தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனைகளை தந்துவிடும். கீழ்கண்ட சிகிச்சைகளை முயற்சித்துப் பாருங்கள்.
முதுகு வலி அசாதரணமானது. அதனை அனுபவிப்பர்களுக்குதான் அதன் வீரியம் புரியும். எங்கேயும் செல்ல முடியாமல் முடங்க வேண்டிய நிலைமையும் கூட வரும்.
அதிகப்ப்படியான உடல் பருமனால் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு முதுகுவலி உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு. பிரசவத்திற்கு பின் அதிக பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வாறு முதுவலி வருகிறது?
முதுகிலிருந்து முழங்கால் வரை இரு பெரிய நரம்புகள் செல்கின்றன. அவை அங்கிருந்து பாதம் வரை பல கிளைகளாக இந்த நரம்புகள் பிரிந்து செல்கின்றன. இந்த நரம்பில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் அவை கால் வரை பாதித்து இம்சை தருகிறது.
அதனை நிவர்த்தி செய்ய ஆயுர்வேதத்தில் பல அரிய சிகிச்சைகள் உள்ளன. வீட்டிலேயே நீங்கள் முயன்று பாருங்கள்.

புளி மற்றும் உப்பு :
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

பூண்டு மற்றும் நல்லெண்ணெய் :
பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

சுக்கு மற்றும் விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் , சுக்குப் பொடி 1/4 ஸ்பூன்- இவற்றை சூடாக்கி இளஞ்சூட்டில் முதுகில் த்டவினால் நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் மற்றும் உப்பு :
சூடான நல்லெண்ணையில் கப் உப்பை கரைத்து அதனை கொண்டு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
