For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுற்றுப்புற மாசினால் குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினரின் மன நிலை பாதிப்பு-ஓர் ஆய்வு

By Hemalatha
|

மாசு நிறைந்த சுற்றுப் புற சூழ் நிலையால் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜி வயதினரின் மன நிலை பாதிக்கின்றது இப்படி ஒரு ஆய்வினை ஸ்வீடனில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஸ்வீட்டனில் உள்ள யுமியா பல்கலைக்கழகத்தில் மாசுபட்ட சூழ் நிலையில் வாழும் சிறு பிள்ளைகள் மற்றும் டீன் வயதினரின் மன நிலைக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்தது.

Air pollution affects youngsters and children's mental health

ஸ்வீடன் நாட்டின் தலை நகரான, ஸ்டாக்ஹோம் மற்றும் நாட்டிலுள்ள கோட்டாலாந்து, ஸ்கானே போன்ற நகரங்களில் வாழும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

மன நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் டீன் ஏஜ் வயதினர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு அதிக மாசு நிறைந்த சுற்றுச் சூழ் நிலையில் வாழும் பிள்ளைகளிடமும், நல்ல ஆரோக்கியமான சுற்றுப் புற சூழ் நிலைகளில் வாழும் பிள்ளைகளிடமும் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வில் மன நிலை பாதித்து சிகிச்சை எடுத்துவரும் பிள்ளைகளின் உடலில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு அதிகமாய் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு மாசு நிறைந்த சூ நிலைகளில் வாழ்வதுதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

இந்த ஆய்வின் தலைமைஆய்வாளர் 'அன்னா ஔடின்' கூறியது என்னவென்றால், குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதுள்ள பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான மன நிலையில் இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதற்கு மாசு நிறைந்த சுற்றுப் புற சூழல் எதிராக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து வெளி வரும் புகை, சுற்றுப் புற சூழ்நிலைக்கு மிகவும் மோசமன விளைவையே தருகிறது.

ஆகவே சாலை தொடர்பாக ஏற்படும்மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறியுள்ளார்.இந்த ஆய்வுக் கட்டுரை BMJ இதழில் வெளிவந்துள்ளது.

மக்கள் தொகை குறைந்த, வளர்ந்த நாட்டிலேயே மாசுபட்ட காற்றினால் குழந்தை மற்றும் இளைஞர்களுக்கு பிரச்சனை என்றால், உலக அளவில் மக்கள் தொகை பெருக்கத்தில் இரண்டாவது இடம் பெற்ற , இன்னும் வளர வேண்டிய நம் இந்தியாவில் இது இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும். நம் இளைய தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

English summary

Air pollution affects youngsters and children's mental health

Air pollution affects youngsters and children's mental health
Desktop Bottom Promotion