Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
உங்களுக்கு காது வலி இருக்கா? அப்ப பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க... காது வலி குறையுமாம்...!
பூண்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால், காது தொற்று மற்றும் காதுவலியைப் போக்க பூண்டை வீட்டு வைத்தியமாக பயன்படுத்தலாமா? இது பயனுள்ளதாக இருக்குமா? என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?
பெரும்பாலும் நம் இந்திய உணவுகளில் பூண்டை நாம் அடிக்கடி சேர்க்கிறோம். சிலருக்கு பூண்டு வாசனை பிடிக்காது. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற நாம் அனைவரும் விரும்புவோம். பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், அதே நேரத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஆனால், காது நோய்த்தொற்றுகள் மற்றும் காதுவலிகளில் இருந்து நிவாரணம் பெற பூண்டு மற்றும் பூண்டு சொட்டுகளை வீட்டு வைத்தியமாக பயன்படுத்தலாமா என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
காது மற்றும் பூண்டு
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பூண்டு நமக்கு வழங்குகிறது. பூண்டில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்.
மேலும், பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக சிலர் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், பூண்டு காது நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
உண்மையில், பூண்டு பற்களை காதில் வைப்பது தீங்கு விளைவிக்கும் மற்றும் மேலும் சேதம் அல்லது தொற்றுக்கு வழிவகுக்கும். ஆனால் பாரம்பரியமாக, பூண்டு காது தொற்று உட்பட பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
ஜமா பீடியாட்ரிக்ஸ் என்ற அமெரிக்க மருத்துவ சங்கம் ஒரு ஆய்வை வெளியிட்டது. அதில், நடுத்தர காது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு காது வலி உள்ள 103 குழந்தைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூண்டு, ஆலிவ் எண்ணெய், காலெண்டுலா மலர்கள் மற்றும் Hypericum perforatum போன்ற மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை மருத்துவ காது சொட்டுகள் கடைகளில் கிடைக்கும் காது சொட்டுகளைப் போலவே காது வலியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பூண்டு சொட்டுகள் செய்ய குறிப்புகள்
ஆமணக்கு எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் காதுகளை சுத்தம் செய்ய உதவும் இயற்கையான வழிகள் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு காது நோய்த்தொற்றுகளின் சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது முக்கியம். இருப்பினும், காது தொற்று அல்லது காது வலிக்கு பூண்டு சொட்டுகளை முயற்சிக்க விரும்பினால், நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்:
சில பூண்டு பற்களை நசுக்கி, சூடான ஆலிவ் எண்ணெயுடன் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை அரை மணி நேரம் ஊற வைத்து, அதை வடிகட்ட வேண்டும். பின்னர், உங்களை தொந்தரவு செய்யும் காதில் சில சொட்டுகளை விட வேண்டும். வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை இதைச் செய்யுங்கள். மருத்துவ ஆலோசனையோடு இதை செய்வது நல்லது.
குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம்
பொதுவாக மிதமான அளவில் உட்கொள்ளும் போது, பூண்டு பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. நீங்கள் காலையில் பூண்டு தேநீரையும் குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆனால் குழந்தைகளுக்கான அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், பூண்டு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும், குழந்தையின் தோல் அல்லது காதுகளில் பூண்டைப் பயன்படுத்துவதால் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. எந்தவொரு இயற்கை வைத்தியத்தையும் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
காதில் பூண்டைப் பயன்படுத்துவதை யார் தவிர்க்க வேண்டும்?
காது நோய்த்தொற்றுகள் மற்றும் காதுவலிகளைப் போக்க பூண்டு சொட்டுகள் ஒரு இயற்கை தீர்வாக செயல்படும். இருப்பினும், உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது பூண்டுடன் ஒவ்வாமை உள்ளவர்கள் தங்கள் காதுகளில் பூண்டு சொட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
துளையிடப்பட்ட செவிப்பறைகள் அல்லது காது குழாய்கள் உள்ளவர்களும் பூண்டு சொட்டுகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை காதுக்கு எரிச்சல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம். காது நோய்த்தொற்றுக்கான வீட்டு தீர்வாக பூண்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

