Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
உங்க வீட்ல அரிசி, பருப்பு தானியங்களில் வண்டு பிடிக்கிறதா? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
பொதுவாகவே வீடுகளில் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை மொத்தமாக வாங்கி சேமித்து வைக்கும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வது வழகமான ஒன்றுதான்.
ஆனால் இவ்வாறு சேமித்து வைக்கும் பொருட்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் வண்டுகள் மற்றும் புழுக்கள் உருவாக ஆரம்பித்துவிடும். குறிப்பாக அரிசி மற்றும் பருப்பு போன்ற தானியங்களில் இவ்வாறு வண்டுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை கொண்டே எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

காலம் காலமாக விலை வெளியேற்றத்தை சமாளிக்க நாம் கடைபிடிக்கும் நடைமுறைதான் இது என்றாலும் கூட, இதுபோன்று மொத்தமாக சேமித்து வைக்கும் சூழல்களில் பூச்சி, புழு போன்றவை அரிசி, தானியங்கள் மீது படர்ந்து அவற்றை கெட்டுப் போக வைக்கின்றன. புழு, பூச்சி போன்றவற்றை நீக்கிவிட்டு நன்றாக கழுவி அதன் பிறகு அரிசி மற்றும் இதர தானியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், வருமுன் காப்போம் என்ற கூற்றுக்கு ஏற்ப இதை முன்கூட்டியே தடுப்பதற்கான வழிமுறைகளையும் நாம் கையாள முடியும். இதற்கு விஞ்ஞானபூர்வமான தேடல்கள் எதுவும் தேவையில்லை. நம் பாட்டி காலத்து நடைமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.
வேப்பிலை
வேப்பிலை மருத்துவ குணங்கள் குறித்து நாம் அறிந்த விஷயம் தான். உணவுப் பொருட்களை பாதுகாக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். வேப்பிலையை பறித்து நிழல் காய்ச்சலாக உலர்த்தி, அரிசி மற்றும் இதர தானிய வகைகளை சேமித்து வைத்துள்ள கலன்களில் அதனை போட்டு விடலாம். வேப்பிலையின் வாடைக்கு எந்தவித பூச்சி மற்றும் புழு போன்றவை வராமல் தெறித்து ஓடிவிடும்.
முழு மிளகாய் வத்தல்கள்
வர மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் என்று சொல்லக்கூடிய மிளகாய் வத்தல்களை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிறோம். இதை ஒரு கைப்பிடி எடுத்து நாம் முகர்ந்து பார்த்தால் அதன் நெடி நமக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். ஆக இதை தானியங்கள் வைத்துள்ள கலனில் போட்டு வைத்தால் பூச்சிகள் அங்கு தங்காது.
கிராம்பு
கிராம்பு அதிகமாக நம் இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலாவாகும். அதில் அதிகமான மசாலா வாசனை வரும்.. இந்த வாசனை பூச்சிகளை எதிர்த்துப் போராடும் மற்றும் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்க்கும். உங்கள் தானிய கலன்களில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் பூச்சி, வண்டு, புழு வ்ராமல் பாதுகாப்பாக இருக்கும்..
இலை
நம் சமையலுக்கு மணமூட்டவும், சுவையூட்டவும் பிரிஞ்சி இலைகளை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக அசைவ சமையல், பிரியாணி மற்றும் மசாலா தயாரிப்பில் போன்றவற்றில் இந்த பிரிஞ்சி இலை தவறாமல் இடம்பெறுகிறது. இது எந்த அளவுக்கு நமக்கு பிடித்தமானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பூச்சிகளுக்கு எதிரியாகும். ஆகவே வீட்டில் அரிசி, பருப்பு போன்றவற்றை சேமித்து வைத்துள்ள கலன்களில் 4, 5 பிரிஞ்சி இலைகளை போட்டு வைத்தால் பூச்சி மற்றும் புழு போன்றவற்றை வராமல் தடுக்க முடியும்.
அதே போலவே இஞ்சி, பூண்டு அல்லது முழு மஞ்சளை அரிசிப் பாத்திரத்தில் வைக்கலாம். இதன் வாசனைகளுகும் பூச்சிகளுகம் வண்டுகளும் வராது.. ஒருமுறை இந்த டிப்ஸி உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications