Latest Updates
-
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Avani Matha Rasipalan 2026: ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசிக்குள் சூரியன் நுழைவதால் தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் பிறக்கிறது.

மேலும் சொந்த ராசிக்கு சூரியன் செல்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிம்ம ராசியில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இருப்பார். முக்கியமாக இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, வருமானமும் அதிகரிக்கவுள்ளது. இப்போது ஆவணி மாதம் தொழில் ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக உள்ளது என்பதைக் காண்போம்.
சிம்மம்
ஆவணி மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் செல்வாக்குமிக்கதாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இலக்குகளை அடைவீர்கள். முன்பை விட உங்கள் தொழில் வாழ்க்கையும் மேம்படும். வேலையில் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
ஆவணி மாதமானது துலாம் ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளைத் தருவதாக இருக்கும். இம்மாதத்தில் ஆற்றல் நிறைந்து இருப்பீர்கள். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பணியிடத்திலும், வீட்டிலும் உங்களின் செல்வாக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
ஆவணி மாதமானது தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விஷயங்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேலையில் உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். இதன் மூலம் உங்களின் உற்சாகம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
