Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
கோவிட் தொற்றா, H3N2 தொற்றா-ன்னு எப்படி தெரிந்து கொள்வது? இத படிச்சு பாருங்க,,,
வைரஸ் தொற்றுக்களின் அறிகுறிகள் அனைத்துமே பெரும்பாலும் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் தீவிரம் வித்தியாசமானது.
தற்போது இந்தியாவில் வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இதுவரை குறைவாக இருந்த கோவிட் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸின் துணை வகையான H3N2 வைரஸ் தொற்றுகளாலும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, சாதாரண பருவகால வைரஸ் தொற்றுக்களாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி ஒரே நேரத்தில் பலவிதமான வைரஸ் தொற்றுக்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது எந்த வகையான வைரஸ் தொற்று என்பதை அறிவது கடினமாக உள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் தொற்றுக்களின் அறிகுறிகள் அனைத்துமே பெரும்பாலும் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் தீவிரம் வித்தியாசமானது.

இதுவரை இந்தியாவில் 4,623 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவும் பிப்ரவரி மாதம் வரை, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுமார் 955 H1N1 வழக்குகள் பதிவாகியிருந்தன. அதே வேளையில், ஜனவரி முதல் மார்ச் வரை 451 H3N2 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கர்நாடகா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இருவர் இந்த H3N2-வால் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ்களில் இன்ஃப்ளூயன்ஸா வகையைச் சேர்ந்த H1n1 வைரஸ் தொற்று பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் பன்றிகளுக்கு நோயை உண்டாக்கும் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும். பருவகால மாற்றங்களின் போது, காய்ச்சல் மற்றும் சளி போன்றவை ஏற்படுவது சாதாரணம். இவற்றை உண்டாக்கும் வைரஸ் அதிக தீங்கை ஏற்படுத்தாது மற்றும் அது அடிக்கடி வந்து போகும்.
ஏராளமான வைரஸ்கள்
உலகில் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளியை ஏற்படுத்தும் 200-300 வைரஸ்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதில் ஒவ்வொன்றும் ஒரு துணை வகை மற்றும் மாறுபாட்டை கொண்டிருக்கும். அதனால் தான் வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டால், காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் தென்பட்டு, ஒரே மாதிரியாக காணப்படுகின்றன. ஆனால் அதன் தீவிரத்தில் வேறுபாடு இருக்கும்.
வைரஸ்களில் ரினோவைரஸ்கள், RSV, இன்ஃப்ளூயன்ஸா டைப் ஏ, மற்றும் டைப் பி வைரஸ்கள், கோவிட்-19 என்று அழைக்கப்படும் SARS-CoV-2 வைரஸ் சளி, இருமலை உண்டாக்கும் மற்றும் இவை அனைத்துமே வேகமாக தொற்றக்கூடிய வைரஸ்களாக கருதப்படுகின்றன.
அறிகுறிகள்
வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் சளி, இருமலுக்கு என்று சிறப்பு சிகிச்சை எதுவும் தேவையில்லை மற்றும் இவை தானாக சரியாகிவிடும். அதேப் போல் லேசான சுவாச நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சைகள் தேவையில்லை. இருப்பினும் சில நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படும் அளவிற்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்.
இவற்றில் H3N2 வைரஸை எடுத்துக் கொண்டால், அது நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்களைக் கொண்டவர்கள் மற்றும் வயதானவர்களை தொற்றுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட்-19 தொற்றானது சிலருக்கு உயிரைப் பறிக்கும் வகையில் மிகவும் ஆபத்தானது. இவையெல்லாம் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது. வைரஸ் தொற்றுகளின் மிகவும் பொதுவான அறிகுறிகளாவன காய்ச்சல், உடல் வலி, சோர்வு, தலைவலி, இருமல் மற்றும் தொண்டைப் புண் ஆகியவை.
வித்தியாசம்
கோவிட், H3N2 அல்லது ப்ளூ ஆகியவற்றை மருத்துவ ரீதியாக வேறுபடுத்துவது சற்று கடினம். இருப்பினும், சில விஷயங்கள் இந்த தொற்றுக்களை வேறுபடுத்தி காட்ட உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவை பின்வருமாறு:
* H3N2 வைரஸ் தொற்று தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும். அதே சமயம் கோவிட்-19 அறிகுறிகளானது காய்ச்ல் அல்லது மூக்கடைப்புடன் தொடங்கும்.
* ப்ளூ தொற்றுகள் கடுமையான வறட்டு இருமலை உண்டாக்கும். இந்த வறட்டு இருமலானது நீண்ட நாட்கள், அதுவும் 3 வாரங்கள் வரை நீடித்திருக்கும்.
* ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் வலி அல்லது தசை வலியை அதிகம் சந்திக்க நேரிடும்.
முடிவு
எந்த ஒரு வைரஸ் தொற்றுக்களையும் வெறும் அறிகுறிகளை கொண்டு மட்டும் ஒருவரால் கண்டுபிடிக்க முடியாது. பரிசோதனைகளின் மூலமே கண்டறிய முடியும். எனவே, காய்ச்சல், சளி இருந்தால், அதை தற்போதைய காலகட்டத்தில் சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

