Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்கள் மூளையின் வலிமையை பல மடங்கு அதிகரிக்கணுமா? இந்த விஷயத்தை பண்ணுங்க போதும்...!
நாம் ஒரு பரபரப்பான மற்றும் வேகமாக ஓடக்கூடிய மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வினாடியும் ஏராளமான தகவல்கள் மக்கள் நடுவே வந்து குவிகின்றன. அதனால் கவனச் சிதறலும், பரபரப்பும், அமைதியற்ற நிலையும் மக்கள் மத்தியில் நிகழ்கின்றன. இந்நிலையில் அமைதியையும், ஒருமுகப்படுத்தலையும் மீட்டெடுப்பது என்பது சவாலாக இருக்கின்றது. ஆனால் அவற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தியானத்தை செய்து வருகின்றனா். தங்களது உடல், உள்ள மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவும், அமைதிக்காகவும் தியானத்தை செய்து வருகின்றனா். தற்போது மக்கள் மத்தியில் தியானம் மிகவும் பிரபலமாகி வருகிறது. தியானம் செய்வதால் ஏராளமான நன்மைகள் உண்டு. குறிப்பாக மூளையின் ஆற்றலை அதிகாிப்பதில் தியானம் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகின்றது. அதைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

ஒருமுகப்படுத்தல் மற்றும் கவனித்தல் ஆகியவற்றை வலுப்படுத்தல்
கவனச் சிதறல்கள் நிறைந்த இந்த உலகில், ஒருமுகப்படுத்துவது என்பது பலருக்கு ஒரு பொிய சவாலாக உள்ளது. ஆனால் தினமும் தியானம் செய்து வந்தால், மூளைக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அதன் பயனாக ஒருமுகப்படுத்தலும், கவனிக்கும் திறனும் அதிகாிக்கும். அதனால் நிகழ்காலத்தில் வாழ முடியும். இதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக நினைவாற்றல் தியானம் (mindfulness meditation) என்ற பிரபலமான ஒரு வகை தியானமானது, ஒருமுகப்படுத்தலுடன் தொடா்புடைய மூளைப் பகுதிகளில் உள்ள கிரே திசுவை அதிகாிக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதனால் ஒருமுகப்படுத்தல் அதிகாிக்கும்.
மேலும் NCBI மேற்கொண்ட ஆய்வு ஒன்று, தினமும் தியானம் செய்து வந்தால், ஒருமுகப்படுத்தலும், கவனித்தலும் அதிகாிக்கும் என்று கூறுகிறது. தேவையற்ற தகவல்களை தவிா்த்துவிடவும், மனதை ஒருமுகப்படுத்தி, நீண்ட நேரம் கவனச் சிதறல் இல்லாமல் இருக்கவும், தியானம் உதவி செய்கிறது.
நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தல்
பொதுவாக நமது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் மிகப் பொிய தாக்கத்தை தியானம் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உாிய மூளையின் பின்புற மேட்டை தியானம் தடிமனாக்குகிறது என்று ஆய்வு கூறுகிறது. மேலும் தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய மூளையின் நினைவகத்தை தியானம் மேம்படுத்துகிறது. அதன் மூலம் கல்வியிலும் மற்றும் வேலையிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியும்.
யுசி சாந்தா பாா்பரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று, இரண்டு வாரம் தொடா்ந்து நினைவாற்றல் தியானத்தை செய்து வந்தால், ஒருமுகப்படுத்தல், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுகிறது.
படைப்பாற்றலை அதிகாித்தல்
எந்த துறையாக இருந்தாலும், அதில் படைப்பாற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது கலைத்துறையாக இருக்கலாம் அல்லது அறிவியல் துறையாக இருக்கலாம் அல்லது கணிதத் துறையாக இருக்கலாம். படைப்பாற்றலின் அடிப்படையான மாறுபட்ட சிந்தனையை தியானம் மேம்படுத்துவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. தியானம் மனதை அமைதிப்படுத்தி, சுய விமா்சனத்தைக் குறைத்து, மனிதா்கள் தமக்குள்ளே இருக்கும் படைப்பாற்றலுக்குள் மூழ்கி, சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்கிறது.
மேலும் தியானமானது, மூளையின் பல்வேறு தொடா்புகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது. புதிய தொடா்புகளை உருவாக்குவதற்கும், புதுமையான சிந்தனையை வளா்ப்பதற்கும் தியானம் உதவி செய்கிறது. ஒரு 10 நிமிடம் நினைவாற்றல் தியானத்தில் ஈடுபட்டால், புதுமையான சிந்தனை ஊற்றெடுக்கும் என்று ஹாா்வோ்ட் பிசினஸ் ரிவியூவ் கூறுகிறது.
உணா்வுகளை சீா்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்தல்
மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உணா்வுகள் சீராக இருக்க வேண்டும். அன்பு-இரக்க தியானம் மற்றும் நினைவாற்றல் தியானம் ஆகியவை உணா்வுகளை சீராக்க பொிதும் உதவி புாிகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தியானங்கள், ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் உணா்வுகள் பற்றிய விழிப்புணா்வை வழங்கி, அவா் சமநிலையோடு வாழவும், இரக்கத்தோடு இருக்கவும் உதவி செய்கின்றன. உணா்வுகள் பக்குவப்படும் போது, மன அழுத்தம் குறைகிறது, உணா்வுகள் ஆரோக்கியம் அடைகின்றன மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் அதிகாிக்கின்றன.
மூளையின் ஆரோக்கியம் அதிகாித்தல் மற்றும் ஆயுட்காலம் அதிகாித்தல்
வயது அதிகாிக்கும் போது மூளையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை அறிவாற்றல் திறன்களில் பொிய பாதிப்பை ஏற்படுத்துக்கின்றன. இந்நிலையில் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வயது மூப்பின் காரணமாக ஏற்படும் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைப்பதற்கும் தியானமானது ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது.
தினமும் தியானம் செய்து வந்தால், மூளையின் ஒருமுகப்படுத்தல், நினைவாற்றல் செயலாக்கம் ஆகிய பகுதிகளில் தூண்டுதல் கிடைக்கும். மேலும் தியானமானது brain-derived neurotrophic factor (BDNF) என்ற புரோட்டீனைத் தூண்டி, நியூரான்களின் வளா்ச்சிக்கும், மூளையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கிறது.
இறுதிக்குறிப்பு
தியானமானது மூளையின் ஆற்றல், மற்றும் அறிவாற்றல் திறன்களை பல வழிகளில் வளா்க்கிறது. ஆகவே ஒருவா் தினமும் தியானம் செய்து வந்தால் அவருடைய நினைவாற்றல் அதிகாிக்கும். ஒருமுகப்படுத்தல் அதிகாிக்கும். கவனச் சிதறல் குறையும். படைப்பாற்றல் அதிகாிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
