Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா? அப்ப இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக கண்களை நெருங்கும் பொருட்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் கண்களை சிமிட்டும் முறை ஒருவரது ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 17 முறை கண்களை சிமிட்டுவார்கள். ஆனால் ஒருவர் கண்களை இந்த அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிமிட்டினால், உடலில் ஏதோ சரியில்லை என்று அர்த்தம் மற்றும் இது உடலில் உள்ள தீவிர ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பர்கின்சன் நோய்
அமெரிக்க பர்கின்சன் நோய் சங்கத்தின் கூற்றுப்படி, ஆய்வு ஒன்றில் பர்கின்சர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண் சிமிட்டலை கவனித்ததில், அவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முறை குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் நாம் கண் சிமிட்டும் வேகமானது மூளையில் டோபமைனின் செயல்பாட்டை எதிரொலிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதில் டோபனைன் அளவு குறைவாக இருக்கும் போது, கண்களை சிமிட்டும் வேகம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முக்கியமாக பார்கின்சன் நோயின் ஒரு தனித்துவமான அம்சம் டோபமைன்-உற்பத்தி செய்யும் நரம்பு செல்களை இழப்பதாகும். இந்த நோய் இருந்தால் மெதுவாக கண்களை சிமிட்டுவது மற்றும் கை நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
மேலும் யாரோ ஒருவர் உங்களை கண்காணிப்பது போன்று உணர்கிறீர்களா? இந்த விசித்திரமான அறிகுறியும் பர்கின்சன் நோயின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக பர்கின்சன் நோயானது 60 வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் சிலருக்கு 50 வயதிற்கு முன்பே ஏற்படலாம்.
எனவே நீங்கள் வழக்கத்தை விட மிகவும் மெதுவாக கண்களை சிமிட்டினால் மற்றும் உங்களின் இயக்கங்களில் மந்தநிலை மற்றும் எந்த ஒரு செயலிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போனால் பர்கின்சன் நோய் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பர்கின்சன் நோயால் அமெரிக்காவில் மட்டும் சுமார் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேவ்ஸ் நோய்
கண்களை குறைவாக சிமிட்டுவது கிரேவ்ஸ் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியினால் ஏற்படுகிறது. இந்த கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் கைகள் அல்லது விரல்களில் லேசான நடுக்கம், எடை இழப்பு, வீங்கிய தைராய்டு சுரப்பி, கண்கள் மற்றும் தாடைகளில் வீக்கம், தாடைகள் அல்லது கால்களின் நிறம் சிவந்து காணப்படும்.
இந்த கிரேவ்ஸ் நோயானது எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பெரும்பாலும் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே பொதுவானது. இந்த கிரேவ்ஸ் நிலையானது ஒவ்வொரு 100 அமெரிக்கர்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பாதி வழக்குகளில், இந்நோய் கண்களை பாதிக்கிறது. அதுவும் கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் இமைகள் பெரும்பாலும் விரிவடைந்து காணப்படும். மேலும் கண் இமைகள் இறுக்கமாக மாறுவதால், கண்களை குறைவாக சிமிட்ட வழிவகுக்குகிறது.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களை விட சற்று குறைவாக கண்களை சிமிட்டுவது தெரிய வந்தது. அதுவும் ஒரு நிமிடத்திற்கு 13 முறை மட்டுமே கண்களை சிமிட்டியுள்ளனர். ஆனால் ஆரோக்கியமான பங்கேற்பாளர்களின் சராசரி ஒரு நிமிடத்திற்கு 20 கண் சிமிட்டல்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் கண் வறட்சி
மறுபுறம், அடிக்கடி கண் சிமிட்டுவது சோர்வுக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர கண் வறட்சியை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது அடிக்கடி கண்களை சிமிட்ட நேரிடும். ஒருவருக்கு கண் வறட்சியானது பல காரணங்களால் ஏற்படலாம். அதில் ஒன்று தான் Sjogren's syndrome - ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோயெதிர்ப்பு மண்டலமானது சுரப்பிகளை தாக்கி கண்ணீரையும், உமிழ்நீரையும் உருவாக்கும்.
Sjogren's syndrome நோயால் கண்கள் வறட்சியடையும் போது, அது அரிப்பு அல்லது எரிச்சலுக்கு வழிவகுத்து, அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டும். சில சமயங்களில் அழற்சி கூட அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டலாம். அதுமட்டுமின்றி, அடிக்கடி கண்களை சிமிட்டுவது டூரெட் நோய்க்குறியுடன் தொடர்புடைய ஒரு மோட்டார் நடுக்கமாகவும் (Motor tics) இருக்கலாம்.
டூரெட் நடுக்கங்கள் ஒரு நாளைக்கு பல முறை, ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கூட நிகழலாம். பொதுவாக நடுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் உருவாகின்றன, ஆனால் காலப்போக்கில் குறைய முனைகின்றன. பலர் இளமைப் பருவத்தில் அவற்றிலிருந்து வெளியேறுகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications