Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
மாரடைப்பை தூண்டும் கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப மதிய உணவுக்கு பின் இந்த ஜூஸை குடிங்க... மாரடைப்பு 90% வராது
High Cholesterol Lowering Diet Tips In Tamil: தற்போது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் உலகளவில் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். எப்போது ஒருவரது உடலில் LDL கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கிறதோ, அப்போது அது இதய நோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சொல்லப்போனால் சமீப காலமாக நிறைய பேரின் மரணத்திற்கு இந்த உயர் கொலஸ்ட்ரால் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்க காரணம் நாம் உண்ணும் உணவுகளும், நமது வாழ்க்கை முறைகளும் தான். நாம் உண்ணும் ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ராலானது ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

இப்படியான உணவுகளை ஒருவர் தினமும் உட்கொண்டு வரும் போது, அந்நபரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் தேங்க தொடங்கி, நாளடைவில் அந்த கொலஸ்ட்ரால் இரத்த குழாய்களில் படித்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடுகிறது.
எனவே குறிப்பிட்ட வயதை எட்டியலும் ஒவ்வொருவரும் தங்களின் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆரம்பத்திலேயே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கண்டுபிடித்து, அதற்கேற்ப வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.
உடலில் இருக்கும் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க ஒருசில ஜூஸ்கள் பெரிதும் உதவி புரிகின்றன. அந்த ஜூஸ்களை ஒருவர் தினமும் மதியம் 2 மணிக்கு மேல் அல்லது மதிய உணவிற்கு பின் குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே உடலில் இருந்து கரைத்து வெளியேற்றிவிடலாம். இப்போது அந்த ஜூஸ்கள் எவையென்பதைக் காண்போம்.
1. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் நைட்ரேட்டுகளும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியை எதிர்த்து போராடுகின்றன. இப்படிப்பட்ட பீட்ரூட்டை மதிய உணவிற்கு பின் ஜூஸாக எடுத்து வந்தால், அது இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலும் கரைந்து வெளியேறும்.
2. மாதுளை ஜூஸ்
ஜூஸ்களில் நிறைய பேர் விரும்பி குடிக்கக்கூடிய ஜூஸ் தான் மாதுளை ஜூஸ். இந்த ஜூஸ் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டுள்ளது. இதனால் இந்த ஜூஸை குடித்து வரும் போது, அது உயர் கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கும் காரணிகளான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சிகளை குறைக்க உதவுகின்றன. ஆய்வுகளிலும் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வரும் போது, அது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது தெரிய வந்தது. அதுவும் இந்த ஜூஸை மதிய உணவிற்கு பின் குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
3. க்ரீன் ஆப்பிள் மற்றும் இஞ்சி ஜூஸ்
க்ரீன் ஆப்பிள் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. க்ரீன் ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் அதிகம் ருப்பதால், அவை கொலஸ்ட்ராலை குடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். அதேப் போல் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் அதிகரிக்கின்றன. சிறப்பான பலனைப் பெற இந்த ஜூஸை மதிய வேளையில் குடித்து வர வேண்டும்.
4. ஆரஞ்சு மற்றும் கேரட் ஜூஸ்
ஆரஞ்சுடன் கேரட்டை சேர்த்து ஜூஸ் தயாரிக்கும் போது, அவற்றில் உள்ள வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதுவும் ஆரஞ்சு பழத்தில் உள்ள ப்ளேவோனாய்டுகள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. அதேப் போல் கேரட்டில் நள்ள சத்துக்கள், கண்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. எனவே சிறப்பான பலனைப் பெற ஆரஞ்சு மற்றும் கேரட் கொண்டு தயாரிக்கும் ஜூஸை மதிய உணவிற்கு பின் குடித்து வாருங்கள்.
5. பசலைக்கீரை மற்றும் அன்னாசி ஜூஸ்
அன்னாசிப்பழம் நல்ல சுவையுடன், ஆளை மயக்கும் மணத்தைக் கொண்டது. இந்த அன்னாசிப்பழத்துடன் சிறிது பசலைக்கீரையை சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்து குடித்து வரும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை திறம்பட கரைப்பதோடு, செரிமான நொதிகளை ஊக்குவிக்கின்றன மற்றும் உடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. இப்படிப்பட்ட ஜூஸை குடிக்க சிறந்த நேரம் மதிய உணவிற்கு பின் தான். எனவே மதிய உணவிற்கு பின் இந்த ஜூஸை குடித்து மாரடைப்பின் அபாயத்தைத் தடுத்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications