For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க... எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் பஞ்சா பறந்துடும்...

  By Gnaana
  |

  ஆபிசில் வேலை ஜாஸ்தி, அதோடு பேங்க், வசூல் அலைச்சல் எல்லாம் சேர்ந்து, கொளுத்துற வெயிலில் அலைஞ்சு, காய்ஞ்சு போய் வீட்டுக்கு வந்தால், உடம்பெல்லாம் வலி, கை காலை அசைக்க முடியலே, என்று புலம்புவோரை நாம் பார்த்திருப்போம்.

  health

  நன்றாகத்தான் இருந்தார், திடீரென பக்க வாதம் வந்துவிட்டது என்று சிலர் சொல்லக்கேட்டிருப்போம். இதற்கெல்லாம் என்ன காரணம்?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மூட்டுவலி

  மூட்டுவலி

  உடம்பை சீராக பராமரிக்கும் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தன்மைகளில், வாதம் எனும் காற்று உடலில் கெட்டு போயிருக்கிறது என்பதன் பொருளே, மேற்கண்ட பாதிப்புகள் யாவும். இதை எப்படி களைந்து, உடல் இன்னல்களைத் தீர்ப்பது? கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் அதிக நேரம் உலாவுதல், இரவில் கண்விழித்தல், அளவுக்கு மீறிய கவலை, அதிக வேலை, மிகையான உடலுறவு, இயல்பான இயற்கை உபாதைகளைத் தடைசெய்வது மற்றும் மலச்சிக்கல் போன்ற காரணங்களால், உடலில் நச்சுக்காற்று அதிகமாகி, மூட்டுகளில் வலி ஏற்படுகின்றன.இதுவே ஆர்த்தரைடிஸ் எனும் தசை மற்றும் எலும்பு வலிகளுக்கு காரணமாகி, கை கால், கழுத்து மற்றும் இடுப்பில் வலி எடுத்து, உடல் இயக்கத்தை பாதிக்கிறது.

  வாதநாராயண மூலிகை

  வாதநாராயண மூலிகை

  உடல் நரம்புகளை வலுவாக்கி, வீக்கங்களைக் குறைத்து, மூட்டு வலிகளுக்கு மட்டுமன்றி, சுவாச பாதிப்புகள் மற்றும் இரத்த சர்க்கரை பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது, வாத நாராயணன் மூலிகை. அழகிய சிவந்த மலர்களையும், புளிய இலைகள் போன்ற இலைகளையும் உடைய மருத்துவப்பலன்கள்மிக்க வாத நாராயணன் மரம், தமிழகத்தில் வீடுகளின் தோட்டங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் அழகுக்காகவும், நிழலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

  மணல் சார்ந்த நிலங்களிலும், செம்மண் பூமியிலும் செழித்து, நாற்பதடி உயரம் வரை வளரும் வாத நாராயணன் மரம், வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு பலன்தரும் அரிய மூலிகை மரமாகும். நீண்ட மலர்களும் பட்டையான காய்களும் நிறைந்து, ஆதி நாராயணன், வாதமடக்கி, வாதரசு என்று வேறு பெயர்களிலும் விளங்கும் வாத நாராயணன் மரங்களின் இலைகள், பட்டை மற்றும் வேர்கள் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை.

  மலச்சிக்கலால் உடலில் சேரும் நச்சுவாயுவே, வாத பாதிப்புகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது. உடலில் மலச்சிக்கலை சரிசெய்தாலே, பெருமளவு வியாதிகள் விலகிவிடும். மலச்சிக்கலைப் போக்கும், சிறந்த நிவாரணியாக விளங்குகிறது, வாத நாராயணன் இலைகள்.

  வாத நாராயணா குடிநீர்

  வாத நாராயணா குடிநீர்

  வாத நாராயணா இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, வடிகட்டி குடித்துவந்தால், நச்சு வாயு, வாத பாதிப்பு, வயிற்று வலி தீரும். மலச்சிக்கல் குணமாகும். கோடை உடல் சோர்வு விலக்கும். குறிப்பாக, வெயில் காலத்தில் இந்த வாதநாராயண குடிநீரை குடித்து வந்தால் உடல் சூடு குறையும். வெயிலால் உடலில் இருந்து ஆற்றல் வெளியேறாமல் காக்கும். அசதியைப் போக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

  வாத நாராயண இலைத் துவையல்

  வாத நாராயண இலைத் துவையல்

  வாத நாராயணா இலைகளை, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழைகள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மற்றும் இந்துப்பு சேர்த்து, அம்மியில் வைத்து துவையல்போல அரைத்து, மதிய உணவில் கலந்து சாப்பிட, மலம் இளகி, உடலில் தங்கிய நச்சு வாயுக்கள் வயிற்றுப்போக்குடன் வெளியேறும். மேலும் மலச்சிக்கலைத் தீர்க்கும்.

  உடல்வலி

  உடல்வலி

  அதிக அலைச்சல் மற்றும் வேலைப்பளுவால் உடலில் ஏற்பட்ட வலிகளையும் தீர்க்கும். கைகால் குடைச்சல் போன்ற வாத பாதிப்புகளையும் விலக்கும். வாத நாராயணா துவையலைப்போல, அடை, தோசை போன்ற சிற்றுண்டி வகைகளில் வாத நாராயணா இலைகளை சேர்த்து, சாப்பிட, உடலிலுள்ள நச்சு வாயுக்கள் வெளியேறி, உடல் வலிகள் தீர்ந்து, உடல் நலம் பெறும்.

  வாத நாராயண தைலம்

  வாத நாராயண தைலம்

  வாத நாராயணா இலைகளை சாறெடுத்து, அதில் விளக்கெண்ணை, திரிகடுகு, வெண்கடுகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு காய்ச்சி, இலைச்சாறு, எண்ணையுடன் கலந்து திரண்டுவரும்போது, ஆறவைத்து, இந்த மருந்தை, இரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடிக்க, உடனே, வயிற்றுப்போக்கு ஏற்படும். மலச்சிக்கல் தீர்ந்து, கைகால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, நரம்புத்தளர்ச்சி போன்ற வாத பாதிப்புகளும் தீரும்.

  இளைப்பு, குளிர் ஜுரம் போன்றவையும் சரியாகும். இரத்த சர்க்கரை பாதிப்புகளும் தீரும்.

  உடலில் தீராத வலிகளுக்கு, வாத நாராயணா இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, இளஞ்சூட்டில், உடலில் வலி தோன்றிய இடங்களில் நீரை ஊற்றி, மென்மையாக மசாஜ் செய்துவர, வலிகள் உடனே, தீர்ந்துவிடும். வாயுப்பிடிப்புக்கும் இந்தநீர் பயன்தரும்.

  வாத நாராயணா இரசம்

  வாத நாராயணா இரசம்

  வாத நாராயணா இலைகள், விழுதியிலை, மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை விளக்கெண்ணை விட்டு தாளித்து, இரசம் போல செய்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, கை கால் குடைச்சல், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் தீரும்.

  வாத நாராயணா பொரியல்.

  வாத நாராயணா பொரியல்.

  வாத நாராயண இலைகள், இலச்சை கெட்ட கீரை மற்றும் முருங்கைக்கீரை இவற்றை எண்ணையில் வதக்கி, கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து, உப்பிட்டு பொரியல் செய்து,வாரமிருமுறை சாப்பிட்டுவர, உடலில் உள்ள நச்சு வாயு, நச்சு நீர் வெளியேறி, மலச்சிக்கல் குணமாகும். இதுவே, வாத வலிகள், சுளுக்கு மற்றும் மூட்டு பாதிப்புகளுக்கு நிவாரணம்தரும்.

  உடல் வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு

  உடல் வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு

  உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு, விளக்கெண்ணையில் வாத நாராயணா இலைகளை வதக்கி, அதை கட்டிகள், வீக்கத்தில் தடவிவர, அவை விரைவில் குணமாகும்.

  கோடைக்கால வேனல் கட்டிகள் வியர்க்குரு, சொறி மற்றும் சிரங்கைப் போக்கும்.

  வாத நாராயணா இலைகளுடன், குப்பைமேனி இலைகள் மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து, வேனல் கட்டிகள், வியர்க்குரு, சொறி சிரங்குகள் மேல் தடவி, சற்றுநேரம் ஊறியபின்னர், பச்சைதண்ணீரில் குளித்துவர, உடல் வேதனைகள் தீர்ந்து, உடலும் மனமும் புத்துணர்வாகும். வாத நாராயணா இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, இளஞ்சூட்டில் அந்த நீரில் குளித்துவர, கடுமையான உடல் வலிகளும் தீர்ந்து, உடல் சுறுசுறுப்பாகும்.

  ரத்த சர்க்கரை

  ரத்த சர்க்கரை

  இரத்த சர்க்கரை பாதிப்பைப் போக்கும் ஆறு்றல் கொண்டது. வாத நாராயணா இலைகளை காயவைத்து, அரைத்து தூளாக்கி, அதில் அரை ஸ்பூன் அளவு தூளை, தினமும் இருவேளை, காய்ச்சிய நீரில் கலந்து பருகிவர, இரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பாகும்.

  கால் வலி

  கால் வலி

  வாத நாராயணா கொழுந்தை அரைத்து, விரலில் வைத்து கட்ட, நகச்சுத்தி தீரும்.

  இரத்தப் போக்கை தடுக்கும். வாத நாராயணா வேரை பொடித்து, அதில் தயிரை கலந்து குடிக்க, இரத்தபேதி விலகும். அனைத்து வாத வியாதிகளையும் போக்கும் வாத நாசினி தைலம். வாத நாராயணா இலைச்சாற்றுடன், வெற்றிலை, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இலைச்சாறுகள், திரிகடுகு, மஞ்சள், பெருஞ்சீரகம், ஜீரகம், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்பெண்ணை இவற்றைத் தைலப்பதத்தில் காய்ச்சி, அதில் எருக்கம்பூக்களை இட்டு, நன்கு காய்ச்சி, ஆறவைத்து சேகரித்து வைத்துக்கொள்ளவும்.

  இந்த தைலத்தை முகத்தில் தடவிவர, பக்க வாத பாதிப்பால் உடலில் ஏற்பட்ட முக பாதிப்புகள், பேச்சு, பார்வை கோளாறுகள் குணமாகும். நரம்பு பாதிப்புகள் விலகும்.

  இரவில் பருகிவர, காலையில் மலம் சீராக வெளியேறும். கெண்டைக்கால் வலி, கை கால் உடல் வலி, மூட்டு வீக்கம், நரம்புத் தளர்ச்சி, உடல் வேதனை தீர்ந்துவிடும்.

  கோடைக்காலத்தில், வாத நாராயணா இலைகளை சமையலில் சேர்த்துண்ண, மலச்சிக்கல் விலகி, உடல் சூடு தணிந்து, உடல் இயல்பாகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Vaadha Naaraayanaa Tree - Tiger Beam, White Gulmohar, for Stroke and arthritis relief

  White gulmohar or Vadanarayanan keerai belongs to tree category. The ayurvedic and medicinal values in this variety is uncountable.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more