Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை!
இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும்
ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை. ஒரு ஆணுக்கு விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆணுக்கு திருமணமாகி, உடலுறவில் மனைவியை திருப்திபடுத்த இயலாத சூழலில், குழந்தை பெற்றுக்கொள்ள நிலையில் தான் தெரியவரும். முன்கூட்டியே இதை அறிய வேண்டுமானால், உடல் நிலையை, பிறப்புறுப்பின் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வந்தாலே, பிறப்புறுப்பு மற்றும் அதன் வெளிப்பாடுகளில் உள்ள மாற்றங்களை ஓரளவு அறிய இயலும்.

மிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது என்ற கேள்வி அனைத்து ஆண்களுக்கும் தோன்றும்; உங்கள் கேள்விக்கான பதிலை அளிக்க, இந்த பதிப்பினை சமர்ப்பிக்கிறோம். படித்து பயனடையுங்கள்!

என்ன இலை!
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை என்ன தெரியுமா? அது தான் கொய்யா இலை. இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும் உயர்ந்து இருப்பதை காணலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இந்த இலைகள் இது தவிர பற்பல நன்மைகளை மனித உடலுக்கு அளிக்கின்றன.

வேறு பயன்கள்
கொய்யா இலைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இந்த இலைகளை தேயிலைத்தூள் போன்று தயார் செய்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, சரியான எடையில் நல்ல கொழுப்பை மட்டும் உடலில் தங்க வைத்து, உடலினை சீராக இயங்க வைக்க உதவும்.
கொய்யா இலைகளை சாறு போன்று தயாரித்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊற வைத்து அலசி வந்தால், பேன் தொல்லையை முற்றிலுமாக போக்க உதவும். கொய்யா இலைகளை பொடி செய்து, உணவிலோ அல்லது தேநீர் போன்றோ தயாரித்து உட்கொண்டால், அது செரிமான பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, வயிறை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
அடுத்ததாக, கொய்யா இலையை கொண்டு தேநீர் தயாரிப்பது எப்படி என்று படித்தறிவோம் வாருங்கள்!

கொய்யா இலை தேநீர்
தேவையான பொருட்கள்:
கொய்யா இலையை தயாரிக்க சுத்தமான கொய்யா இலைகள் 5, சுத்தமான தேனினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; மேலும் 2 ஏலக்காய்களை பொடி செய்தோ அல்லது தட்டிப்போட்டோ உபயோகித்துக் கொள்ளலாம்.
செய்முறை:
எடுத்து வைத்த சுத்தமான கொய்யா இலைகளை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடி செய்தோ நீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்; பின் அந்த நீரினை நன்றாக வடிகட்டி,அதில் தேனை தேவையான அளவு சேர்த்து குடிக்கலாம்; கொய்யா இலையின் வாசம் குறைய ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை தட்டி டீயில் சேர்த்து பருகலாம்.
கொய்யா இலைகளினால் செய்த தேநீரை தொடர்ந்து பருகி வருவது, புற்றுநோய், பாக்டீரியா தொந்தரவுகள், எரிச்சல், அரிப்பு போன்றவற்றை உடலில் ஏற்படாமல் தடுக்க உதவும்; மேலும் வயிற்றுப்போக்கு, டையேரியா, காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை ஏற்படாமல் அல்லது இது போன்ற நோய்களை குணப்படுத்த உதவும்.

வைட்டமின்கள்
கொய்யாவில் போலிக் அமிலம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, காப்பர், மாங்கனீஸ் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள், அமில சத்துக்கள் நிறைந்து உள்ளன. இந்தப் பழத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும், போலிக் அமிலமும் விந்தணு ஆற்றலை, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களை அளித்து உடலை பலப்படுத்துவதால், நோய் எதிப்பு சக்தி அதிகரித்து தேகம் ஆரோக்கியமானதாக மாறிவிடுகிறது.

விந்தணு குறைபாடு
விந்தணு குறைபாடு என்பது உடலில் ஏற்படும் பிற குறைபாடுகளை போன்ற குணப்படுத்தக் கூடிய ஒரு உடல் குறைபாடே! இதை ஒரு பெரிய இழப்பாக எண்ணி, நான் ஆண்மகன் அல்ல என்று முட்டாள்தனமாக எண்ணி, உங்கள் மனதை நீங்களே குழப்பி, தேவையற்ற மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல், தைரியமாக செயல்படுங்கள். விந்தணு குரைவாக இருந்தால் என்ன, இப்பொழுது தான் அதை அதிகரிக்கும் வழி என்ன என்று தெரிந்துவிட்டதே! இந்த வழியை அல்லது மருத்துவ முறைகளை, நல்ல ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பற்றி மேற்கொண்டு வளமான வாழ்வு வாழவும்.



Click it and Unblock the Notifications